எக்ஸ் லவ்வருடன் உல்லாசம்; சனம் ஷெட்டியை கட்டிக்க முடியாது என தர்ஷன் ஓபன் டாக்

எக்ஸ் லவ்வருடன் உல்லாசம்; சனம் ஷெட்டியை கட்டிக்க முடியாது என தர்ஷன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tharshan confirmed that he wont marry Sanam Shettyபிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அதுகுறித்து விரிவான விளக்கம் அளித்து அவர் கூறியதாவது:

2016-ல் சென்னைக்கு வந்தேன். நான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, என்னுடைய இருசக்கர வாகனத்தை விற்று விட்டு தான் சென்னைக்கு வந்தேன். வந்ததும்

ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் ஆறு மாத காலம் உதவியாளராக பணிபுரிந்தேன். அங்கங்கே நடக்கும் ஆடிஷனில் கலந்து கொண்டு விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். பிறகு வில்லனாக ஒரு படத்தில் நடித்தேன்.

2017 தான் சனம் ஷெட்டியை சந்தித்தேன். அப்போது என்னை அவரது முகநூலில் சேர்த்தார். அதன் பிறகு என்னுடைய ஒவ்வொரு படத்தின் புகைப்படங்களை பார்த்து வாழ்த்து செய்தி அனுப்புவார்.

மீரா மிதுனிடம் பறிக்கப்பட்ட மிஸ் சௌத் இந்தியா பட்டம் சனம் ஷெட்டிக்கு கைமாறியது

ஒருமுறை நான் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நாயகன் இன்னும் முடிவாகவில்லை.நீங்கள் நாயகனாக நடிக்க ஆடிஷன் வாருங்கள் என்று முகநூலில் செய்தி அனுப்பினார். நான் ஆடிஷனில் தீர்வான பிறகுதான் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் நான்தான் என்று கூறினார்.

35 நாள் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அந்த சமயத்தில் அவருக்கு என்மீது ஒருமுக காதல் இருந்துள்ளது. 2018 முதல் நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். ஆனால் இருவரின் பணியில் இடையூறு வரும் என்பதால் வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்தோம்.

இதற்கிடையே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாங்கள் நடித்த படமும் பாதியில் நின்றுவிட்டது. எனக்கும் விசா முடிவடைந்ததால் ஸ்ரீலங்காவிற்கு திரும்பிவிட்டேன். சுமார் 8 மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்காக இந்திய அழைத்தார்கள் வேலைவாய்ப்பு விசாவில் வந்தேன். இங்கு வந்த பிறகும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறினார்கள் அதுவரை எனது செலவுக்கு எனது அண்ணன் தான் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்.

அவ்வப்போது எனக்கு கிடைக்கும் விளம்பர வாய்ப்பை பயன்படுத்தி வருமானம் ஈட்டினேன். சனம் ஷெட்டி அவ்வப்போது எனது பெயரை முன்னெடுத்து எனக்கு வாய்ப்புகள் வாங்கி கொடுப்பார். அவர் மிகப்பெரிய உதவிகளை வழங்கி இருக்கிறார் என்ற உணர்வு எனக்கு எப்போதும் இருக்கும்.

அதன்பிறகு, இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க எங்களது சுய விவரங்களை கொடுத்து விண்ணப்பித்து இருந்தோம். என்னைவிட சனம் ஷெட்டிக்கு வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் சந்தோசம் தான் என்று நானும் இருந்தேன். அந்த சமயத்தில் விஜய் டிவியில் போத்தீஸ் விளம்பரத்தில் நான் நடித்ததை பார்த்து என்னை தேடி கொண்டிருந்திருக்கிறார்கள்.

விஜய் டிவியின் வில்லா டூ வில்லேஜ் ரியாலிட்டி ஷோவில் சனம்ஷெட்டி

எனக்கு ரம்யாவும் சத்யாவும் நெருங்கிய நண்பர்கள். எங்களுடைய புகைப்படத்தை பார்த்துவிட்டு ரம்யாவிடம் இந்த பையனை தான் தேடிக்கொண்டிருந்தோம் போன் நம்பரை கொடுங்கள் என்று விசாரித்திருக்கிறார்கள். அதற்கு நாங்கள் தர்ஷனின் நிச்சயதார்த்தத்திற்கு வந்திருக்கிறோம். முடிந்ததும் அனுப்புகிறோம் என்று ரம்யா கூறியிருக்கிறார்.

இந்த விவரங்களை நான் சனம் ஷெட்டியிடம் கூறியபோது, அவர் நமக்குள் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்று பத்திரிக்கைகளுக்கு தகவல் அளித்து விடுங்கள். இல்லையென்றால் எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று என் மீது கோபப்பட்டார். அப்போது, சத்யாவும் ரம்யாவும் எங்களுடன் தான் இருந்தார்கள். அவர் கூறிய பிறகுதான் நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும் தான் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற வில்லை என்று நான் பேட்டி அளித்தேன்.

எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என் பெற்றோருக்குத் தெரியாது ஏனென்றால் எனக்கு ஒரு தங்கை இருப்பதால் அவர் திருமணம் முடியும் வரை எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது தெரியாமல் இருக்க வேண்டும். அதற்கு சம்மதித்தால் நான் செய்து கொள்கிறேன் என்று சனம் ஷெட்டியின் பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் சம்மதித்த பின் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பிறகு, நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும்போது சனம் ஷெட்டி, நீ யாரிடமும் இந்த விஷயத்தை கூற வேண்டாம். ஏனென்றால், வையில்ட் கார்ட் சுற்றில் நான் வர வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். அவருடைய மாமா அரசியலில் பெரும்புள்ளி.

அவரை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆகையால் தான் ஆரம்பத்தில் நான் எதுவும் கூறவில்லை மீரா பிரச்சனை ஆரம்பிக்கும் போதுதான் எங்கள் காதலை பற்றி கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் கூறினேன்.

பிறகு, அவர் நீச்சல் உடையில் பேட்டி அளித்திருந்தார். அது எனக்கு பிடிக்காமல் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டேன். அதற்கு சனம் ஷெட்டி உன்னை ஊக்குவிக்க தான் என்று கூறினார். மேலும் உனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர் பெயரும் கடவுச் சொற்களையும் கேட்டிருந்தார்.

நான் எனது அண்ணனும் தங்கையும் பார்த்துக்கொள்வார்கள் மற்றும் விஜய் டிவியில் வரும் விளம்பரமே போதும் என்று கூறிவிட்டேன். அதை மீறி என் அண்ணனிடம் கேட்டு உள்ளார் அவர் மறுக்க என் தங்கையைக் கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளார். நம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு ஒரு மாதம் வரை என்னுடைய இன்ஸ்டாகிராம் முழுவதும் உபயோகப்படுத்தியது சனம் ஷெட்டி தான்.

Actress Sanam Shetty Photos

என்னிடமும் இனிமேல் பிக்பாஸில் கலந்துகொண்ட பெண்களிடம் நீ பேசுவது இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வது கூடாது மேலும் நீ எங்கு சென்றாலும் என்னையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார்.

சமீபத்தில் மலேசியாவில் நடந்த நிகழ்ச்சிக்கு கூட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் நான் தர்ஷனின் காதலி என்னையும் அழைத்துச் செல்லுங்கள், ஹோட்டலில் எனக்கு அறை ஒதுக்குங்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கான செய்தி ஆதாரம் என்னிடம் உள்ளது.

அதேபோல் நான் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தன்னை கதாநாயகியாக போட வேண்டும் என்றும் கூறி வந்தார். அதற்கு நான் எனக்கு இந்த கதாநாயகிதான் வேண்டும் என்று கூறும் அளவுக்கு வளரவில்லை என்று கூறினேன். இது போல் அவ்வப்போது எங்களுக்குள் சிறு சிறு விவாதங்கள் நடந்து கொண்டே இருந்தது.

என்னிடம் கேட்டால் மட்டுமே நான் சனம் ஷெட்டியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யுங்கள் என்று கூறுவேன் என்றேன்.

அதன் பிறகு ஒரு நாள் அவர் என்னிடம் இப்போது உனக்கு புகழ் கூடிவிட்டது ஆகையால் இன்னும் இரண்டு மாதத்தில் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என்று அறிவித்துவிட்டு என்று கூறினார். அதற்கு நாம் ஏற்கனவே சமரசமாக பேசி முடிவெடுத்து விட்டோம் இப்போது நான் மூன்று படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறேன்,

ஆகையால் இப்போது நான் கூற மாட்டேன் என்றேன். அதற்கு இன்னொரு தயாரிப்பாளர்களிடம் சென்று இவரை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார். அப்போதுதான் நான் இவரை விட்டு விலகுவது என்று முடிவெடுத்தேன். அதை அவரிடம் கூறியபோது நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். அந்த செய்தியின் ஆதாரமும் என்னிடம் இருக்கிறது.

அதோடு நில்லாமல் நான் உன் அம்மாவிடம் நம் காதலைப் பற்றிக் கூறப் போகிறேன் என்றார். என்னை சந்தித்து விட்டு தான் என் அம்மாவை சந்திக்க சென்றார். என்னம்மா நீங்கள் இருவரும் காதலிப்பதால் எங்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால், தர்ஷனின் தங்கைக்கு திருமணம் செய்துவிட்டு உங்கள் திருமணத்தை நடத்துகிறோம் என்று கூறினார்.

அவர் விசா சம்பந்தமாக சுமார் ரூ.3 லட்சம் எனக்கு அளித்து இருந்தார். அதை ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் அவரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டேன். நிச்சயதார்த்த செலவு ரூ.2 1/2 லட்சம் தவிர வேறு எந்த பண உதவியும் அவரிடமிருந்து நான் பெறவில்லை.

