‘கர்ணன்’ இடைவேளை காட்சியில் எழுந்திரிச்சி நின்னு கை தட்டுவீங்க… க்ளைமாக்ஸ் வேற லெவல்..; சொன்னது யார்..?

‘கர்ணன்’ இடைவேளை காட்சியில் எழுந்திரிச்சி நின்னு கை தட்டுவீங்க… க்ளைமாக்ஸ் வேற லெவல்..; சொன்னது யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhilip subbarayanமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’.

கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஓரிரு பாடல்கள் சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக ‘பண்டாரத்தி…’ என்ற பாடல் சர்ச்சையில் சிக்கியதால், அந்த வார்த்தையை ‘மஞ்சனத்தி…’ என மாற்றிவிட்டனர்.

இதில் உரிமைக்காக போராடும் அடித்தட்டு மனிதனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

இப்படம் அடுத்த வாரம் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருகிறது.

எனவே காலம் குறைவாக இருப்பதாலும் மேலும் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க நினைப்பதாலும் இந்த படத்தின் டிரெய்லரை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

‘கர்ணன்’ படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து ஸ்டண்ட் மாஸ்டரும் நடிகருமான திலீப் சுப்ராயன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

“காலத்திற்கு பேர் சொல்லும் படமாக கர்ணன் இருக்கும்.. 16 வயதினிலே படத்தை இன்று வரை கொண்டாடுகிறோம்.

அதுபோல தனுஷ் மாரி செல்வராஜுக்கு ‘கர்ணன்’ படம் இருக்கும்.

இடைவேளை காட்சிகளில் எழுந்திரிச்சி நின்னு கை தட்டுவீங்க… க்ளைமாக்‌ஸ் காட்சி இடைவேளையை விட 3 மடங்கு வேற லெவலில் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

This popular stunt director praises Karnan the movie

ரஜினி பெயரைக் கூட குறிப்பிடாமல் வாழ்த்திய திமுக எம்.பி.; கண்டமேனிக்கு கண்டிக்கும் நெட்டிசன்ஸ்

ரஜினி பெயரைக் கூட குறிப்பிடாமல் வாழ்த்திய திமுக எம்.பி.; கண்டமேனிக்கு கண்டிக்கும் நெட்டிசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth (2)சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி கௌரவித்துள்ளது.

தற்போது ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை ஏப்ரல் 1ஆம் தேதி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.

இதனையடுத்து ரஜினி ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

ரஜினியை தலைவா என குறிப்பிட்டு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தும் நண்பன், அண்ணன், குரு முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 2ஆம் தேதி பாராளுமன்ற உறுப்பினரும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியும் மகளுமான கனிமொழி மறைமுகமாக ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவு இதோ…

*திரையுலகில் தனக்கென தனிப்பாதையை வகுத்துக் கொண்ட, தகுதிவாய்ந்த ஒருவருக்கு, பெருமைக்குரிய தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.

The prestigious Dada Saheb Phalke Award is a well deserved accolade for a trailblazer in the film industry. Congratulations…*

இவ்வாறு மக்களவை உறுப்பினர் கனிமொழி தன் ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் பெயரை கூட குறிப்பிடாமல் வாழ்த்து சொல்வதன் நோக்கம் என்ன? என ரஜினி ரசிகர்களும் நடுநிலையாளர்களும் இந்த ட்வீட்டுக்கு தங்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

அவற்றில் சில…

சரி யார் அவர் பேர் தெரியாதா?? இல்லை சொல்ல முடியாதா?? அவ்வளவு தலைக்கணமா உனக்கு?? பேர் சொல்ல முடியலனா எதுக்கு வாழ்த்து சொல்ற?? யார் கட்டாயத்தின் பேரில் இந்த டிவிட்

ஈயம் பூசினா மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்…

என கமெண்ட்டுகளை வீசி வருகின்றனர்.

Netizens slams Kanimozhi for wishing Rajinikanth

மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் மகளும் சினிமாவில் நாயகினார்.!

மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் மகளும் சினிமாவில் நாயகினார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maaveeran Pillaiசத்தியமங்கலம்… தமிழகம் கேரளா & கர்நாடக காட்டுப்பகுதியில் தன் சந்தன கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தவன் வீரப்பன்.

சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்த வீரப்பன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில அரசுகளுக்கு கடும் சவாலாக விளங்கியவர் இவர்.

சந்தனக் கட்டை கடத்தல், தந்தங்களுக்காக யானைகளை கொன்று குவித்தல் என்று பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் வீரப்பன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது 2004 ஆம் ஆண்டில் அக்டோபர் 18 ஆம் தேதி என்கௌண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் சந்தனக் கடத்தல் வீரப்பன்.

அவருக்கு விஜயதாரணி மற்றும் விஜயலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

சமீபத்தில் மூத்த மகள் விஜயதாரணி பாஜகவில் இணைந்தார்.

இளைய மகள் விஜயலட்சுமி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வனயுத்தம் என்ற படம் வெளியானது

இந்த நிலையில் விஜயலட்சுமி நடிப்பில் ‘மாவீரன் பிள்ளை’ என்ற திரைப்படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

அதில் விஜயலட்சுமி வீரப்பனைப் போன்றே கையில் துப்பாக்கி மற்றும் யூனிபார்மில் காணப்படுகிறார்.

இது வீரப்பனின் வாழ்க்கை வரலாறா? அல்லது விஜயலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று படமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

கே என் ஆர் ராஜா இயக்கி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய், ரவி வர்மா இசையமைக்கிறார்.

#MaaveeranPillai Movie Teaser

#Teaser –> https://youtu.be/qs-qBnAOuh8

தமிழ்நாட்டை காத்த மாவீரன் வீரப்ப(னி)ன் மகள் நடித்த முதல் திரைப்படம் #மாவீரன்பிள்ளை

#MaaveeranPillaiTeaser @knrmovies @knrraja1 @ManiAlaya @sridhargovindh1 @MpAnand_PRO

Veerappan daughter turns heroine

விஷால் 31 அப்டேட்..: குறும்பட இயக்குனருடன் இணையும் விஷால் & யுவன் கூட்டணி

விஷால் 31 அப்டேட்..: குறும்பட இயக்குனருடன் இணையும் விஷால் & யுவன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal 31விஷால் தயாரித்து, நடிக்கும் அடுத்த படத்தினை புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்குகிறார்.

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியானது.

புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் என்பவர் “குள்ள நரிக்கூட்டம்” மற்றும் சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்கள் குவித்த “தேன்” ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

அவர் சமீபத்தில் இயக்கிய “எது தேவையோ, அதுவே தர்மம்” குறும்படம் திரைத்துறையில் பரவலான பாராட்டுக்களை குவித்தது.

இக்குறும்படத்தினால் ஈர்க்கபட்ட நடிகர் விஷால், தனது அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை இயக்குநருக்கு தந்துள்ளார்.

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதை தான் இத்திரைப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.பா. சரவணனன் எழுதி இயக்குகிறார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார்.

S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடுவமைப்பு செய்கிறார்.

படத்தின் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் முன் தயாரிப்பு நடந்து வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vishal and Yuvan joins for #Vishal31

தமிழில் மழை.. தெலுங்கில் இலா… ஹிந்தியில் ஜலி..; ‘தலைவி’ பாடலை வெளியிடும் சமந்தா

தமிழில் மழை.. தெலுங்கில் இலா… ஹிந்தியில் ஜலி..; ‘தலைவி’ பாடலை வெளியிடும் சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalaiviபுரட்சி தலைவி, தமிழக பெண்களின் ஆதர்ஷ நாயகி, மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் சினிமா, அரசியல் வாழ்வின் மிக முக்கிய தருணங்களை, பிரதிபலிக்கும் “தலைவி” படத்தின் டிரெய்லரை நாயகி சமந்தா தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

கங்கனா ரனாவத் நடிப்பில் படத்தில் நிகழ்ந்திருக்கும் அற்புத மேஜிக்கை காண ஆவலாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நாயகி சமந்தா இந்தி மொழியில் “ஜலி ஜலி”, தமிழில் “மழை மழை”, தெலுங்கில் “இலா இலா” என மூன்று மொழிகளிலும் “தலைவி” படத்தின் முதல் பாடலை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல வெற்றிபடங்களை தந்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் நாயகி சமந்தா தற்போது இந்தியில் பரபரப்பான இணைய தொடரான “ஃபேமிலி மேன்” இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பதன் மூலம் இந்திய அளவில், புகழ்மிகு நடிகையாக மாறியிருக்கிறார்.

