தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாச்சியார் படத்திற்கு பிறகு பாலா இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை நாயகனாக அறிமுகமாக்க ‛வர்மா’ படத்தை இயக்கினார்.
ஆனால் படமே திருப்தியாக இல்லை என்று சொல்லி படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என தயாரிப்பாளர் பாலாவை ஒதுக்கினார்.
தேசிய விருது படங்களை இயக்கிய பாலாவுக்கு இது பெரிய அவமானமாக இருந்தது. ஆனால் இதுபற்றி ஒரு வார்த்தை கூட பாலா பேசவில்லை.
தற்போது துருவ்வை வைத்து ‛ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் படத்தையும் அதே நிறுவனம் தயாரித்துவிட்டது.
இந்த நிலையில் ஒரு பக்காவான திரைக்கதை எழுதி அதை சூர்யாவிடம் சொல்லி தன் படத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
சுதா இயக்கும் சூரரைப் போற்று படத்தை முடித்துவிட்டு விஸ்வாசம் சிவா இயக்கும் படத்தில் நடித்து விட்டு பாலா படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.
இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜாவை இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
தான் கற்றுக் கொண்ட ஒட்டு மொத்த வித்தையையும் இப்படத்திற்காக இறக்கவுள்ளாராம் பாலா.
வாங்க பாலா.. அடுத்து ஒரு நேஷ்னல் அவார்ட்டை அள்ளுங்க..
Again Bala going to direct Suriya for new movie