ஜெயதீர்த்தா உருவாக்கிய அற்புத படைப்பு.; பரவசத்தில் ‘பனாரஸ்’ ஜையீத் கான்

ஜெயதீர்த்தா உருவாக்கிய அற்புத படைப்பு.; பரவசத்தில் ‘பனாரஸ்’ ஜையீத் கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

”இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக அற்புத படைப்பை உருவாக்கி இருக்கிறார். ‘பனாரஸ்’ படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்” என ‘பனாரஸ்’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் ஜையீத் கான் தெரிவித்துள்ளார்.

கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி, ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ‘பனாரஸ்’.

ஜெயதீர்த்தா

பட வெளியீட்டிற்கு முன் ரசிகர்களின் முன்னிலையில் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கன்னட திரை உலகத்தின் ‘சேலஞ்சிங் ஸ்டார்’ தர்ஷன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதற்கு முன் ‘பனாரஸ்’ படத்தில் இடம்பெற்ற பாடல்களும், படத்தின் முன்னோட்டமும் வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டன.

பனாரஸ்

நடிகர் தர்ஷன் பேசுகையில்…

” பனாரஸ் படத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். படத்தின் நாயகனும், நண்பருமான ஜையீத் எனக்கு திரையிட்டு காண்பித்தார். தொடக்கத்தில் ஜையீத் பணக்கார தந்தையின் மகன் என்றும், திறமை இல்லாதவர் என்றும் நினைத்தேன்.

ஆனால் படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். மேலும் கதை மற்றும் இயக்கம் சிறப்பாக உள்ளது. அதனால் இந்த படம் நிச்சயமாக மாபெரும் வெற்றியைப் பெறும்” என்றார்.

தர்ஷன்

படத்தின் நாயகனான ஜையீத் கான் பேசுகையில்…

” இன்று என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். எனது வாழ்க்கையில் முக்கியமான இரண்டு சக்திகள் இங்கே என்னுடன் உள்ளனர்.

எனது மூத்த சகோதரர் மற்றும் எனது தந்தையைப் போன்ற தர்ஷன் இங்கே இருக்கிறார். தர்ஷன் தொடக்கம் முதலே எனக்கு உறுதுணையாக இருக்கிறார்.

ஜையீத் கான்

இந்த தருணத்தில் என்னுடைய தந்தைக்கு வாக்குறுதி ஒன்றை அளிக்கிறேன். அவரை இழிவுபடுத்தும் செயலை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என உறுதியளிக்கிறேன்.

மேலும் எனது தந்தையினால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன். ‘பனாரஸ்’ படத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.

இந்த படத்திற்காக நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கியுள்ளார். நவம்பர் மாதம் நான்காம் தேதி நாடு முழுவதும் வெளியாகிறது.

இந்த படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம். ஒவ்வொருவரும் இந்த படத்தைப் பார்த்து என்னை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

ஜையீத் கான்

என் கே ப்ரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் ‘பனாரஸ்’ திரைப்படம் நவம்பர் 4ம் தேதி அன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தமிழில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.

‘பனாரஸ்’ படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சுஜய் சாஸ்திரி, தேவராஜ், அச்யுத் குமார், பர்க்கத் அலி, சப்னா ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜையீத் கான்

அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்திருக்கிறார்.

காசியை கதைக்கள பின்னணியாக கொண்டு அமானுஷ்ய விசயங்களுடன் கூடிய காதல் கதை என்பதால், ‘பனாரஸ்’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

பனாரஸ்

Banaras Pre release Event in Hubli

MLA Zameer Ahmed Khan’s son Zaid Khan’s much awaited film is Banaras. The pre-release event of the movie, which is written and directed by Jayatheertha of Bell Bottom fame, was held in a grand manner on Saturday evening at the Railway Sports Ground premises in Hubballi.

Challenging Star Darshan, Vinod Prabhakar, Nenapirali Prem, V. Nagendra Prasad, director Jayathirtha, along with many others participated in this grand Pre-release event of Banaras which is already popular because its beautiful songs and trailer.

