மற்றவர்களை முழுமையாக நம்புவதுதான் என் பலவீனம்… தனுஷ்

மற்றவர்களை முழுமையாக நம்புவதுதான் என் பலவீனம்… தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushதனுஷ் கதை எழுதி தயாரித்து நடித்துள்ள விஐபி2 படம் இந்த ஜீலை மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய பலவீனம் எது? வெற்றிமாறன் நெருக்கம் பற்றிய கேள்விகளுக்கு தன் சமீபத்திய பேட்டியில் பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துக் கொண்டிருந்தார் வெற்றிமாறன்.

அது ஒரு கனாக்காலம் சூட்டிங்போது ஒரு நாள் இரவில் கதை சொல்ல வந்தார் வெற்றிமாறன்.

கதை கேட்ட உடனே அவரிடம் நான் சொன்ன ஒரே வார்த்தை நிச்சயமாக படம் பண்னுவோம் என்பதுதான்.

அவர் நிச்சயம் உலகளவில் ஒரு பெரிய கலைஞராக வருவேன் என அடுத்த நிமிடமே என் நண்பர்களை அழைத்துச் சொன்னேன்.

பொல்லாதவன் படம் செய்தோம். அதன்பின் மற்ற பட வாய்ப்பு இருந்தும் மீண்டும் எனக்காக ஆடுகளம் படம் செய்தார்.

இன்றளவும் எங்களுடைய நட்பு தொடர்கிறது. நான் பெரிதும் நம்பும் ஓரிரு நபர்களில் அவர் முக்கியமானவர்.

எனக்கு வெற்றி தோல்வி எதுவந்தாலும் நான் முதலில் செல்லும் இடம் என் அம்மாவை தேடிதான். அவருக்கு பிறகு என் குழந்தைகள்தான்.

என்னுடைய பலவீனமே நம்பிக்கைதான். என்னுடன் பழகுபவர்களை நிறைய நம்பிவிடுவேன்.

அவர்கள் என்னை ஏமாற்றினாலும் அதை மாற்றிக் கொள்ளமாட்டேன்.

அவர்கள் என்னை ஏமாற்றுவதற்கு நான் என்ன செய்ய முடியும்.” என்றார்.

Confidence is my weekness says Actor Dhanush

சினிமா மீது வரி சுமை; தமிழக அரசுக்கு ரஜினி வேண்டுகோள்

சினிமா மீது வரி சுமை; தமிழக அரசுக்கு ரஜினி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini requests TN government to consider Tamil film industrys pleaஇந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக சினிமா துறை மீது அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி 28% மற்றும் தமிழக அரசின் வரி 30% என மொத்தம் 58% வரியை திரைத்துறையினர் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இன்றோடு 3வது நாளாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

எனவே முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதுவரை திரைத்துறைக்கு சாதகமான முடிவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ரஜினி போன்ற மதிப்புமிக்க கலைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் ரஜினி.

அதில்… “தமிழ் சினிமா துறையில் பணிபுரியும் லட்சக்ணக்கவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்கும் படி தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini requests TN government to consider Tamil film industrys plea

Rajinikanth‏Verified account @superstarrajini
Keeping in mind the livelihood of Lakhs of people in the tamil film industry, I sincerely request the TN GOVT to seriously consider our plea

 

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா விவாகரத்து பெற்றார்

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா விவாகரத்து பெற்றார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajnikanths 2nd daughter Soundarya gets divorcedசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-லதா தம்பதியரின் இரண்டாவது மகள் சௌந்தர்யா.

இவருக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற ஒரு ஆண் குழந்தை தற்போது உள்ளது.

திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட கணவரை பிரிய சௌந்தர்யா முடிவெடுத்தார்.

எனவே இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்த இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருந்தனர்.

அதன்படி கடந்த மாதம் 23ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர்.

