தர்ஷன் யாருன்னே தெரியாது.; நான் கண்ட உண்மை சம்பவமே ‘நாடு’ – இயக்குனர் சரவணன்

தர்ஷன் யாருன்னே தெரியாது.; நான் கண்ட உண்மை சம்பவமே ‘நாடு’ – இயக்குனர் சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு’. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அழகுச்சிலை மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து இயக்குனர் சரவணனுடன் இணைந்து பயணிக்கும் இசையமைப்பாளர் சத்யா தான் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் இளையராஜா இந்த படத்தின் கலை வடிவமைப்பை கவனித்துள்ளார். பொன் கதிரேசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்தப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நவம்பர் 11 மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குனர் சரவணன் பேசும்போது,

“இப்போது சினிமாவில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் ரொம்பவே புத்திசாலித்தனமான, அறிவுக்கூர்மை வாய்ந்த கதாபாத்திரங்களாகவே காட்டப்படுகின்றன. நாங்கள் அதிலிருந்து விலகி எளிய மனிதர்கள் பற்றிய கதையாக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் மலைவாழ் மக்கள் பிரச்சனையை பேசி உள்ளோம்.

கொல்லிமலை பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கொல்லிமலைக்கு சென்றிருந்த சமயத்தில் நேரிலேயே நான் கண்ட ஒரு நிகழ்வு என் மனதை பாதித்தது. ரொம்ப நாட்களாக மனதில் இருந்த அந்த நிகழ்வை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கினேன்.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்த தர்ஷனை அவர் ஆடிஷன் வருவதற்கு முன்புவரை நான் பார்த்ததே இல்லை.. காரணம் நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை.

ஆடிஷனுக்கு வருவதற்கு முன்பு கூட அவரது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை தான் காட்டினார்கள். ஆனால் நேரில் அவரை பார்த்ததுமே இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியான நபர் என்று தோன்றிவிட்டது.

உடனே அவரிடம் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டேன். அதேபோல இந்த படத்தின் ஒர்க்ஷாப்புக்கு வரும்போது பேண்ட் சர்ட் எல்லாம் போடாமல் லுங்கியை வாங்கி கட்டிக்கொண்டு வாருங்கள் என கூறிவிட்டேன்.

அதிலிருந்து இந்தக்கதையுடன் அவர் தினசரி பயணிக்க துவங்கி விட்டார். அதனால்தான் படப்பிடிப்பில் கூட அவர் ஸ்கிரிப்ட் பேப்பர் இல்லாமல் எல்லா வசனங்களையும் மனப்பாடமாக பேச முடிந்தது” என்று கூறினார்.

யம்மாடி… ‘யசோதா’ கலெக்சன் இவ்ளோவா.? சந்தோஷத்தில் சமந்தா & டீம்

யம்மாடி… ‘யசோதா’ கலெக்சன் இவ்ளோவா.? சந்தோஷத்தில் சமந்தா & டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதையின் நாயகியாக சமந்தா நடித்த ‘யசோதா’ படம் நேற்று நவம்பர் 11ஆம் தேதி வெளியானது.

தமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் 3டி படம் `அம்புலி’யை எடுத்த ஹரி மற்றும் ஹரிஷ் என்ற இரட்டை இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கியிருந்தனர்.

Surrogacy என்ற வாடகைத்தாய் என்பதை கதைக்களமாக்கி இந்த படத்தை கொடுத்துள்ளனர்.

இத்துடன் எமோசன், சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் சென்டிமென்ட் மெடிக்கல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் என அனைத்தையும் கலந்த ஒன்றாக இந்த ‘யசோதா’ வந்திருக்கிறாள்.

சமந்தா உடன் வரலட்சுமி, முரளி சர்மா, உன்னி முகுந்தன், சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.

நேரடி தெலுங்கு படமான `யசோதா’வை தமிழில் டப்பிங் செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவகும் ரூபாய் 6.32 கோடி வசூலை அள்ளி உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

காதல் ஜோடி கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம் தேதி அப்டேட்

காதல் ஜோடி கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம் தேதி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1960 மற்றும் 70களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கியவர் முத்துராமன்.

இவரது மகன் நவரச நாயகன் கார்த்திக் 1980 மற்றும் 90களில் முன்னணி நடிகராக விளங்கினார்.

தற்போது 2020களில் கார்த்திக்கின் மகன் கௌதம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

அதன்பின்னர் ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மகா தேவகி, தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.

தன் தந்தை கார்த்திக் உடன் மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தில் கெளதம் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தையா இயக்கிய ‘தேவராட்டம்’ படத்தில் நடித்த போது அந்த பட நாயகி மஞ்சிமா மோகனுடன் காதல் கொண்டார்.

சில தினங்களுக்கு முன் கௌதம் மற்றும் மஞ்சிமா ஆகிய இருவரும் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த நிலையில் இவர்களின் காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நவம்பர் 28 இல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Gautham Karthik – Manjima Mohan Wedding Date Update is here

விஜய் இல்லன்னா ரெட் ஜெயன்ட் இல்ல.: ‘டான் & எதற்கும் துணிந்தவன்’ படங்கள் லாபமே – உதயநிதி

விஜய் இல்லன்னா ரெட் ஜெயன்ட் இல்ல.: ‘டான் & எதற்கும் துணிந்தவன்’ படங்கள் லாபமே – உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் தயாரிப்பு.. ஒரு பக்கம் விநியோகம்… ஒரு பக்கம் நடிப்பு.. ஒரு பக்கம் அரசியல் என பன்முகத் திறமை காட்டி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

சினிமாவை பொருத்தவரை படங்களை தயாரிப்பதிலும் விநியோகிப்பதிலும் முன்னணி நிறுவனமாக ரெட் ஜெயன்ட் விளங்கி வருகிறது.