“தலைவி” படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்த அவர், ஜெயலலிதாவின் நட்சத்திர திரைவாழ்வை சொல்லும் முதல் பாடலை தற்போது வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ஜெயலலிதாவின் முதல் படமான “வெண்ணிற ஆடை 1965” படத்திலிருந்து துவங்கும் இப்பாடல், அவரது மறக்க முடியாத படங்களின், நடிப்பு துணுக்குகளை, கங்கனா ரனாவத்தின் அற்புத நடிப்பில் மீளுருவாக்கம் செய்துள்ளது.

இவ்வருடத்தின் மிக எதிர்ப்பார்ப்பிற்குரிய, தவிர்க்க முடியாத படங்களுள் ஒன்றாக “தலைவி” படம் இடம்பிடித்திருக்கிறது.

பிரமிக்க தக்க வகையில் ஜெயலலிதா வாழ்வின் பக்கங்களை, நம் கண்முன் புரட்டி காட்டும்படி, மிக அழகான முறையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, சாதரண பெண்ணாக இருந்து திரைத்துறைக்குள் நுழைந்தது, சிறு நடிகையாக இருந்து சூப்பர்ஸ்டாராக மாறியது, பின் போராட்டத்திற்கு பின் அரசியலில் இணைந்தது, பல தடைகளை உடைத்து அரசியலில் மலர்ந்து உயரிய பொறுப்பிற்கு சென்றது, தமிழகத்தை வடிவமைத்து, அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியது என ஜெயலலிதா அவர்களின் வாழ்வின் பல அறிந்திராத பக்கங்களை நம் கண்முன் கொண்டுவரவுள்ளது இப்படம்.

Vibri Motion pictures, Karma Media Entertainment மற்றும் Zee Studios , Gothic Entertainment நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை வழங்குகிறார்கள். விஷ்ணு வர்தன் இந்தூரி சைலேஷ் R சிங், Sprint films சார்பில் ஹிதேஷ் தக்கர் மற்றும் திருமால் ரெட்டியுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள். T- Series பாடல்களை வெளியிட “தலைவி” படத்தினை Zee Studios 23 ஏப்ரல், 2021 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடுகிறது.

Mazhai Mazhai song video from #Thalaivi released by Samantha

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதை ‘டேக் டைவர்ஷன்’

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதை ‘டேக் டைவர்ஷன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Take Diversionசென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கார் பயணத்தில் நடக்கிற கதையாக உருவாகி இருக்கிறது ‘டேக் டைவர்ஷன்’ படம்.

இப்படத்தை சிவானிசெந்தில் இயக்கியிருக்கிறார். சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.

‘திருமலை தென்குமரி’ முதல் ‘பையா’ வரை பயண வழிக் கதைகளைக் கொண்ட பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் சேரும் அளவிற்கு நம்பிக்கையோடு உருவாகி வரும் படம் தான்’ டேக் டைவர்ஷன்’ .

சென்னை ராயபுரத்தில் ஒரு வெப்பமான பின்புலத்தோடு காட்சிகள் தொடங்க, வழியில் பல்வேறுபட்ட நிலக்காட்சிகள் மாறி பாண்டிச்சேரி கடற்கரை வரை செல்லும் கதை இது. வழியில் பல வர்ண ஜாலங்களாகக் காட்சிகள் திரையில் விரிகிற கதையாக இப்படம் உருவாகியிருக்கிறது.

இப்படத்தை இயக்கி இருக்கும் சிவானி செந்தில் ஏற்கெனவே’கார்கில்’ என்ற படத்தை 2018-ல் இயக்கி இருந்தார் .அந்தப் படம் தமிழில் ஒரே ஒரு கதாபாத்திரம் தோன்றும் படமாக ஊடகங்களில் பேசப்பட்டது.