பனாரஸ்

With enthusiasm all the various mesmerizing dance-songs performed in the program, which lasted for three hours.

Actor Darshan who spoke at the event said, “I have already seen the film. Zaid had shown me the movie earlier, and initially I thought, he is rich father’s son, who is not talented, but after watching the film I was surprised. He has acted so brilliantly. He has done a great job. Also the story and direction is outstanding.”

“The film will definitely be a huge success,” he added.

Speaking to the media, Zaid Khan said, “Today is a very big day in my life, two of my life’s biggest forces are present with me right here. Darshan who is like my elder brother and my father are here. I promise dad on this platform that I will never do something that will demean him. I am standing here today because of my father. Also, Darshan has been supporting me since the beginning.”

பனாரஸ்

Talking about Banaras movie he added, “The film has many special features. I worked very hard for this film. Jayathirtha has made a wonderful film for me. The film is releasing across the country on November 4, there is hope that the film will win the hearts of the people.” Zaid requested each and everyone to watch it and bless him. to watch the film.

Banaras is a Pan India Kannada film that has been made into Telugu, Tamil, Hindi and Malayalam simultaneously. Tilak Raj Ballal has produced the film. Sonal Monteiro is the leading lady opposite Zaid Khan. Sujay Shastri, Devraj, Achyuth Kumar, Sapna Raj, Bharkat Ali have played major roles in the film. Ajaneesh Loknath has scored the music.

பனாரஸ்

Banaras is ready to be released on November 4th.

குடும்ப அமைப்பு : உள்ளே வெளியே வாழும் இருவர்.; வெற்றிமாறன் – ஜெயம்ரவி ஆதரவு

குடும்ப அமைப்பு : உள்ளே வெளியே வாழும் இருவர்.; வெற்றிமாறன் – ஜெயம்ரவி ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Komala Hari Pictures மற்றும் One Drop Ocean Pictures நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் ஒரு அழகான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அன்ன பூரணி”.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் முன்னணி நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர்.

கதாப்பாத்திரங்களின் இயல்பையும், மாறுபட்ட கதைக்களத்தையும் வெளிப்படுத்தும்படியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில், திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’ , குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ ஆகிய இருவரின் பயணமே இந்தப்படம்.

பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை, கருத்து சொல்லும்படியாக இல்லாமல் ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம், ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக சொல்லியுள்ளது இப்படம்.

பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்தின் பாடல்களை எழுதியதுடன் படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார்.

மராத்தி ஒளிப்பதிவாளர் ஹெக்டர் ஒளிப்பதிவு செய்ய, 96 புகழ் கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தினை அமரன் செய்துள்ளார்.

லாஸ்லியா, லிஜோமோல் ஜோஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன், தோழர் ராஜீவ் காந்தி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இப்படத்தின் இசை உரிமையினை TIPS MUSIC பெற்றுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Annapoorni first look launched by Vetrimaran and Jayam Ravi

நடிகர் யோகி பாபுவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது..!

நடிகர் யோகி பாபுவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகி பாபு.

இவர் மஞ்சு பார்கவியை பிப்ரவரி 2020 இல் திருமணம் செய்து கொண்டார்.

தம்பதியருக்கு மூத்த மகன் பிஎம் வேஷகன் கடந்த ஆண்டு பிறந்தார்.

இந்நிலையில், தீபாவளி ஆன நேற்று இரண்டாவது முறையாக தந்தையாகியுள்ளார் யோகி பாபு.

யோகி பாபு மற்றும் மஞ்சு பார்கவி தம்பதிக்கு இப்போது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

actor Yogi Babu’s second child was born

நாயகர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உதிக்கிறார்கள்.; பிரபாஸ் தீபிகா அமிதாப் இணைந்த பட போஸ்டர் வெளியானது

நாயகர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உதிக்கிறார்கள்.; பிரபாஸ் தீபிகா அமிதாப் இணைந்த பட போஸ்டர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெபெல் நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று, முன்னணி இயக்குநர் நாக் அஸ்வின் தலைமையிலான படக்குழு, பிரத்யேக போஸ்டரை கவனமீர்க்கும் வாசகங்களுடன் வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது.