இந்த நிலையில் உதயநிதி ஹீரோவாக நடிக்க தொடங்கி 10 வருடங்கள் ஆன நிலையில் நேற்று நவம்பர் 11ல் ரசிகர்களை சந்தித்தார்.

இது தொடர்பான விழாவில் உதயநிதி பேசும்போது…

“விஜய் நடித்த ‘குருவி’ படத்தை தான் முதன் முதலில் விநியோகம் செய்தோம். விஜய் இல்லனா ரெட் ஜெயன்ட் நிறுவனம் இல்லை.

சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ & சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ ஆகிய படங்கள் தங்களுக்கு நல்ல லாபத்தை தந்தது” என உதயநிதி பேசினார்.

‘மொச்ச கொட்ட பல்லழகி..’ பாடல் மெட்டுதான் ‘ரஞ்சிதமே’.; சூப்பர் விளக்கமளித்த பாடலாசிரியர் விவேக்

‘மொச்ச கொட்ட பல்லழகி..’ பாடல் மெட்டுதான் ‘ரஞ்சிதமே’.; சூப்பர் விளக்கமளித்த பாடலாசிரியர் விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’.

தமன் இசையமைத்து வரும் இந்த படத்தை ஒரே நேரத்தில் தமிழ் & தெலுங்கில் வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ரஞ்சிதமே….’ என்ற பாடலை இணையத்தில் வெளியிட்டனர்.

இந்தப் பாடலை நடிகர் விஜய் மற்றும் பாடகி மானசி பாடியிருந்தனர்.

இந்த பாடல் இதுவரை 4 கோடி பார்வையாளர்களை சென்று அடைந்துள்ளது.

இந்தப் பாடல் & நடனம் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் போட்ட நடன அசைவுகளை அப்படியே காப்பி அடித்துள்ளார் நடன இயக்குனர் ஜானி என நெட்டிசன் என்ற வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். 2 பாடல்களையும் ஒப்பிட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அது மட்டும் இல்லாமல் 1994ல் உளவாளி படத்தில் இடம்பெற்று தமிழில் வெளியான ‘மொச்ச கொட்ட பல்லழகி.. முத்து முத்து சொல்லழகி…’ என்ற பாடலின் மெட்டும் ‘ரஞ்சிதமே…’ என்ற பாடலின் மெட்டும் ஒரே போல உள்ளது எனவும் நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பாடல் ஆசிரியர் விவேக் பதில் அளித்துள்ளார்..

அந்த பேட்டியில்…

“ஒரு மெட்டை தொடர்ந்து பல மெட்டுக்கள் அதுபோல உருவெடுக்கும்..

மொச்ச கொட்ட பல்லழகி… என்ற பாடல் 90களில் வெளியானது.. அதன் பின்னர் ‘சிலம்பாட்டம் படத்தில்.. பார்ட்டிக்கு போகலாமா..’ என்ற பாடலும் ‘தர்மதுரை படத்தில் மக்க கலங்குதப்பா…’ ஆகிய பாடல்களும் இதே போல இருக்கும்.

நான் வாரிசு படத்தில் வசனங்களையும் எழுதியுள்ளேன். எனவே ரஞ்சிதமே பாடலை எழுதும் போதும் இந்த மொச்ச கொட்ட பல்லழகி பாடலை தமனிடம் சொன்னேன்…

அவரும் ஒப்புக் கொண்டே காட்சிகளை வைத்தோம். மொச்ச கொட்ட பல்லழகி என்ற பாடலுக்கான காரணத்தையும் காட்சிகளாக வைத்துள்ளோம். படம் வரும்போது புரியம்.” என தெரிவித்துள்ளார் விவேக்..

அடடடா.. அவசரப்பட்டு நாமதான் ஏதோ சொல்லிட்டோமோ..??!!

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid028oPkM7Pf35w21DEMAvrGGGkfRWS9Bne2Wv7raExQNV4cnVCY8C2EPM8ZuvkDyryGl&id=100036368776950&sfnsn=wiwspwa

வீட்டில் வேலை செய்த திருடன்.; நடிகை போலீசில் புகார்.; மீடியாவுக்கு எச்சரிக்கை!

வீட்டில் வேலை செய்த திருடன்.; நடிகை போலீசில் புகார்.; மீடியாவுக்கு எச்சரிக்கை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டிலிருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருக்கின்றன.

இது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் அவருடைய வீட்டில் பணிபுரியும் நபர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கும் சில ஊடகங்கள் நடிகை பார்வதி நாயரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கும் கற்பிக்கும் வகையில் ‌அவதாறான செய்திகளை வெளியிட்டிருக்கிறது.

இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டால், வெளியிடும் அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு மற்றும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பார்வதி நாயர் தரப்பில் எச்சரிக்கை‌ விடுக்கப்பட்டிருக்கிறது.

(நம் FILMISTREET தளத்தில் இது போன்ற செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

இதனிடையே நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்த நபர், வீட்டிலிருந்து ஆறு லட்சம், மூன்று லட்சம் என லட்ச கணக்கில் மதிப்புள்ள கை கடிகாரங்களையும் மற்றும் லேப்டாப் செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் திருடி இருக்கிறார் என்பதும், அவர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Actress Parvati nair filed police complaint and warns Media

Actress @paro_nair, who has filed a police complaint against a person working in her household for stealing costly gadgets from her home, has said defamation suits will be filed against those media organisations that look to distort the truth and defame her.

More Articles
Follows