‘பொன்னியின் செல்வன்’ உடன் ‘நானே வருவேன்’ என இணைந்தார் தனுஷ்

‘பொன்னியின் செல்வன்’ உடன் ‘நானே வருவேன்’ என இணைந்தார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கி தயாரித்துள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’.

இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இன்னும் பத்து நாட்களில் இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில் படக்குழுவினர் இந்தியா முழுவதும் முக்கிய மாநிலங்களுக்கு சென்று படத்தை புரமோட் செய்து வருகின்றனர்.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஜெயராம், ஆதேஷ் பாலா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தை தமிழக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வேளையில் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘நானே வருவேன்’ திரைப்படம் இதற்கு முந்தைய நாள் அதாவது செப்டம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Ponniyin Selvan and Naane Varuven movie release updates

சூரிக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமானவரித்துறை ரெய்டு

சூரிக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமானவரித்துறை ரெய்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சூரி.

இவர் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகரின் படங்களில் நடித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

நடிப்பு மட்டுமில்லாமல் இவர் ஹோட்டல் தொழிலையும் தன் சொந்த ஊரில் செய்து வருகிறார்.

சூரிக்கு மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் ‘அம்மன்’ என்ற பெயரில் உணவகங்கள் உள்ளன.

இந்த கிளைகள் அனைத்தும் எந்நேரமும் பிஸி’யாக செயல்பட்டன. சூரியைப் போலவே அச்சு அசலாக இருக்கும் இவரது சகோதரர் இந்த உணவகங்களை கவனித்து வருகிறார்.

இந்த ஓட்டல்களுக்கு தலைமையிடமாக காமராஜர் சாலை தெப்பக்குளம் அருகே ஓட்டல் உள்ளது.

இங்கு நேற்று செப். 20 மாலை வணிகவரித்துறை அதிகாரி செந்தில் தலைமையில் ஐந்து பேர் குழு சோதனை நடத்தினர்.

அப்போது உணவுப்பொருட்கள் கொள்முதலில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சோதனை நடந்தது.

இந்தச் சோதனையின் போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அலுவலகத்திற்கு வந்து விளக்கமளிக்கவும் ஓட்டல் ஊழியர்களுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

IT department raid at Actor Sooris hotels

ஆர்ஆர்ஆர்.. ராக்கெட்ரி.. இரவின் நிழல் OUT.; ஆஸ்கர் விருதுக்கு இந்திய சார்பில் போட்டியிடும் படம் எது?

ஆர்ஆர்ஆர்.. ராக்கெட்ரி.. இரவின் நிழல் OUT.; ஆஸ்கர் விருதுக்கு இந்திய சார்பில் போட்டியிடும் படம் எது?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது.

இந்த விருதானது சிறந்த படம், சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

2023ஆம் 95வது ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக போட்டியிட குஜராத்தி மொழி படமான ‘செல்லோ ஷோ’ (Chhello Show) Last Film Show படம் தேர்வாகியுள்ளது.

பேன் நளின் இயக்கத்தில் வெளியான இப்படம் சில சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் முன் விவரம் வருமாறு…

ஆஸ்கர் விருது தேர்வுக்கான இந்திய திரைப்படங்கள் அறிவிப்பு..

இந்திய சார்பில் 95வது ஆஸ்கர் விருதுக்காக இந்திய சார்பில் அனுப்பப்படவுள்ள திரைப்படத்தை அறிவிக்கும் விதமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பினில் இந்திய திரைப்பட சங்கத்தின் தேர்வு குழுவினர் பங்கு கொண்டு தேர்வு செய்த படத்தினை அறிவித்தனர்.

இந்த சந்திப்பினில்…

தயாரிப்பாளர் ரவி கொட்டாரகரா பேசியதாவது..

இந்திய சார்பில் வருடர்த்திற்கு 4000, 5000 படங்கள் எடுக்கப்படுகிறது. மிக சிறந்த கதைகள் படைப்புகள் இக்காலத்தில் எடுக்கப்பட்டுகின்றன. 1929 ல் ஆஸ்கர் விருது விழா துவங்கப்பட்டது ஆனால் அப்போது வெளிநாட்டு படங்கள் ஏற்காத நிலை இருந்தது. ஆனால் இப்போது இந்த நிலை மாறியுள்ளது. ஆஸ்கருக்கு இந்தியாவில் இருந்து தரமான படங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த வருடம் தேர்தெடுக்கப்பட்ட படத்தினை தலைவர் அறிவிப்பார்.

தலைவர் நாகாபரணா (தலைவர்) பேசியதாவது…

இங்கு இந்த விழாவில் பங்கு கொண்து மிகவும் மகிழ்ச்சியாக பெருமையாக இருக்கிறது. ஆஸ்கர் விருது தேர்வுக்கு 13 படங்கள் பரிந்துரைக்கப்பட்டது. பல மொழிகளில் இருந்து பல சிறந்த திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக குஜராத்தி திரைப்படம் ‘செலோ ஷோ’ (தி லாஸ்ட் ஷோ) படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழிக்கான இந்திய ஆஸ்கார் நுழைவுத் தேர்வைத் தேர்ந்தெடுத்ததற்காக மதிப்பிற்குரிய இயக்குநர் திரு. டி.எஸ். நாகபரணா ஜூரி வாரியத்தின் சார்பாக கௌரவிக்கப்பட்டார்.

பல சிறந்த படைப்புகளில் இருந்து ஒருமனதாக ஆஸ்கர் விழாவிற்கு ‘செலோ ஷோ’ (தி லாஸ்ட் ஷோ) என்ற தலைப்பில் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் வாழ்வில் சினிமாவின் அருமையை சொல்வது மட்டுமின்றி ஒவ்வொரு திரைப்பட ரசிகனின் உணர்வுகளை கூறும் சிறந்த படைப்பாக உருவாகியுள்ளது. இப்படம் இந்திய மரபையும், பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துகிறது, இது வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு இந்தியாவின் முகத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.

ஆஸ்கார் நுழைவுக்கு பரிசீலிக்கப்பட்ட படங்கள்

மொத்தம் -13 படங்கள்
இந்தி-6
01-பதாய் தோ
02-ராக்கெட்ரி
03-ஜுண்ட்
04-பிரம்மாஸ்திரம்
05-தி காஷ்மீர் ஃபைல்ஸ்
06-அனெக்

திமாசா (அசாம்)-1
செம்கோர்

தமிழ்-1
இரவின் நிழல்

குஜராத்தி-1
செல்லோ ஷோ

தெலுங்கு-2
ஆர்ஆர்ஆர்
ஸ்தலம்

மலையாளம்-1
அரியுப்பு

பெங்காலி-1
அபராஜிதோ

மேலும் விவரங்கள்…

அகாடமி விருதுகளுக்கான (ஆஸ்கார்) வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய திரைப்படம் குறித்த இந்திய திரைப்பட கூட்டமைப்பின் செய்தி குறிப்பு..

2022-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்யும் இயக்குநர் திரு டி. எஸ். நாகபரணா தலைமையிலான குழு 2022-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்தது.

பட்டியிலிடப்பட்டிருந்த பல்வேறு படங்களில் இருந்து இந்த குழு ‘செலோ ஷோ’ (தி லாஸ்ட் ஷோ), திரைப்படத்தை ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.

‘செலோ ஷோ’வில் உள்ள சிறப்பம்சங்கள் தான் இந்த படத்தை ஒரு மனதாக தேர்வு செய்ய காரணமாக இருந்தது.

‘செலோ ஷோ’ என்பது வெளிநாட்டில் பொதுவாக காட்டப்படும் வழக்கமான இந்திய சினிமா போல் இல்லாமல், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு திரைப்பட ஆர்வலர்களின் உணர்ச்சிகளையும் தொடும் ஒரு திரைப்படமாகும்.

தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறப்பான கதைக்களத்தில், சினிமாத்துவத்துடன், சிறப்பான நடிப்பு, ரம்மியமான காட்சியமைப்பு மற்றும் சிறந்த ஒலி தரத்தில் துல்லியமாக இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் இந்திய சினிமா துறையின் நுணுக்கங்களையும் பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துகிறது.
இந்த அனுபவம் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு புதிதாக இருக்கும்.

கதை புதுமையாக ஆரம்பித்து நம்பிக்கை தரும் விதத்தில் முடிவடையும்.

படம் முடிந்த பின்னும் அதில் வரும் கதாபாத்திரங்கள், இடங்கள் மற்றும் கதைக்களம் ரசிகர்கள் மனதில் நிற்கும். படத்தில் கூறுவது போல சிறந்த திரைப்படங்களை உருவாக்கும் கதைகளைச் சொல்லும் ஒளியை நாம் கண்டறிவோம்.

செல்லோ ஷோ‘ உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஒரு படமாகும்.

Last Film Show movie Becomes Indias Official Entry For Oscars 2023

கருணாஸின் ‘ஆதார்’.; சீமான் வெளியிட சுரேஷ் காமாட்சி பெற்றுக் கொண்டார்

கருணாஸின் ‘ஆதார்’.; சீமான் வெளியிட சுரேஷ் காமாட்சி பெற்றுக் கொண்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய ‘ஆதார்’ படத்தின் திரைக்கதை புத்தகத்தை, திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் வெளியிட, அதனை ‘மாநாடு’ படத்தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி மற்றும் படத்தின் நாயகனான நடிகர் கருணாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் திரைக்கதையை நூலாக பதிப்பித்து, வெளியிடும் போக்கு அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. ‘பாரதி’, ‘பெரியார்’, ‘களவாணி’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘அந்த நாள்’, ‘சத்தம் போடாதே’ பாலு மகேந்திராவின் ‘சந்தியா ராகம்’, வசந்த்தின் ‘ரிதம்’, கமல்ஹாசனின் ‘ஹே ராம்’, வசந்தபாலனின் ‘அங்காடித்தெரு’, மிஷ்கினின் ‘அஞ்சாதே’, சமுத்திரக்கனியின் ‘அப்பா’ என ஏராளமான வெற்றி பெற்ற படைப்புகளின் திரைக்கதை, நூலாக வெளியாகி, வாசகர்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

திரைப்படம் என்பது காட்சி வழியாக கற்பனையை நம்பகத்தன்மையுடன் பார்வையாளர்களுக்கு சென்று சேர்ப்பிக்கும் ஊடகம் என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை. அதனைப் புத்தக வடிவில் வெளியிட்டாலும் அதன் சுவை குன்றாமல் வாசகர்களால் நுகரப்படும் .