நாயகன் காரில் செல்கிற பயணம் சார்ந்த காட்சிகள் தான் அந்தப் படத்தின் கதையாக இருக்கும்.

அதே போல் இந்தப் படத்தில் நாயகிக்கு மூன்று பேரால் நடக்கும் பிரச்சினைகள் வரும். அதற்கான தீர்வை நோக்கிச் செல்லும்படி இந்த கதையின் ஓட்டம் இருக்கும். மூன்றாண்டு காலம் அவளுக்கு இருந்த பிரச்சினைகள் அந்த ஒரு நாள் பயணத்தில் தீர்கிறது. எப்படி என்பதுதான் கதையின் போக்கு.

படத்தின் தலைப்பைப் பற்றி இயக்குநர் கூறும்போது,

” நாம் அனைவருமே புறப்பட்ட பாதையிலிருந்து நேராகச் சரியாக அடையவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேருவதில்லை. காலம் நம்மை மாற்றுப்பாதையில் திசை திருப்பி வேறு ஒரு கிளை பிரித்து அங்கே பயணிக்க வைத்து இறுதியில் தான் அந்த இடத்தை அடைய வைக்கும்.

அப்படி வாழ்க்கையில் ‘ டேக் டைவர்ஷன் ‘ என்ற வார்த்தைக்குப் பொருள் அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்து இருப்பார்கள். அந்த வகையில்தான் இந்த பெயரை வைத்தேன். இதற்கான சரியான தமிழ்ப்பெயர் கிடைக்கவில்லை என்பது ஒரு காரணம். இது ஒரு கலர்ஃபுல்லான படமாக இருக்கும். இளமை ததும்பும் காட்சிகள் புதிதாக இருக்கும்” என்றவர்.

“இந்த கொரோனா காலத்தில் அவ்வப்போது படப்பிடிப்பு என்று திட்டமிடாமல் துண்டுதுண்டாக படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்க முடியாது என்பதால் ஒரே பயணத்திட்டத்தில் படத்தை முடிப்பது என்ற நோக்கில் ஆரம்பித்தோம். இதோ முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

இந்தப்படத்தில் எத்தனை பேர் இருந்தாலும் சரி கதைதான் ஹீரோ” என்கிறார் இயக்குநர்.

ஏனென்றால் அவர் கே. பாலச்சந்தரின் ரசிகர். அவரது அத்தனை படங்களிலும் எத்தனைக் கதாநாயக நடிகர்கள் நடித்து இருந்தாலும் திரைக்கதை தான் பிரதான நாயகனாக இருக்கும். அதுபோல்தான் இந்தப் படத்தில் பலபேர் நடித்திருந்தாலும் கதைதான் கதாநாயகன்.

இப்படத்தில் ‘கேஜி எப்’ படத்தின் துணை இயக்குநரும், கூத்துப்பட்டறையில் பத்தாண்டுகள் நடிப்புப் பயிற்சி பெற்றவருமான சிவகுமார் அறிமுக நாயகனாக நடித்து முத்திரை பதித்துள்ளார்.

‘பேட்ட’, ‘சதுரங்கவேட்டை’ படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் இளமை துள்ளலுடன் நடித்துள்ளார் .

பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார் .இவரது நடிப்பு அனுபவ சாலியைப் போல அற்புதமாக அமைந்துள்ளது.

இரண்டாம் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார்.ஜான் விஜய் வில்லனாக வருகிறார். படத்தில் 20 நிமிடங்கள் அவரது கலக்கல் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்படும் .விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலாஜி சந்திரன், சீனிவாசன், அருணாச்சலம், ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். கன்னடத்தில் இவர் ஒளிப்பதிவு செய்த ஒரு படத்திற்குத் தேசிய விருது கிடைத்திருக்கிறது.

படத்திற்கு இசை ஜோஸ் பிராங்க்ளின். இவர் ‘நெடுநல்வாடை’, ‘என் பெயர் ஆனந்தன்’ படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர். படத்தொகுப்பு -விது ஜீவா.

“பயண வழிப் படமாக இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை தரும். அதற்கு நான் உத்திரவாதம் “என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் இயக்குநர் சிவானி செந்தில்.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

Film based on Chennai to Pondicherry journey

More Articles
Follows