அடக்குனா; அடங்குற ஆளா அஜித்..? – திருப்பூர் சுப்ரமணியம்

அடக்குனா; அடங்குற ஆளா அஜித்..? – திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith actionதமிழ் சினிமாவில் சில வித்தியாசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருபவர் அஜித்.

இதனாலேயே இவருக்கு மன்றங்கள் இல்லாவிட்டாலும் ரசிகர்களுக்கு குறைவில்லை.

இந்நிலையில் பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு விஷயத்தை பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

ரெட், வில்லன், வரலாறு உள்ளிட்ட அஜித்தின் பெரும்பாலான படங்களை தயாரித்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி.

ஒரு சூழ்நிலையில் அஜித்துடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டத்தில் இருந்துள்ளார்.

எனவே அஜித் கால்ஷீட் வேண்டும் என திருப்பூர் சுப்ரமணியத்திடம் சக்கரவர்த்தி வேண்டுகோள் விடுத்தாராம்.

அவரும் அஜித்திடம் இதுகுறித்து பேசியுள்ளார்.

‘என்னுடைய தற்போதைய மார்க்கெட்டில் உள்ள சம்பளத்தில் பாதி கொடுத்தால் அவருக்கு ஒரு படம் நடித்து தருகிறேன்.

ஆனால் அதுதான் அவரது பேனருக்கு கடைசி படமாக இருக்கும்” என்றாராம் அஜித்.

அப்படிதான் ஒரு படம் உருவானது.

நான் இதுகுறித்து அஜித்திடம் பேசிய போது, அவர் மிகவும் பணிவாகவும் நேர்மையாக நடந்துக்கொண்டார்.

இது விஷயமாக எந்தவிதமான கட்டப் பஞ்சாயத்தோ நடக்கவில்லை.

அவரை மிரட்ட முடியுமா? அதற்கு அடங்குற ஆளா அஜித்” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நடிகரால் ஐஸ்வர்யா ராய் படத்திற்கு வந்த மிரட்டல்

பாகிஸ்தான் நடிகரால் ஐஸ்வர்யா ராய் படத்திற்கு வந்த மிரட்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aedilhaimushkil movie stillsபாகிஸ்தான் நடிகர் பவாத் கான் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் ‘ஏ தில் ஹை முஷ்கில்’.

இவருடன் ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஆனால் பாகிஸ்தான் நடிகரால் இப்படத்திற்கு தற்போது மிரட்டல் வந்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற உரி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியப் படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிக்க கூடாது என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியது.

ஆனால், இப்படத்தை 28ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு ராஜ்தாக்கரே உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், படத்தை இயக்கிய இயக்குனர் கரண் ஜோகர், தயாரிப்பாளர் முகேஷ் பட் மற்றும் விஜய் சிங் ஆகியோர் மும்பை போலீஸில் இப்படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.

எனவே போலீஸ் பாதுகாப்புடன் இப்படம் வெளியாக உள்ளது.

தலைவர்களை தாக்காமல் பாலிடிக்ஸ் செய்யும் தனுஷ்

தலைவர்களை தாக்காமல் பாலிடிக்ஸ் செய்யும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kodi dhanush stillsதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்துள்ள படம் கொடி.

படத்தின் பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தை வருகிற (2016) தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

இப்படம் அரசியல் சார்ந்த கதை என்பது நாம் அறிந்ததே.

ஆனாலும், இதில் எந்தவொரு கட்சித் தலைவர்களையும் மறைமுகமாக தாக்குவது போன்ற காட்சிகள் இல்லையாம்.

மேலும், இன்றைய சமுதாயத்திற்கும் இளைஞர்களுக்கும் நல்லதொரு அரசியல் கருத்தை இப்படத்தில் வைத்திருக்கிறார்களாம்.

மா.கா.பா. ஆனந்த் ‘கடலை’ போட சிவகார்த்திகேயன் சப்போர்ட்

மா.கா.பா. ஆனந்த் ‘கடலை’ போட சிவகார்த்திகேயன் சப்போர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ma ka pa anand aishwarya rajeshசிவகார்த்திகேயனை தொடர்ந்து, மா.கா.பா. ஆனந்தும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

ஆனால் இதுவரை மா.கா.பா ஆனந்த் நடித்த படங்கள் பெரும் வெற்றியை பெறவில்லை.

எனவே தற்போது அவர் நடித்து, விரைவில் வெளியாகவுள்ள கடலை படத்திற்கு சிவகார்த்திகேயன் ஆதரவு கொடுத்துள்ளார்.

அதாவது, கடலை படத்தின் ட்ரைலரை சிவகார்த்திகேயன் நாளை வெளியிடவிருக்கிறார்.

சகாய சுரேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, ஜான்விஜய், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மெல்லிசை படத்திற்கு இசையமைத்த சாம் CS இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

உதயம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

‘ரெமோ’வுக்கு ரஜினி பாராட்டு; உற்சாகத்தின் உச்சத்தில் ஆர்.டி.ராஜா

‘ரெமோ’வுக்கு ரஜினி பாராட்டு; உற்சாகத்தின் உச்சத்தில் ஆர்.டி.ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo team rajinikanthசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம், பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது.

சில எதிர்மறை விமர்சனங்கள் இப்படம் குறித்து வந்தாலும், ரசிகர்களின் அமோக ஆதரவுடன் வசூலை வாரி குவித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை ரஜினிகாந்த் பார்த்துள்ளார்.

எனவே, சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இத்தகவலை சற்றுமுன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஆர்.டி.ராஜா.

அதில் அவர் கூறியுள்ளதாவது…

“ரெமோ படம் ரஜினி சாருக்கு மிகவும் பிடித்துள்ளது. படத்தை பற்றி பாராட்டினார்.

ஒரு தீவிர ரஜினி ரசிகனான எனக்கு, அவரிடம் இருந்து கிடைத்த பாராட்டு என்னுடைய வாழ்நாளில் நான் உழைத்து உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.

விஷால்-கார்த்தி நடிக்கும் படத்திற்கு யாருப்பா இப்படி பேரு வச்சது?

விஷால்-கார்த்தி நடிக்கும் படத்திற்கு யாருப்பா இப்படி பேரு வச்சது?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi vishal joins with prabhu deva for new movieநடிகர் சங்க விவகாரங்களில் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடியவர்கள் விஷால்-கார்த்தி.

அப்போது முதலே, இவர்கள் எப்போது இணைந்து நடிப்பார்கள் என பேசப்பட்டு வந்தது.

தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

இவர்கள் இணையும் படத்திற்கு கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படி பெயரிட என்ன காரணம் எனத் தெரியவில்லை.

இப்படத்தை நடிகரும் பிரபல இயக்குனருமான பிரபுதேவா இயக்கவிருக்கிறார்.

விஜய்க்கு போக்கிரி, வில்லு ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் சூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவிருக்கிறாராம்.

More Articles
Follows