‘தர்பார்’ வசூலை தகர்க்க வாட்ஸ்அப்பில் ஆப்பு; போலீசில் லைகா புகார்

‘தர்பார்’ வசூலை தகர்க்க வாட்ஸ்அப்பில் ஆப்பு; போலீசில் லைகா புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbar scences goes viral in WhatsApp Lyca filed police caseலைகா தயாரிப்பில் ரஜினி முருகதாஸ் அனிருத் ஆகியோரது கூட்டணியில் உருவான தர்பார் படம் நேற்று முந்தைய தினம் ஜனவரி 9ல் ரிலீசானது.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தர்பார் பட வசூலை தகர்க்க சிலர் திட்டமிட்டூள்ளனர்.

தியேட்டரில் தர்பார் படம் பார்க்கும்போதே மொபைல் போனில் படம் பிடித்து அதை 3 பாகங்களாக பிரித்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளனர்.

மேலும் அத்துடன் ஒரு ஆடியோ பதிவையும் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

அதில்… தர்பார் படத்தை தியேட்டர்ல போய் யாரும் பார்க்க கூடாது. இந்த வீடியோவை எல்லாருக்கும் பகிருங்கள் என பேசியுள்ளான்.

இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த நிலையில் லைகா தயாரிப்பு தரப்பு சார்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர்கள் கே.ராஜன் மற்றும் டி.சிவா இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
தலைவர் ரஜினியின் தர்பார் படம் நல்ல வசூலை செய்து வருகிறது. யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஜல்லிக்கட்டு காளை தர்பார் படம்.

ஆனால் இது போல வாட்ஸ் அப்பில் பரப்பும் தீவிரவாதிகளை சும்மா விடக்கூடாது. அது கொலை குற்றவாளிகளுக்கு நிகரானவர்கள் அவர்கள்.

அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாட்ஸ் அப்பில் அனுப்புபவர்களும், பார்ப்பவர்களையும் டிராக் செய்து வருகின்றனர்.

அதனால் மக்கள் யாரும் வாட்ஸ் அப்பில் பார்க்கவேண்டாம்” என அவர்கள் தெரிவித்தனர்.

Darbar scences goes viral in WhatsApp Lyca filed police case

வடிவேலு ஏற்படுத்திய ரூ 14 கோடி நஷ்டம்; எலி படத்தயாரிப்பாளர் புகார்

வடிவேலு ஏற்படுத்திய ரூ 14 கோடி நஷ்டம்; எலி படத்தயாரிப்பாளர் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Eli Producer Sathish complaint against Vadivelu தமிழ் சினிமா ரசிகர்களை கிட்டதட்ட 20 வருடங்களாக தன் நகைக்சுவையால் சிரிக்க வைத்து மகிழ்வித்தவர் நடிகர் வடிவேலு.

கடந்த சில வருடங்களாக சினிமாவில் இவர் நடிக்கவில்லை. கமலின் தலைவர் இருக்கின்றான் படத்தில் நடிப்பார் என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வடிவேலுவை நாயகனாக வைத்து எலி படத்தை தயாரித்த சதீஷ்குமார் என்பவர் தனக்கு அந்த படம் மூலம் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.

வடிவேலுவை வைத்து படம் எடுக்க ஒரு நிறுவனம் தொடங்கி எலி படத்தை தயாரித்தேன். ஆனால் எனக்கு ரூ.14 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது.

அந்த நஷ்டத்தை ஈடு கட்ட 2 படங்களில் நடித்து தருவேன் என கூறினார். ஆனால் அவர் செய்யவில்லை. தற்போது என்னையும் எனது குடும்பத்தினரையும் மிரட்டுகிறார். மேலும் வடிவேலுக்கு சம்பள பாக்கி இருப்பதாக அவரது உறவினர் பணம் கேட்டு மிரட்டுகிறார்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீசிலும் புகாரும் அளித்திருந்தார்.

இதனை மறுத்துள்ள வடிவேலு கூறியதாவது.. என்னை களங்கப்படுத்தவும், என் எதிர்காலத்தை வீணாக்கவும் சிலர் தவறான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர்.” என கூறினார் வடிவேலு.

Eli Producer Sathish complaint against Vadivelu

ஏ.எம். ரத்னத்துடன் இணைய மறுத்தாரா நடிகர் அஜித்.?

ஏ.எம். ரத்னத்துடன் இணைய மறுத்தாரா நடிகர் அஜித்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thala Ajiths next movie with Producer AM Ratnamகமல் நடித்த இந்தியன், விஜய் நடித்த கில்லி, சிவகாசி, விக்ரம் நடித்த பீமா மற்றும் அஜித் நடித்த ஆரம்பம், வேதாளம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம்.

இந்த நிலையில இவர் மீண்டும் அஜித் படத்தை தயாரிக்க அணுகியதாக ஆனால் அதில் நடிக்க அஜித் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் பரவியது.

ஆனால் இது குறித்து ஏ.எம்.ரத்னம் தரப்பில் விசாரித்தபோது தற்போது அவர் தமிழ் படமே தயாரிக்கவில்லை எனவும் தெலுங்கு படத்தை தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Thala Ajiths next movie with Producer AM Ratnam

‘தர்பார்’ க்ளைமாக்ஸில் நடித்த குட்டி பையன் ரஜினி பேரன்.?

‘தர்பார்’ க்ளைமாக்ஸில் நடித்த குட்டி பையன் ரஜினி பேரன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis grand son is not part of Darbar movieமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி (நேற்று முந்தையா நாள்) வெளியானது.

அனிருத் இசையமைத்திருந்த இந்த படத்தை லைகா தயாரித்து இருந்தது.

இந்த படத்தை பார்த்த அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தர்பார் பட க்ளைமாக்ஸில் ஒரு குட்டி பையன் நடித்திருந்தான். அவர் ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் மகன் வேத் என தகவல்கள் பறந்தன.

ஆனால் அது உண்மையில்லை என சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Rajinis grand son is not part of Darbar movie

‘தர்பார்’ ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் மகன் நடிகரானார்

‘தர்பார்’ ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் மகன் நடிகரானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Santhosh Sivans son joins with Dulquers Varane Avashyamundதளபதி படத்திற்கு பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் நடிக்க காத்திருந்தேன். ஆனால் அது தர்பார் படத்தின் மூலம் தற்போது தான் நிறைவேறியது. அதற்கு 27 வருடங்கள் ஆச்சு என பேசியிருந்தார் ரஜினிகாந்த்.

அந்தளவிற்கு பிஸியான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆவார்.

இந்த நிலையில் இவரது மகன் சர்வஜித் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

துல்கர் சல்மான் யகனாக நடிக்கும் ‘வரனே ஆவஷ்யமுண்டு’ என்ற படத்தில் தான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Santhosh Sivans son joins with Dulquers Varane Avashyamund

ரஜினியின் ‘தர்பார்’ முதல் நாள் வசூல் வேட்டை ரூ. 118 கோடியா..?

ரஜினியின் ‘தர்பார்’ முதல் நாள் வசூல் வேட்டை ரூ. 118 கோடியா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Star Rajinikanths Darbar set Box office on fire சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று ஜனவரி 9ஆம் தேதி வெளியான படம் தர்பார்.

இந்த படம் மிக பெரிய எதிர்பார்ப்பை சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது.

உலகமெங்கும் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கிட்டதட்ட 5000 தியேட்டர்களில் வெளியானதாக கூறப்படுகிறது.

திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் மட்டும் ரூ. 2.28 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் உலகளவில் ஒரேநாளில் ரூ. 118 கோடியை வேட்டையாடிதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை பிரபல விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் தனஞ்செயன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தயாரிப்பு நிறுவனமான லைகா எந்த தகவலையும் வெளியிடவில்லை.

ஒருவேளை இது உண்மையாகும் பட்சத்தில் என்றைக்குமே சூப்பர் ஸ்டார் தான் நிரந்தர வசூல் மன்னன் என்பதை சினிமா உலகிற்கு ரஜினி உணர்த்தியிருக்கிறார் எனலாம்.

ச்சும்மா கிழி..பொங்கல் சமயத்தில் தீபாவளி விருந்து. தர்பார் விமர்சனம் இங்கே (4/5)

Super Star Rajinikanths Darbar set Box office on fire

More Articles
Follows