ரஜினியின் பேட்ட ரிலீசில் சிக்கல்..; பிரபல தயாரிப்பாளர் புலம்பல்

petta2019ஆம் வருடம் பிறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.

இந்த வருடப் பொங்கலுக்கு தமிழில் ரஜினியின் ‘பேட்ட மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு பெரிய படங்கள் ரிலீசாகின்றன.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை போல தெலுங்கில் சங்க்ராந்தி கொண்டாடப்படுகிறது.

அந்த பண்டிகையை முன்னிட்டு ‘என்டிஆர், வினய விதேய ராமா, எப் 2′ ஆகிய மூன்று பெரிய படங்களும் அங்கு வெளியாகவுள்ளன.

தெலுங்குகிலும் ரஜினிக்கு நல்ல மார்கெட் உள்ளதால் பேட்ட திரைப்படத்தை அங்கும் வெளியிடுகின்றனர்.

ஆனால் அங்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை அங்கு வெளியிடும் பிரபல தயாரிப்பாளர் அசோக் வல்லபனேனி இது குறித்து நேற்று நடந்த ‘பேட்ட’ தெலுங்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் புலம்பியிருக்கிறார்.

மூன்று பெரிய படங்களும் அதிக அளவில் தியேட்டர்களைப் பிடித்துக் கொண்டார்கள் என அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதனால் வேறு வழியின்றி மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

Overall Rating : Not available

Related News

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட திரைப்படத்தை…
...Read More
அஜித்தின் விஸ்வாசம் படத்தில் மெரிட்டு என்ற…
...Read More

Latest Post