Actress Sanam Shetty Biography

மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியது அவர்தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்னுடன் பழகிய சில பெண்களிடம் அவர் நேரடியாக சென்று மிரட்டி இருக்கிறார். அவர்களுக்கு பிரச்சினை வரும் என்ற காரணத்தால், அவர்கள் பெயரை வெளியே சொல்ல விரும்பவில்லை. அவர்களின் இன்ஸ்டாகிராம் அடையாளத்தை தடை செய்ததும் அவர்தான்.

மேலும் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த சமயத்தில் ரம்யா சத்ய திருமணத்திற்கு அவருடைய முன்னாள் காதலனுடன் தனியறையில் இருந்திருக்கிறார். அதற்கான ஆதாரம் மற்றும் இன்னும் அவரைப்பற்றிய பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு பல பெண்களிடம் தொடர்பு இருக்கிறது என்று சனம் கூறியுள்ளார் அதற்கான ஆதாரம் இருந்தால் அவரை கொடுக்க சொல்லுங்கள். சரி நிதம் நான் எங்கள் காதலை கூறிய பிறகு அவரும் அதை புரிந்து கொண்டு விலகி விட்டார்.

ஆனால் சனம் ஒரு நிகழ்ச்சியில் எங்களுக்கு இடையே ஷெரீன் தான் தடையாக இருக்கிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். அது முற்றிலும் உண்மை அல்ல. நானும் ஷெரீனும் நல்ல நண்பர்கள் மட்டும் தான்.

மேலும், நான் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியிருக்கிறார். அதுவும் உண்மையல்ல. பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் சென்று தன்னை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அவர்கள் இது அவருடைய தனிப்பட்ட விஷயம். இதற்கும் அவர் நடிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள். இவ்வளவு நடந்த பிறகு அவரை திருமணம் செய்யும் எண்ணம் இல்லை.

எனக்கு அவர் நிறைய உதவிகள் செய்து இருப்பதால், அவர் மீது நான் எந்த வழக்கும் தொடர மாட்டேன். அவர் கொடுத்த வழக்கில் ஆணையர் கேட்பின் என்னிடம் உள்ள ஆதாரத்தை சமர்ப்பிப்பேன்.

இவ்வாறு தர்ஷன் தனக்கும் சனம் ஷெட்டிக்கும் இருந்த உறவைப் பற்றி தெளிவாக விளக்கம் அளித்தார்.

Tharshan confirmed that he wont marry Sanam Shetty

ரஜினி-குஷ்பூ-மீனா-கீர்த்தி கூட்டணியில் இணைந்தார் நயன்தாரா

ரஜினி-குஷ்பூ-மீனா-கீர்த்தி கூட்டணியில் இணைந்தார் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara on board in Rajinis Thalaivar 168 தர்பார் படத்தை தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

சிவா இயக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

எந்திரன், பேட்ட படங்களை அடுத்த ரஜினியின் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் ரஜினிகாந்துடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கதையின் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் சதீஷ், சூரி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தில் நயன்தாரா இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்னும் யாரெல்லாம் ரஜினியுடன் இணைய போகிறார்களோ..?

Nayanthara on board in Rajinis Thalaivar 168 team

ரஜினியின் ‘தர்பார்’ MASS? LOSS?; என்ன நடக்கிறது..? ஒரு பார்வை

ரஜினியின் ‘தர்பார்’ MASS? LOSS?; என்ன நடக்கிறது..? ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbar rajiniரஜினி, லைகா, முருகதாஸ், அனிருத் என மாபெரும் கூட்டணியில் உருவான ‘தர்பார்’ படம் கடந்த 9ஆம் தேதி 3 மொழிகளில் உலகமெங்கும் ரிலீசானது.

இப்படத்தை பார்த்த பலரும் பாராட்டி வரும் நிலையில் படமும் நல்ல வசூல் வேட்டையை செய்து வருகிறது.

முதல் 4 நாட்களில் ரூ- 150 கோடியை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்து இருந்த்து.

ரஜினி பேர சொல்ல ஏன் பயம்?; சாகுற காலத்துல நடிக்கிறார்.. மன்சூர் அலிகான்

தற்போது படம் ரிலீசாகி 25 நாட்களை நெருங்கும் நிலையில் தர்பார் படத்தால் நஷ்டம். ரஜினிகாந்த் பணத்தை திருப்பி தர வேண்டும் என விநியோகஸ்தர்கள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.

இவர்களை ரஜினியை சந்திக்க சென்றதாகவும் அவர் பின்னர் சந்திப்போம் என்று கூறியதாகவும் தகவல்கள் பறந்தன.

இதனால் ரஜினி ரசிகர்களும் நடுநிலையான ரசிகர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

‘தர்பார்’ வசூலை தகர்க்க வாட்ஸ்அப்பில் ஆப்பு; போலீசில் லைகா புகார்

படம் நிஜமாகவே நஷ்டம் என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வரவில்லை. ரஜினியோ அல்லது லைகா நிறுவனமோ இதுபற்றி வாய் திறந்தால் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்கும் என நம்பலாம்.

தர்பார் திடீரென நஷ்டம் என சிலர் கிளம்பி வருவதற்கு அரசியல் பின்னணி தான் காரணம்.

காலா படம் நஷ்டம் என்றனர். பின்னர் அப்பட தயாரிப்பாளர் தனுஷ் உண்மையை சொன்ன பிறகு அது அப்படியே கானல் நீரானது.

ரஜினி மீது என் கண்கள்; அவர்தான் இந்திய சூப்பர் ஸ்டார்.. – குஷ்பூ

அது போல லைகா தயாரித்த ‘2.0’ படம் நஷ்டம் என்றார்கள். ஆனால் தயாரிப்பாளருக்கு பெரும் லாபம் கிடைக்காவிட்டாலும் அசல் தொகை கிடைத்துவிட்டது. அதுபோல் படத்தை வெளியிட்டவர்களுக்கும் லாபம்தான் என்றனர்.

ரஜினி படத்திற்கு மட்டும் இதுபோல் பிரச்சினைகள் வருவது ஏன்? இதோ ஒரு சின்ன ப்ளாஷ்பேக்…

அண்ணாமலை படத்தின் போது (1992) அந்த படத்தின் விநியோக உரிமையை பெற்றிருந்தார் ரஜினி. அந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, கே பாலசந்தர் தயாரித்திருந்தார்.

தமிழகத்தில் ஜெயல்லிதாவின் ஆட்சி நடைபெற்ற சமயம் அது.

ரஜினியின் முதல் டிவி நிகழ்ச்சி; உன்னத மனிதர் என Bear Grylls நெகிழ்ச்சி

அண்ணாமலை பட சந்திப்பின் போது ரஜினி பேசியதாவது… இந்த படம் நல்லா வந்திருக்கு. நிறைய விலை கொடுத்து வாங்கியுள்ளேன்.

நஷ்டம் அடைந்தால் திருப்பி தருகிறேன். லாபம் அடைந்தால் திருப்பி தர வேண்டாம். ஆனா எவ்வளவு லாபம் சொன்னா சந்தோஷம். நீங்க கரெக்ட்டா இருந்தா நானும் கரெக்டா இருப்பேன். ஆனா நீங்க வேற மாதிரி நடந்தா அப்போ நானும்தான்.. என்று கே.பி முன்னிலையிலேயே பேசியிருந்தார் ரஜினி. (இப்போதும் அந்த வீடியோ யுடிப்பில் உள்ளது),

தான் தயாரித்த பாபா படம் தோல்வி ஆனதால் அந்த பட நஷ்டத்தை திருப்பி கொடுத்தார் ரஜினிகாந்த். இதுவரை எந்த ஒரு தயாரிப்பாளரும் நடிகரும் அப்படி செய்ததில்லை.

என் படத்தை வாங்கியவர்கள் யாரும் நஷ்டம் அடைய கூடாது என ரஜினி அப்போதே சொல்லியிருந்தார்.

ஒரு முறை விஜயகாந்திடம் உங்கள் படம் நஷ்டம் அடைந்தால் இதுபோல் செய்வீர்களா? என்று கேட்டனர்.

அவருக்கு கிடைத்த லாபத்தில் தான் பணத்தை திருப்பி கொடுத்தார். என பதிலளித்தார் கேப்டன். ஆக பாபா படம் ரஜினிக்கு லாபத்தை கொடுத்திருந்தது.

ஆக ரஜினி ஒவ்வொரு முறையும் இதுபோல் பிரச்சினைகளை சந்திப்பது தெரிகிறது.

ரஜினிக்கு விதிக்கப்பட்ட ரூ. 66.22 லட்சம் அபராதம் ரத்து; கோர்ட் அதிரடி

இதனையடுத்து சில வருடங்களுக்கு பின்னர் வெளியான குசேலன், லிங்கா பட நஷ்டத்தின் போதும் ரஜினியை தொல்லை கொடுத்தனர்.

ஆனால் இந்த இரு படங்களையும் ரஜினி தயாரிக்காத போதும் பணத்தை திருப்பிக் கொடுத்தார் ரஜினி.

ரஜினி படத்தை அவரது பட தயாரிப்பாளர்கள் நிறைய விலைக்கு விற்றுவிடுவதும் இதில் ஒரு காரணமாக உள்ளது.

எனவே ரஜினி திருப்பி தருவார் என்ற நம்பிக்கையில் அவரையே டார்கெட் செய்வது சரியல்ல.

ஒரு வேளை படம் நிஜமாகவே நஷ்டம் என்றால் பட தயாரிப்பாளரிடம் தான் நஷ்டத்தை கேட்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் ரஜினியின் அரசியல் வருகையை அறிந்து சிலர் இதுபோல் செய்வதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

எம்ஜிஆர் போல பளபளப்பு இல்லாத ரஜினி எப்படி சாதித்தார்.?; திருமாவளவன் பேச்சு

அண்மைக்காலமாக ரஜினியின் சம்பளத்தை விஜய் முந்திவிட்டார் என்ற பொய்யான தகவல் வெளியானது.

அதுபோல் டிஸ்கவரி சேனல் சூட்டிங் சமயத்தில் ரஜினிக்கு விபத்து, சூட்டிங் கேன்சல் என்ற பொய்யான தகவலும் வெளியானது.

அதுபோல் வருமான வரி துறையை ரஜினி ஏமாற்றி விட்டதாக கோர்ட் அவருக்கு ரூ. 66.22 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக பொய் தகவலை முன்னணி செய்திதாள் வெளியிட்டது.

அதுபோல் தர்பார் இசை விழாவுக்கு வராத நயன்தாராவை அவர் வந்துள்ளதாகவும் ரஜினியின் பேச்சை கேட்டு வெட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இதுபோல் பொய்யான தகவல்களை பரப்புவதையே தொழிலாக சிலர் செய்து வருவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

தொடர்ந்து இதுபோல் ரஜினியை ஓரங்கட்ட பல அரசியல் வேலைகள் தமிழகத்தில் நடந்தேறி வருகிறது.

அரசியலின் மூலதனமே எதிர்ப்பு தானே… ஆகட்டும் ரஜினி அவர்களே…

சாதிக் கொடுமை தான் தேசத்தின் வியாதி சொல்கிறது கமல்கோவின்ராஜ் நடிக்கும் ” புறநகர் “

சாதிக் கொடுமை தான் தேசத்தின் வியாதி சொல்கிறது கமல்கோவின்ராஜ் நடிக்கும் ” புறநகர் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pura nagar stillsவள்ளியம்மாள் புரொடக்ஷன் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜிம்னாஸ்டிக் வீரர் கமல்கோவின்ராஜ் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ” புறநகர்

“கதாநாயகியாக சுகன்யா, அஸ்வினி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். மற்றும் தேனி முருகன், கதிரவகண்ணன், செல்வம், தயாளன், ரகு, கணேஷ், தாம்பரம் சிங்கம் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் அனல் அண்ணாமலை வில்லனாக அறிமுகமாகிறார்.
ஒளிப்பதிவு – விஜய் திருமூலம்

இசை – E.L.இந்திரஜித்

பாடல்கள் – ரா.தேவன், செல்லமுத்து, கானா லாலா

எடிட்டிங் – ஜெய்மோகன்

நடனம் – ரவிதேவ், சரண்பாஸ்கர், மெட்டிஒலி சாந்தி

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு – கமல்கோவின்ராஜ்

கதை, திரைக்கதை, வசனம், சண்டை, இயக்கம் – மின்னல் முருகன்

இவர் இலங்கை தமிழர்களின் துயரத்தை சொல்லும் “ எல்லாளன் “ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றி இயக்குனர் மின்னல் முருகன் கூறியதாவது…

ரஜினி பேர சொல்ல ஏன் பயம்?; சாகுற காலத்துல நடிக்கிறார்.. மன்சூர் அலிகான்

சாதிக் கொடுமை தான் தேசத்தின் வியாதி ‘‘ ஜாதிப் பிரச்சனையால் சமுதாயத்தில் வாழமுடியாத நாயகன் புகலிடம் தேடி புறநகரில் தஞ்சமடைகிறார். அந்த இடத்திலும் சமூகம் அவரை வாழவிடமால் செய்கிறது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நாயகன் எத்தகைய முயற்சிகளை எடுக்கிறார் என்பதை கமர்ஷியலாக சொல்லும் படம்தான் ‘புறநகர்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பை சென்னையைச் சுற்றிய புறநகரில் படமாக்கினோம். ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தாலும் சண்டைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் அனைவரும் ரசிக்கும்படியான படமாக எடுத்துள்ளேன்’’ இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கானா பாடல்கள் இந்த வருடத்தின் வெற்றிப்பாடல்கள் வரிசையில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் இயக்குனர் மின்னல் முருகன்.

தமிழகத்து அமிதாப் சத்யராஜ் தான் – P. வாசு

தமிழகத்து அமிதாப் சத்யராஜ் தான் – P. வாசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director P Vasuதயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின் திரைவாழ்வில் புகழ்மிக்க படம் “வால்டர் வெற்றிவேல்”. தற்போது “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார். திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட வால்டர் தேவாரம் அவர்கள் பேசியது…

எனக்கு சினிமா அவ்வளவாக தெரியாது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மூணாறு. அங்கிருந்தபோது சினிமா பற்றி எதுவும் தெரியாது. நான் சென்னை வந்த பிறகு எம் ஜி ஆர் ஆட்சியில் அதிகாரியாக இருந்தேன். ஒரு பிரச்சனையின் போது இந்திரா காந்தி தமிழகம் வந்திருந்தார். எங்கும் அவரது கூட்டம் நடத்த முடியாத போது என் தலைமையில் சென்னையில் கூட்டம் நடத்தினோம். எம் ஜி ஆர் அவர்கள் கூப்பிட்டு பாராட்டினார். இது மாதிரி நிறைய சம்பவங்கள் இருக்கிறது. சிவாஜியை நேரில் பார்த்திருக்கிறேன். சத்யராஜை எனக்கு நெருக்கமாக தெரியும். சிபியை சின்ன வயதில் பார்த்துள்ளேன். இங்கு இயக்குநர் வாசு வந்திருக்கிறார். அவர் வால்டர் வெற்றிவேல் படம் எடுத்த போது என்னை வந்து சந்தித்தார். இங்கு நான் வந்ததில் மகிழ்ச்சி. படத்தின் டிரெய்லர், பாடல்கள் நன்றாக இருந்தது. இப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள் நன்றி.

