ரஜினி-விஜய்-அஜித் ஜோடிகளை முந்திய சன்னி லியோன்

sunny leone big bossஇந்த 2016ஆம் வருடம் முடிய போகிறது. அப்படி என்றால், இந்த வருடத்தில் எவை மறக்க முடியாதவை?, எது பெஸ்ட்?, எது வேஸ்ட்? என்பதை கொடுக்க வேண்டியது தானே எங்கள் கடமை.

இந்த வருடத்தில் கூகுள் இந்தியாவில் அதிக தேடப்பட்ட நடிகை யார்? என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் 5வது இடத்தில் பிரியங்கா சோப்ரா இருக்கிறார்.

இவர் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்த பாலிவுட் நடிகை என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

4வது இடத்தில் ரஜினியின் கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனே இருக்கிறார்.

3வது இடத்தில் காஜல் அகர்வால் இருக்கிறார். இவர் தற்போது அஜித்துடன் நடித்து வருகிறார்.

2வது இடத்தில் கத்ரீனா கைஃப் இருக்கிறார்.

முதல் இடத்தில் நீங்கள் (மன்னிக்கவும் நாம் எதிர்பார்த்த… ஹிஹி…ஹி) சன்னி லியோன் இடம் பிடித்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post