திரைப்பட தயாரிப்புகளில் ஈடுபட்டு 50வது ஆண்டை கொண்டாடும் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா படைப்பாக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கும் திரைப்படம் ‘ புரொஜெக்ட் கே’.

இதில் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகர் அமிதாப்பச்சன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இருப்பினும் ரசிகர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க படத்தை பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த தருணத்தில் படத்தின் நாயகனான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு பிரத்யேகமான போஸ்டரை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது.

அந்த போஸ்டரில் நடிகர் பிரபாஸின் கை காற்றில் தன் சக்தியைக் காட்டுவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனுடன் ‘நாயகர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உதிக்கிறார்கள்’ என்ற வாசகத்தை இடம்பெற வைத்து பிரபாஸின் நாயக பிம்பத்தை செறிந்த வீரத்துடன் விவரித்திருக்கிறார்கள்.

ரெபெல் ஸ்டார் பிரபாஸின் பிறந்தநாளுக்கு அவர் நடித்து வரும் ‘ புராஜெக்ட் கே’ படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

 புரொஜெக்ட் கே

Team Project K Wishes Rebel Star Prabhas On His Birthday

‘சர்தார்’ பிரில்லியண்ட்.. கார்த்தி நீங்கள் ஒரு பவர் ஹவுஸ்..; சாந்தனு பாராட்டு

‘சர்தார்’ பிரில்லியண்ட்.. கார்த்தி நீங்கள் ஒரு பவர் ஹவுஸ்..; சாந்தனு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடித்த திரைப்படம் ‘சர்தார்’.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி உலகெங்கும் வெளியானது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இதில் கார்த்தி உடன் ராஷி கண்ணா ரஜிஷா விஜயன் லைலா முனீஸ்காந்த் சங்கி பாண்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தண்ணீர் வியாபாரத்தில் பேசப்பட்ட அரசியலை இந்த படம் தோலுரித்துக் காட்டியிருந்தது.

தற்போது இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் இந்த படத்தை நடிகர் சாந்தனு பாராட்டி இருக்கிறார்.

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில்..

‘சர்தார் பிரில்லியண்ட்.. கார்த்தி நீங்கள் ஒரு பவர் ஹவுஸ்” என பாராட்டி இருக்கிறார்.

பிஎஸ் மித்ரன் உங்களின் ஆராய்ச்சியும் உங்களது மேக்கிங்கும் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. ஜிவி பிரகாஷ் வாழ்த்துக்கள்..” என பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.

#Sardar Brilliant??
@Psmithran Bang On research and filmmaking????
@Karthi_Offl What a powerhouse you are brother??
@AntonyLRuben Your a master when it comes to cuts ????
Semma visuals @george_dop
Loved the film
Best wishes team @gvprakash @Prince_Pictures @dhilipaction

உலகளாவிய ஹாலிவுட் படத்தில் நடிக்கும் உலகநாயகன் மகள்

உலகளாவிய ஹாலிவுட் படத்தில் நடிக்கும் உலகநாயகன் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக நாயகன் கமலஹாசனின் மகள், பாடகி, இசையமைப்பாளர், பாடலாசிரியை, நடிகை என பன்முக ஆளுமையுடன் உலா வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகும் புதிய ஹாலிவுட் திரைப்படத்திற்கு ‘தி ஐ’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது கிரீஸ் நாட்டில் நடைபெறுகிறது.