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் டப்பிங்கில் சத்யராஜ் செய்த சாதனை

இயக்குநர் P. வாசு அவர்கள் பேசியது…

ரஜினி க்ளாப் அடிக்க, பிரபு சார் கேமரா ஆன் பண்ண, விஜயகாந்த் இயக்க வால்டர் வெற்றிவேல் படம் ஆரம்பித்தது. நேற்று நடந்தது போல் இருக்கிறது. அப்போது சிபிராஜ் சிறுவனாக இருந்தார். இப்போது அவர் வால்டர் படத்தில் நடித்துள்ளார். சத்யராஜ் நாயகனாக நடிக்க நிறைய கஷ்டப்பட்டார். அது எனக்கு தெரியும். என்னைப் பொறுத்த வரை தமிழகத்து அமிதாப் சத்யராஜ் தான். சிபிராஜ் நடிக்க வருகிறார் என சொன்ன போது அவர் நிறைய கூச்ச சுபாவம் கொண்டவர் எப்படி நடிக்க போகிறார் என நினைத்தேன் ஆனால் தன்னை செதுக்கி கொண்டு இப்போது கலக்கி வருகிறார். இது போலீஸ் குடும்பம் எடுத்த படம் நன்றாகதான் இருக்கும். இது கண்டிப்பாக வெற்றி படமாகவே இருக்கும். எல்லோருக்கும் வாழ்த்துகள் என்றார்.

அமிதாப் பட அறிவிப்பை ரஜினியை தவிர யார் வெளியிட முடியம்.. : எஸ்ஜே. சூர்யா

நடிகர் பாவா செல்லத்துரை பேசியது…
திலகவதி மேடத்திற்கு நான் மூத்த மகன் போன்றவன். இப்படத்தில் நடிக்க கூப்பிட்ட போது சந்தோஷமாக வந்தேன். மிக நேர்த்தியாக அனைவரும் வேலை செய்தனர். ஒரே நேரத்தில் கச்சிதமாக வேலை பார்க்கும் இவர்களுடனும் கச்சிதம் என்றால் என்ன என கேட்கும் மிஷ்கின் படத்திலும் வேலை செய்தேன். இருவரும் தங்கள் பார்வையில் சினிமாவை வித்தியாசமாக அணுகினார்கள். அது சுவாரஸ்யமாக இருந்தது. இந்த கலைஞர்கள் கடுமையாக உழைத்துள்ளார்கள். இப்படம் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். கலைக்கு வெற்றி வசூல் எல்லாம் முக்கியமில்லை. காலம் கடந்தும் எத்தனை பேர் மனதில் நிற்கிறது என்பது தான் முக்கியம். வால்டர் படம் அப்படிபட்டதாக இருக்கும் வாழ்த்துகள் என்றார்.

நடிகை ரித்விகா பேசியது…

இந்த படத்தில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. இயக்குநர் இப்படத்திற்காக எனக்கு தான் முதலில் கதை சொன்னார். எனக்கு பிறகு தான் சிபிராஜ் வந்தார். இந்த படத்தில் என் கேரக்டர் நன்றாக வந்துள்ளது. படம் வெற்றியடைய வாழ்த்துகள்.

சிபிராஜ்ஜின் “வால்டர்” படத்தில் கௌதம் மேனனுக்கு பதிலாக நட்டி !

நடிகை ஷனம் ஷெட்டி

வால்டர் தேவாரம் சார் வந்தது மிகப்பெரிய ஆசிர்வாதம் போன்று இருந்தது. இயக்குநர் அன்பு எனக்கு ஒரு அற்புதமான கதாப்பாத்திரம் தந்துள்ளார். இதுவரை இவ்வளவு ஸ்டைலீஷாக செய்தது இல்லை. இப்படம் பணியாற்றியது குடும்ப நண்பர்களுடன் இருந்தது போன்றே இருந்தது. இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் நன்றி.

இயக்குநர் அருண்குமார் பேசியது…

எல்லா ஹீரோக்களுக்கும் போலீஸ் கதை என்பது அவர்கள் வாழ்வில் முக்கியமானது. போலீஸ் கதையில் நடிக்க அனைத்து ஹீரோக்களும் ஆசைப்படுவார்கள். இந்தப் படம் சிபிராஜுக்கு வெற்றிப்படமாக அமையும். படத்தின் டிரெய்லர் நன்றாக இருக்கிறது. படமும் எல்லோருக்கும் பிடிக்கும் படி இருக்கும் என்று நினைக்கிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகள்

