மாமனார் ரஜினி வேடத்தில் தனுஷ்; அம்மா மேனகா வேடத்தில் கீர்த்தி

Rajini and dhanushசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படங்களின் பெயர்களை தங்கள் படங்களுக்கு வைப்பது அல்லது அவரது படத்தை ரீமேக் செய்வது தற்போது தமிழ் சினிமாவில் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

அவரது மனிதன், ரங்கா, பொல்லாதவன், படிக்காதவன், முரட்டுக்காளை, பில்லா உள்ளிட்ட பல படங்கள் இந்த வரிசையில் அடங்கும்.

இந்த நிலையில் 30 வருடங்களுக்கு முன்பு வெளியான ரஜினியின் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

அதில் ரஜினி வேடத்தில் தனுஷ் அவர்களும் மேனகா வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

நிஜ வாழ்க்கையில் தனுஷின் மாமனார் ரஜினி, கீர்த்தியின் அம்மா மேனகா என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post