எமிலி கார்ல்டன் எழுதி, டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் தயாராகும் ‘தி ஐ’ எனும் படத்தினை ஃபிங்கர்பிரிண்ட் ஃபிலிம்ஸ் மற்றும் அர்கோனாட்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது கிரிஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் மற்றும் கோர்பு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இதில் கதையின் நாயகியான ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்தி, தமிழ், தெலுங்கு என இந்திய திரையுலகம் முழுவதும் தன் திறமையை நிரூபித்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், ‘டிரெட்ஸ்டோன்’ எனும் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரின் முக்கிய வேடத்தில் நடித்து, சர்வதேச அளவில் அறிமுகமானார்.

இவர் இசை திறமையால் உலகம் முழுவதிலும் உள்ள இசை ஆர்வலர்களிடத்தில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

இதன் காரணமாக தற்போது திரைப்படங்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார்.

இவர் தற்போது நடித்து வரும் ‘தி ஐ’ எனும் ஹாலிவுட் திரைப்படம் உளவியல் திரில்லர் ஜானரில் உருவாகும் திரைப்படம். கதைப்படி ஒரு விதவை பெண், தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய சாம்பலை கரைப்பதற்காக கிரேக்க தீவுக்கு பயணிக்கிறார்.

அதன் போது ஏற்படும் உளவியல் சார்ந்த திகில் திருப்பங்களும், சம்பவங்களும் தான் படத்தின் திரைக்கதை. இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகியான ஸ்ருதிஹாசனுடன் ‘தி லாஸ்ட் கிங்டம்’ மற்றும் ‘ஒன் டே’ ஆகிய படங்களில் நடித்த பிரபல நடிகர் மார்க் ரௌலி, ‘ட்ரூ ஹாரர்’ படப் புகழ் நடிகை அன்னா சவ்வா, ‘தி டச்சஸ்’ பட புகழ் நடிகை லிண்டா மார்லோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் மெலனி டிக்ஸ் பேசுகையில்,…

‘ இயக்குநர் டாப்னே ஷ்மோன் மற்றும் திரைக்கதை ஆசிரியர் எமிலி கார்ல்டன் ஆகியோரின் கூட்டணியில் அற்புதமான படைப்பை உருவாக்குகிறோம். ‘தி ஐ’ நான்காண்டு கால உழைப்பில் உருவானது.

எங்களுடைய குழுவில் திறமைசாலிகள் அதிகம் உள்ளனர். மேலும் முழுமையான ஒத்துழைப்பை அளிக்கும் பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குழுவும் உள்ளது. எங்களுடைய இந்த படைப்பு அசாதாரணமானது. அத்துடன் எங்களின் இலட்சியத்தை எட்டும் உற்சாகத்தையும் பெற்றிருக்கிறோம்.” என்றார்.

நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில்…

” இசையாலும், சினிமா எனும் காட்சி ஊடகத்தின் மூலமாகவும் கதைகளை பகிர்ந்து கொள்வது என்பது என்னுடைய கனவு. இந்த கனவினை தற்போது சர்வதேச அளவில் விரிவுப்படுத்தி இருக்கிறேன். ‘தி ஐ’ போன்ற அற்புதமான படைப்பில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திறமையான பெண்மணிகளால் வழி நடத்தப்படும் அணி என்பது இதன் கூடுதல் சிறப்பு. ‘

தி ஐ’ ஒரு அழகான கதை. இதனை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.” என்றார்.

இதனிடையே WWF எனப்படும் (World Wildlife Fund for Nature) வனவிலங்குகளை இயற்கையாக பாதுகாப்பதற்கான நிதியம் எனும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் இந்திய பிராந்தியத்திற்கான விளம்பர தூதுவராக நடிகை ஸ்ருதிஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிறுவனம் உலக அளவில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு ஏற்ப செயல்படுவதற்கு ஏற்ற வகையில் நிறுவனங்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டு முதல் 26 நாடுகளில் 1500 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறது.

இந்த திரைப்படத்திலும் பசுமையான இயற்கை சூழல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் படப்பிடிப்பு நடத்துவது குறித்த ஆலோசனையை வழங்கியிருக்கிறது. இதற்காக ஸ்ருதிஹாசனின் பங்களிப்பு அதிகம் என இந்த குழுவினர் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows