தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த ‘வாரிசு’ படமும் அஜித் நடித்த ‘துணிவு’ படமும் திரைக்கு வர உள்ளது.
தற்போது இரண்டு படக்குழுவினரும் ப்ரோமோஷன் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்
2023 புத்தாண்டு விருந்தாக சன் டிவியில் ஜனவரி 1ல் ‘வாரிசு’ பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ‘வாரிசு’ மட்டும் தான் புத்தாண்டு விருந்தை ரசிகர்களுக்கு தருமா? நாங்கள் தர்றோம் என அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ‘துணிவு’ படக்குழு.
புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி துணிவு அப்டேட் வெளியாகவுள்ளது. இது நிச்சயமாக ‘துணிவு’ படத்தின் டிரைலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘துணிவு’ படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியுள்ள ‘லைக்கா’ நிறுவனம்.. டிசம்பர் 31.. துணிவு தினம் என அறிவித்து ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
மேலும் இந்த அறிவிப்பை புரமோட் செய்யும் வகையில் பாராசூட்டில் இருந்து குதித்து அஜித் புகைப்படம் பொருந்திய மிகப்பெரிய பேனரை பறக்க விட்டுள்ளனர்.
இது புரமோஷன் பணிகளில் வேற லெவல் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.