த்ரிஷாவின் பரமபத விளையாட்டை வெளியிடும் அபிராமி ராமநாதன்

Trishas Paramapadham Vilayattu release updatesதிரிஷா தமிழ் திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் நாயகியாகவே நடிக்கிறார். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார்.

அவர் நடித்த பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிகளைக் குவித்திருக்கின்றது. இதன் மூலம் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

இந்த நிலையில், சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது, ‘பரமபத விளையாட்டு’ படத்தில் முதன்முறையாக ஆக்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் அரசியல் சார்ந்த திகில் படமாக உருவாகி வருகிறது.

ஒரு இரவுக்குள் நடக்கும் கதையைப் படமாக்கியிருக்கிறார்கள். திரிஷாவின் 60வது படமான இத்திரைப்படத்தை திருஞானம் இயக்குகிறார்.

இதில் ரிச்சர்டு, நந்தா, ஏ.எல். அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ் இமான் அண்ணாச்சி சோனா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டப்பிங், பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் வருகின்றது.

இதற்கிடையில், இப்படத்தைத் தன் குடும்பத்துடன் பார்த்த ‘அபிராமி’ ராமநாதன் சென்னை விநியோக உரிமையை வாங்கியுள்ளார்.

‘பரமபத விளையாட்டு’ இம்மாத இறுதியில் வெளியாகும்.

Trishas Paramapadham Vilayattu release updates

Overall Rating : Not available

Related News

Latest Post