ரஜினியுடன் நடிச்சிட்டா பெரிய ஆளா..? தன்ஷிகாவை காலில் விழவைத்த டிஆர்

TRajendar insulted Dhanshika in Vizhithiru Press Meetமீரா கதிரவன் இயக்கி தயாரித்துள்ள படம் விழித்திரு.

இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரபு, தன்ஷிகா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நீநீநீநீ…ண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படம் பல தடைகளை தாண்டி வருகிற அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை விடியல் ராஜீ பெற்றுள்ளார்.

இந்நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது நாயகி தன்ஷிகா பேசும்போது டி.ராஜேந்தர் அவர் அருகில் இருந்தும் பேச்சின் போது அவரது பெயரை குறிப்பிட மறந்துவிட்டார்.

அதன்பின்னர் மற்ற அனைவரும் பேசிய பின் டி.ராஜேந்தர் இறுதியாக பேசினார்.

அவர் பேச்சை ஆரம்பித்த போதே அரங்கம் அதிர ஆரம்பித்து விட்டது.

அவர் பேசியதாவது….

என்னை ஏன் லாஸ்ட்டாக பேச சொன்னீங்க.? நான் வேஸ்ட்? இல்ல நான் பெஸ்ட்.? இது எனக்கு நீங்க வைக்கிற டெஸ்ட்?

கபாலி எடிட்டர் பிரவீன் என்று சொன்னீர்கள். அவர்தானே கழுகு படத்தை எடிட்டிங் செய்தார். பெரிய படங்களை மட்டும்தான் சொல்வீர்களா?

ரஜினியுடன் கபாலியில் நடித்தார் தன்ஷிகா. அவருக்கு டி.ஆர். யார் என்று தெரியாதாம்.

மல. மல. அண்ணாமலை. அந்த மலை கூட நடிச்சிட்டா? மடு தெரியாதா?

தன்ஷிகாவிற்கு மேடை நாகரிகம் தெரியவில்லை” என்றார். அவர் டி.ஆர். பேசிக்கொண்டிருக்கும்போது, நடுவில் குறிக்கிட்டு தன்ஷிகா மன்னிப்பு கேட்டு காலில் விழுந்து சாரி சொன்னார்.

அதற்கும் அசராமல் நீ கட்டி வரல சாரி. இப்போ சொல்ற சாரி. என்று தன் அடுக்கு மொழியால் அவர் பேசிக் கொண்டே இருந்தார்.

பின்னர் தன்ஷிகா கண்ணீர் விட்டு அழுதார்.

TRajendar insulted Dhanshika in Vizhithiru Press Meet

Overall Rating : Not available

Related News

“சூப்பர் ஸ்டார்” யாருன்னா கேட்டா சின்னக்…
...Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான…
...Read More

Latest Post