இயக்குநர் ஷாம் ஆண்டம் பேசியது…

இயக்குநர் அன்பு ஹீரோயின்களுக்கு பிடித்த இயக்குநர். என்னிடம் ஏற்கனவே இந்தக்கதையை சொல்லியுள்ளார்.
சிபிராஜ் பள்ளியில் எனக்கு சீனியர். அப்போது குண்டாக இருப்பார்.இப்போது செம ஃபிட்டாக மாறி மாஸாக இருக்கிறார். வெற்றிக்காக அவர் எவ்வளவு பாடுபடுகிறார் என்பது தெரியும். “வால்டர் வெற்றிவேல்” எல்லோருக்கும் பிடித்த படம். “வால்டர்” படமும் கண்டிப்பாக ஜெயிக்கும். இயக்குநர் நன்றாக இயக்கியுள்ளார். எல்லோருக்கும் வாழ்த்துகள்

இயக்குநர் அறிவழகன் பேசியது…

வால்டர் வெற்றிவேல் படம் வந்த போது நான் ஸ்கூலில் படித்து கொண்டிருந்தேன். போலீஸ் படங்களுக்கு எல்லாம் இலக்கணம் போன்றது அந்தப்படம். “வால்டர்” எனும் தலைப்பே மிடுக்கானது. வால்டர் தேவாரம் அவர்கள் வந்து வாழ்த்தியது பெரும் பாக்கியம். சத்யராஜ் வந்திருந்தால் இந்த மேடை இன்னும் அழகாக இருந்திருக்கும். “வால்டர்” பட விஷுவல்கள் அட்டகாசமாக இருக்கிறது படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

நடிகர் நட்டி சுப்பிரமணியம் பேசியது…

சேவையா செய்ய வேண்டியது வியாபாரமா மாறினா என்ன ஆகும்னு சொல்ற படம் தான் வால்டர். 11.11 Productions படங்கள் தரமான படங்கள் செய்வார்கள் எனத் தெரியும். இந்த கதாப்பாத்திரம் கௌதம் மேனன் செய்ய வேண்டியது, அவர் விட்டு போனது,எனக்கு கிடைத்தது. அதற்காக அவருக்கு நன்றி. என் ரோல் என்ன என்பதை, படம் வந்தவுடன் பார்த்து சொல்லுங்கள் எல்லோருக்கும் நன்றி.

நடிகர் சார்லி பேசியது…

சினிமாவில் அப்பா இருந்தால் மகன் வரும்போது அவருடன் ஒப்பீடு வந்துகொண்டே இருக்கும். சிபிராஜ் அதிலிருந்து விலகி பெரும் கலைஞனாக வந்திருக்கிறார். இயக்குநர் அன்பு 100 படம் செய்த இயக்குநர் போல் இருந்தார். நன்றாக இயக்கியுள்ளார். ஒரு படத்தின் தயாரிப்பாளராக பிரபு திலக் நல்ல படம் செய்வேன் எனும் ஆற்றலை கண்டேன் அவருக்கு வாழ்த்துகள் படம் வெற்றி பெற வாழ்த்துகள் நன்றி.

இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் பேசியது…

நான் நிறைய நன்றி சொல்ல வேண்டியது இருக்கிறது. இப்படி ஒரு தயாரிப்பாளர்கள் கிடைத்தது எங்கள் அனைவருக்கும் பெரும் ஆசிர்வாதம். கேட்டது எல்லாமே கிடைக்கும். எனது படக்குழு நண்பர்கள் அனைவரும் பேருதவியாக இருந்தார்கள். படம் கண்டிப்பாக வெற்றி பெறும் நன்றி.

நாயகி ஷ்ரின் கான்ஞ்வாலா பேசியது…

இயக்குநர் அன்புவிற்கு நன்றி. அவர் தான் இந்தப்படத்தில் நடிக்க வைத்தார். இந்தப்படத்தில் பங்கு கொண்டது மிகப்பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் மிஷ்கின் பேசியது…

அன்பு எனும் பெயர் வைத்துள்ள இயக்குநருக்கு நன்றி. சமூகத்தின் லாஜிக் பிரச்சனைகளில் சிக்கியிருந்தேன். அன்பின் அழைப்பால் திலகவதி மேடம் அழைத்ததால் இங்கு வந்தேன். நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் நட்டி இந்தியாவின் மிக முக்கியமாக இருந்தவர். இன்று மிகச்சிறந்த நடிகராக மாறி நிற்கிறார் வாழ்த்துகள். சத்யராஜ் ஒரு மிகச்சிறந்த நடிகர் வெற்றி பெற்ற பின் சமூகத்திற்காக பேசுபவர். அவரது மகன் சிபிராஜ் தன்னை தானே வடிவமைத்து கொண்டிருக்கிறார். நான் விரைவில் அவருக்கு படம் செய்வேன். வால்டர் எனும் பெயரே பலம் வாய்ந்தது. நிறைய கதைகள் அந்தப் பெயர் பின்னால் இருக்கிறது. கண்டிப்பாக இந்தப்படம் ஜெயிக்கும் வாழ்த்துகள் அனைவருக்கும்.

நடிகர் சிபிராஜ் பேசியது….

