‘மாஸ்டர்’ விஜய்யுடன் மோதும் ‘சூரரைப் போற்று’ சூர்யா

‘மாஸ்டர்’ விஜய்யுடன் மோதும் ‘சூரரைப் போற்று’ சூர்யா

Soorarai Pottru and Master plans to clash on Summer 2020கடந்தாணடு 2019 தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில் படத்துடன் கார்த்தி நடித்த கைதி படம் வெளியானது. இவையிரண்டும் வெற்றி பெற்றது.

தற்போது கைதி இயக்குனர் லோகேஷ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்த படத்தை இந்தாண்டு 2020 ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விருந்தாக திரையிட உள்ளனர்.

அதே நாளில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படமும் திரைக்கு வந்து மோதவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் ஜெயில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர் மாஸ்டர் படக்குழுவினர்.

இந்த ஜெயில் அரங்கில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி மோதும் சண்டை காட்சிகளை படமாக்குகின்றனர்.

பிப்ரவரிக்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளனர்.

சூரரைப் போற்று படத்தை ஜனவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர்.

ஆனால் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடியாததால் தமிழ் புத்தாண்டுக்கு தள்ளி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Soorarai Pottru and Master plans to clash on Summer 2020

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *