விஜய் டிவியின் வில்லா டூ வில்லேஜ் ரியாலிட்டி ஷோவில் சனம்ஷெட்டி

விஜய் டிவியின் வில்லா டூ வில்லேஜ் ரியாலிட்டி ஷோவில் சனம்ஷெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sanam Shetty going to participate in Vijay TV Villa to Village Reality show‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி ‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை முதல் ஒளிபரப்புகிறது.

ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதில், 40 நாட்கள் கிராமத்துக்கு சென்று அங்கு வேலை செய்து அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை வைத்து எந்தவித வசதியும் இல்லாமல் அன்றாடம் வாழ்க்கை நடத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

இதில், 12 பெண்கள் கலந்து கொள்கின்றனர். இதுவரை கிராமத்து பக்கமே போகாத இந்த பெண்களை வைத்து முதன் முறையாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

ஒவ்வொரு வாரமும், இறுதியில் கிராமத்து மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். போட்டியின் இறுதி வெற்றியாளரை கிராம பஞ்சாயத்து முடிவு செய்யும்.

இந்த 12 பெண்களில் சினிமாவில் இருந்து கலந்து கொண்டுள்ள ஒரே பெண், நடிகை சனம் ஷெட்டி மட்டுமே.

பெங்களுரில் பிறந்து லண்டனில் சாப்ட்வேர் எஞ்சினியர் முடித்துள்ளார். லண்டனில் ஒரு டாக்குமெண்டரி மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அம்புலி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கதம் கதம், சவாரி, சதுரன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதை தொடந்து மலையாளம் , தெலுங்கு , கன்னடம் என 4 மொழிகளிலும் நடித்து வருகிறார். 2016ம் ஆண்டின் மிஸ்.சவுத் இந்தியா இரண்டாம் இடம் பெற்றார். நிறைய டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது கன்னடத்தில் அதர்வா, தமிழில் டிக்கெட், மேகி போன்ற நடித்து வரும் நிலையில் , தற்போது விஜய் தொலைக்காட்சி துவங்கியிருக்கும் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் ஒரு கண்டெஸ்டண்டாக கலந்து கொண்டுள்ளார்.

Sanam Shetty going to participate in Vijay TV Villa to Village Reality show

கமல்-சிவகார்த்திகேயன் வழியில் பெண்ணாக மாறிய அனிருத்

கமல்-சிவகார்த்திகேயன் வழியில் பெண்ணாக மாறிய அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudhஎன்னதான் ஆண் நடிகர் அழகாக இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே பெண் வேடம் அச்சு அசலாக பொருந்தும்.

அவ்வை சண்முகி படத்தில் கமல்ஹாசன் மற்றும் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் ஆகியோர் பெண் வேடமிட்டு அசத்தியிருந்தனர்.

பெண் வேடத்தில் இருப்பவர் இந்த நடிகர் என்று சொன்னால் மட்டுமே அவர்களை நம்மால் கண்டு பிடிக்க முடிந்தது.

தற்போது இசையமைப்பாளர் அனிருத் பெண் வேடமிட்டுள்ள ஒரு படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது ஏதோ ஒரு புதுமுக நடிகையோ? என்றுதான் பலரும் நினைத்திருந்தனர்.

ஆனால் அது அனிருத் என்று சொன்னபிறகுதான்… அட ஆமால்ல என்று நம்மை அசர வைக்கிறது அந்த படம்.

இதைப் பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் இந்த போட்டோ எதற்காக எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

தென்னிந்தியாவில் பிரபலமான எடிட்டர் சேகர் காலமானார்

தென்னிந்தியாவில் பிரபலமான எடிட்டர் சேகர் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The Legendary Editor Sekar passed awayதென்னிந்திய திரையுலகின் முக்கியமான எடிட்டர் சேகர். இவருக்கு வயது 81. இன்று (மார்ச் 22) திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலை 6 மணியளவில் காலமானார்.

இவரது மனைவியின் பெயர் சுந்தரி சேகர். இவருக்கு தீபலட்சுமி, திலகவதி, நித்யா என்று 3 பெண் குழந்தைகள்.

இவர்கள் மூவருக்குமே திருமணமாகிவிட்டது. இவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.

பாசில், சித்திக் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு ஆஸ்தான எடிட்டராக சேகர் பணிபுரிந்திருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவின் முதல் சினிமாஸ்கோப் படம் (தச்சோலி அம்பு), முதல் 70 எம்.எம் (படையோட்டம்) மற்றும் இந்தியாவின் முதல் 3டி படமான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ ஆகிய படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.

தான் எந்த ஒரு சாதனை செய்தாலும், அதை தன் வேலை தான் பேச வேண்டும், தான் பேசக்கூடாது என்ற குறிக்கோளுடனே வாழ்ந்திருக்கிறார்.

‘வருஷம் 16’ படத்துக்காக தமிழக அரசு விருது மற்றும் ‘1 முதல் 0 வரை’ மலையாள படத்துக்காக கேரள அரசின் விருது வென்றிருக்கிறார்.

தமிழில் ‘சாது மிரண்டால்’ இவர் பணிபுரிந்த கடைசிப் படம். அதற்குப் பிறகு தனது உதவியாளர்களை வைத்து படங்களுக்கு எடிட் செய்து, அவர்களுடைய பெயரையே தலைப்பில் போடவைத்து அழகு பார்த்தவர் எடிட்டர் சேகர்.

The Legendary Editor Sekar passed away

மோடி மீண்டும் PM; ரஜினி CM.? கணித்து சொன்ன காளஹஸ்தி ஜோதிடர்

மோடி மீண்டும் PM; ரஜினி CM.? கணித்து சொன்ன காளஹஸ்தி ஜோதிடர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vilambi ugadi predictions rajini will be Chief Minister of Tamilnaduதெலுங்கு மற்றும் கன்னட வருடப் பிறப்பான விளம்பி நாம வருடம் கடந்த 18ஆம் தேதி பிறந்தது.

அப்போது வாயு ஸ்தலமான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆஸ்தான குருக்கள் விளம்பி பஞ்சாங்கத்தை பக்தர்கள் முன் படித்து அதன் பலன்களை கூறியிருந்தார்.

அவர் ஜாதக பலன்களை சொல்லிக் கொண்டிருக்கும் போது…

2019ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடியே பிரதமர் ஆவார் என்றார்.

ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜக ஒரு நாடாளுமன்ற தொகுதிகளில் கூட வெற்றி பெறாது எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு குறையும் என கூறினார்.

தமிழக அரசியலில் நடிகர் ரஜினிகாந்துக்கு வெற்றி கிடைக்கும் எனவும் விளம்பி நாம ஆண்டின் பஞ்சாங்க வாக்கினை ராமலிங்கேஸ்வர குருக்கள் வாசித்தார்.

Vilambi ugadi predictions rajini will be Chief Minister of Tamilnadu

மீண்டும் இயக்குனராகும் சுரேஷ்மேனன்; புதியமுகம் 2 படத்தை இயக்குகிறார்

மீண்டும் இயக்குனராகும் சுரேஷ்மேனன்; புதியமுகம் 2 படத்தை இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pudhiya-Mugamசினிமாவில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக பல அவதாரங்களை எடுத்து சாதித்திருக்கும் சுரேஷ் மேனன், சினிமா மீது அளவு கடந்த காதலை வைத்திருப்பவர்.

இருபது ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களின் மூலம் மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார்.

இது குறித்து சுரேஷ் மேனன் கூறும்போது…

“சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு. நான் நடிக்காமல் இருந்த காலகட்டங்களில் பல படங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள், ஆனால் என்னை எதுவும் அவ்வளவாக ஈர்க்கவில்லை.

பின்னர் எனக்கு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களில் நடிக்க நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன.

அதில் நடித்ததற்கு நேர்மறை விமர்சனங்களும், பாராட்டுக்களும் கிடைத்தன.

தற்போது வரும் இளம் இயக்குனர்கள் சிறப்பான, துணிச்சலான கதாபாத்திரங்களை எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ் சினிமா துணிச்சலான கதைகள் வரும் ஒரு சிறப்பான கட்டத்தில் இயங்கி வருகிறது.

எதிர்காலத்தில் இது போல சிறப்பான, அர்த்தமுள்ள அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். நான் இயக்குவதற்காக புதிய முகம் படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி வைத்திருக்கிறேன்.

அதற்காக நான் அவசரப்படவில்லை. சென்னை காவல்துறைக்காக போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் என்னுடைய பயனுள்ள நேரத்தை செல்வழித்து வருகிறேன்.

கழிவறைகள் வடிவமைப்பது கட்டுவது என சமூக செயல்பாடுகளிலும் பங்கு ஈடுபட்டு வருகிறேன். சமூக வாழ்க்கையின் அனுபவங்கள் எனக்குள் இருக்கும் இயக்குனருக்கும், நடிகருக்கும் சிறப்பான விஷயங்களை கொடுத்து வருகிறது” என்றார்.

Actor Suresh Menon going to direct Pudhiya Mugam 2

காதலனை ஹீரோவாக்கும் தயாரிப்பாளர் நயன்தாரா; யாருக்கு போட்டி.?

காதலனை ஹீரோவாக்கும் தயாரிப்பாளர் நயன்தாரா; யாருக்கு போட்டி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara going to produce movie Vignesh Shivan as heroஅழகான திறமையான நடிகை என பெயரெடுத்தவர் நடிகை நயன்தாரா. இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கி 12 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் இன்று வரை நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.

ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

தன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளிலே இவர் கலந்துக் கொள்ளாதபோதும் இவரது கால்ஷீட்டுக்காக டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் காத்திருக்கின்றனர்.

இப்படியாக சினிமாவில் இவர் ஜொலித்துக் கொண்டிருந்தாலும் இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல காதல் தோல்விகளை கடந்து வந்திருக்கிறார்.

நடிகர் சிம்பு உடன் காதல் கொண்டிருந்தார். ஆனால் அந்த உறவு முறிந்தது.

அதன்பின்னர் நடிகர் பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருந்த இவர் திருமணம் வரை சென்ற பின், கருத்து வேறுபாடுகளால் அவரை விட்டு பிரிந்தார்.

அவருக்காக மதம் மாறி, பிரபுதேவாவின் பெயரை தன் கைகளில் கூட பச்சை குத்திக் கொண்டிருந்தார்.

அதன்பின்னர் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி நடித்துக் கொண்டிருந்தபோது நானும் ரௌடிதான் பட இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கம் கொள்ள ஆரம்பித்தார்.

இவர்களின் காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர்.

நிஜ காதலர்களை மிஞ்சும் அளவில் நெருக்கமான புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் பதிவிட்டும் வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்காக சிவகார்த்திகேயன் படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

ஆனால் சில பிரச்சினைகளால் அந்த படத்தை ராஜேஷ் இயக்கவுள்ளார்.

இதனையறிந்த நயன்தாரா, இனி நீங்களே படத்தை இயக்கி ஹீரோவாக நடியுங்கள். படத்தை நான் தயாரிக்கிறேன் என்ற கூறிவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இனி விக்னேஷ் சிவனை நாம் ஹீரோவாக பார்க்கலாம். நயன்தாரா நாயகியாக நடிப்பாரா? என்ற தகவல்கள் இல்லை.

அதெல்லாம் சரிதான். இந்த புதிய ஹீரோ வேடம் யாருக்கு போட்டி..?

Nayanthara going to produce movie Vignesh Shivan as hero

More Articles
Follows