இன்று இந்த விழா நடப்பது பெருமையாக இருக்கிறது. அப்பாவின் வாழ்வில் மிகப்பெரிய வெற்றிபடம் வால்டர் வெற்றிவேல். அந்த பெயரை வைத்தால் நிறைய ஒப்பீடுகள் வரும் என தெரியும் ஆனால் அதை ஈடு கட்டும் கதை படத்தில் இருப்பதால் படத்திற்கு வைத்தோம். இன்று வால்டர் வெற்றிவேல் படத்தை இயக்கிய வாசு சாரும், வால்டர் தேவாரம் அவர்களும் வந்திருந்து வாழ்த்தியது மிகப்பெரும் ஆசிர்வாதம். இயக்குநர் 2015லேயே இந்தகதையை என்னிடம் சொன்னார். காவல்துறை சம்பந்தமான குடும்பம் அவர்கள் தயாரிப்பில் நடிப்பது பெருமை. நட்டி சாருக்கு மிகப்பெரும் விசிறி. சதுரங்க வேட்டை படத்தை அவர் போல் யாரும் செய்ய முடியாது. அவருடன் நடித்தது சந்தோஷம். இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் U.அன்பு பேசியது….

சிபிராஜிடம் இரண்டு கதை சொன்னேன். அவர் தான் இந்த போலீஸ் கதையை எடுக்கலாம் என்றார். எட்டு வருடம் ஆனது இந்தப்படம் ஆரம்பிக்க, இடையில் வேறொரு ஹீரோவுடன் இந்தப்படம் ஆரம்பித்தது ஆனால் அப்போதும் ஆதரவாக இருந்தார். இந்தப்படம் நான் தான் செய்வேன் என தோன்றுகிறது என்றார். இப்போது அவருடன் இந்தப்படம் வருவது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். எங்களுக்கு எல்லாவித்ததிலும் துணையாக இருந்தார். ஒரு மிகப்பெரும் பிரச்சனை ஏற்பட்ட சமயத்தில் நட்டி சார் வந்து நடித்து தந்தார். அவருக்கு மிகப்பெரும் நன்றி. இந்தப்படம் பெரும் கஷ்டபட்டு உருவாக்கியுள்ளோம். எல்லோருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் பேசியது…

எனக்கு சினிமாவில் முதல் மேடை. புது மேடை. சினிமாவின் பின்னால் பெரிய உழைப்பு இருக்கிறது. நல்ல படங்கள் ஜெயிக்க வேண்டும். நாங்கள் நல்ல சினிமா செய்துள்ளோம். இப்படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும், இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் பிரபு திலக் பேசியது…
25 ஆண்டுகால ஓட்டம் இது. சினிமா மிகப்பெரும் கலை அதை அனைவரும் நேசிக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த மாதிரியான மாலைப்பொழுது நிகழ வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறேன் இன்று நிகழ்வது மிகப்பெரும் மகிழச்சி. இன்று இந்த மேடையில் இருப்பதற்கு சமுத்திரகனி ஒரு காரணம். இன்னும் பல நினைவுகள் பின்னால் இருக்கிறது. ஒவ்வொரு சினிமாவும் காலத்தின் மிகப்பெரும் பதிவு. இந்தப்படம் மிகப்பெருமையுடன் செய்துள்ளோம் இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்.

ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்கும் வால்டர் படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படப்புகழ் ஷ்ரின் கான்ஞ்வாலா நாயகியாக நடிக்க, சதுரங்கவேட்டை நாயகன் நட்டி மற்றும் சமுத்திரகனி, முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து இயக்கம் – U. அன்பு

இசை – தர்மா பிரகாஷ்

ஒளிப்பதிவு – ராசாமதி

படத்தொகுப்பு – S. இளையராஜா

பாடல்கள் – அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி

கலை இயக்கம் – A.R. மோகன்

நடனம் – தஸ்தா

புகைப்படம் – தேனி முருகன்

டிசைன்ஸ் – J சபீர்

சண்டைப்பயிற்சி இயக்கம் – விக்கி

இணை தயாரிப்பு – Dr. பிரபு திலக்

தயாரிப்பு மேற்பார்வை – K மனோஜ் குமார்

தயாரிப்பு – ஸ்ருதி திலக்

‘அர்த்தங்கி ரே’ படத்தில் ஏஆர்.ரஹ்மான்-அக்சய்குமார்-தனுஷ்

‘அர்த்தங்கி ரே’ படத்தில் ஏஆர்.ரஹ்மான்-அக்சய்குமார்-தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atrangi Re stillsகோலிவுட்டில் கலக்கிய போதே பாலிவுட் படத்தில் நடித்தார் தனுஷ்.

ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய 2 ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார்.

இதனையடுத்து ஹாலிவுட் படத்திலும் நடித்துவிட்டார்.

மீண்டும் கதை வசனம் எழுதி நடிக்கும் ‘அசுரன்’ தனுஷ்

தற்போது ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹிந்திப் படத்தில் நடிக்கிறார்.

அர்த்தங்கி ரே என இந்தப் படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர்.

ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இப்படத்தை இயக்குகிறார்.

அக்ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோரும் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

More Articles
Follows