தங்களின் பிரிந்து வாழும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

மனுவை ஏற்ற சென்னை குடும்பல நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

Rajnikanths 2nd daughter Soundarya gets divorced

soundarya rajini wedding

நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு; தாடி பாலாஜி தலைமறைவு

நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு; தாடி பாலாஜி தலைமறைவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor balaji wife nithya8 ஆண்டுகளுக்கு முன்பு, நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார் காமெடி நடிகர் தாடி பாலாஜி.

தற்போது இவர்களுக்கு போஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்டது.

மேலும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தாக்குவதாகவும் நித்யா தெரிவித்து, போலீஸ் கமிஷ்னரிடம் நித்யா புகார் கொடுத்திருந்தார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இதனைத்தொடர்ந்து காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நித்யாவின் புகார் மாதவரம் போலீசுக்கு மாற்றப்பட்டது.

இதன்படி, பாலாஜி மீது, பெண் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக திட்டுதல், தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்கியது என 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்களாம்.

இதனையறிந்த தாடி பாலாஜி தலைமறைவாகிவிட்டாராம். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Four Complaints registered against Balaji Actor Escape

balaji wife nithya case

முதன்முறையாக அஜித் படத்தை வாங்க காத்திருக்கும் விஜய்

முதன்முறையாக அஜித் படத்தை வாங்க காத்திருக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay tv new logoஅஜித் நடித்து வரும் விவேகம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கேரளாவில் ரூ. 4 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளதாக பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை பெற கடும் போட்டி எழுந்துள்ளதாம்.

இதில் பெருந்தொகை கொடுக்க காத்திருக்கிறதாம் விஜய் டிவி.

இதுவரை அஜித் படங்களின் உரிமையை பெறாத விஜய் டிவி, இம்முறை பெற்றே தீர வேண்டும் என மல்லுக்ட்டி நிற்கிதாம்.

அண்மையில் மெர்சல் படத்தை ஜீடிவியும், சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தை விஜய் டிவியும், இவரின் அடுத்த படத்தை சன் டிவியும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay tv Planning to bag the satellite right of Vivegam

மெர்சல் படத்தில் 3வது கேரக்டரில் அரசியல்வாதியாக விஜய்.?

மெர்சல் படத்தில் 3வது கேரக்டரில் அரசியல்வாதியாக விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay real life lookஅட்லி இயக்கி வரும் மெர்சல் படத்தில் 3 கெட்டப்புகளில் விஜய் நடித்து வருகிறார் என கூறப்பட்டு வருகிறது.

இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

ஒரு கேரக்டரில் ஜல்லிக்கட்டு போராட்ட வீரர் போல காட்சியளித்தார் விஜய். மற்றொரு போஸ்டரில் மேஜிக் மேனாக போஸ் கொடுத்தார்.

இந்நிலையில், மற்றொரு கேரக்டர் பற்றிய தகவல்களை இதுவரை வெளியிடாமல் இருந்தனர்.

இந்நிலையில் இப்பட சூட்டிங்கின் போது, அட்லி ஒரு குடும்பத்துடன் போட்டோ எடுத்துள்ளார்.

அந்த பின்னணியில் விஜய் ஒரு காலண்டரில் இருப்பது போல ஒரு படம் உள்ளது. அது மேடையில் விஜய் பேசுவது போல நிற்கிறார். அந்த டிசைனில் மொட்டை ராஜேந்தர் படமும் இடம் பெற்றுள்ளது.

மேலும் அதில் ஒரு தேசிய கொடியும், அதோடு இன்னொரு கொடியும் இடம்பெற்றுள்ளது.

அது அரசியல்வாதி கேரக்டரா? என விசாரித்தற்கு, அதுபற்றி கூறமுடியாது. ஆனால் நிச்சயம் பவர் புல் கேரக்டராக இருக்கும் என தெரிவித்தனர்.

Vijays 3rd Character in Mersal movie revealed

vijay 3rd getup in mersal movie

More Articles
Follows