அந்த வகையில் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஆதார்’.

சர்வதேச அளவிலான வணிக அரசியலை மையப்படுத்தி இதன் கதை, திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த படம் வெளியாகும் முன்னரே நேர்மறையான விமர்சனங்களால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘ஆதார்’ திரைப்படத்தின் திரைக்கதை, இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தால் நூலாக உருவாக்கப்பட்டது.

இதன் முதல் பிரதியை நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குநருமான சீமான் வெளியிட்டார்.

அதனை ‘மாநாடு’ படத்தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி மற்றும் படத்தின் நாயகனான நடிகர் கருணாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

‘ஆதார்’ திரைக்கதை புத்தகம் உருவானது குறித்து இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேசுகையில்….

“என்னுடைய 22 ஆண்டு கால திரையுலக அனுபவத்தில் மூன்று படைப்புகளை மட்டுமே முத்தாக படைத்திருக்கிறேன்.

கடந்த ஐந்தாண்டு காலமாக ஆய்வு செய்து உருவாக்கிய திரைக்கதை தான் ‘ஆதார்’.

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இதன் திரைக்கதையை எழுதி இருக்கிறேன். இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை அளிக்கும். இதன் திரைக்கதையை நூலாக எழுதி வெளியிட வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.

இதனை தயாரிப்பாளரிடத்தில் தெரிவித்தவுடன் அவரும் முழு சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த நூல் தரமான வடிவில் தயாராகி இருக்கிறது. நூலை வாசித்த பிறகும், திரைப்படத்தை பார்க்கும் போதும், இரண்டும் வாசகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரே விதமான உணர்வை அளிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

‘ஆதார்’ திரைப்படத்தில் அருண்பாண்டியன், கருணாஸ், ரித்விகா, இனியா, உமா ரியாஸ் கான், ‘பாகுபலி’ பிரபாகர் ஆகியோர் திரைக்கதைக்கு ஏற்ற வகையில், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, பின்னணியிசை உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும் இந்தப் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீமான்

Seeman released the script book of Karunas starrer Aadhaar

Complete Updates: இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீஸ்.? தாங்குமா தமிழ் சினிமா.?

Complete Updates: இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீஸ்.? தாங்குமா தமிழ் சினிமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வாரம் செப்டம்பர் 23ஆம் தேதி எந்தெந்த தமிழ் படங்கள் ரிலீசாக உள்ளன என்ற தகவல்களை இங்கே பார்ப்போம்…

1) ரெண்டகம்

அரவிந்த்சாமி, மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘ரெண்டகம்’.

பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் ஈஷா ரெபா, ஜாக்கி ஷெராப், அணிஷ் கோபால், சியாத் யாது உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் இந்த படத்தை ஃபெலினி இயக்கியுள்ளார்.

நடிகர் ஆர்யா, ஷாஜி நடேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

2.) ட்ராமா

மலையாள இயக்குனர் அஜு குளுமலா இயக்கிய படம் “டிராமா”.

இந்த படத்தில் கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஜெய்பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்துள்ளனர்.

சசிகலா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடும்
இந்த படமானது வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

3.) குழலி

முக்குழி பிலிம்ஸ் தயாரிப்பில் செரா கலையரசன் இயக்கிய படம் ‘குழலி’.

‛காக்கா முட்டை’ படத்தில் சிறுவனாக நடித்த விக்னேஷ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ஆரா நடித்துள்ளார்

திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை பெற்ற இந்தபடம் இண்டோ பிரஞ்ச் பிலிம் திரைப்பட விழாவில் சிறந்த படம், இசைக்கான விருதுகளை வென்றுள்ளது. உதயகுமார் இசையமைத்துள்ளார்.

4) பபூன்

நடிகர் வைபவ் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்கிய படம் ‘பபூன்’.

சில வருடங்களுக்கு முன் கார்த்திக் சுப்பராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் அசோக் வீரப்பன்.

முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளார். அவருடன் கிராமத்து பாடல்களால் கவனம் பெற்ற அந்தக்குடி இளையராஜாவும் நடித்துள்ளார்.

நாயகியாக அனகா நடிக்க நரேன், மூனர் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

5) ஆதார்

‘அம்பாசமுத்திரம் அம்பானி’ & ‘திருநாள்’ படங்களை இயக்கியதின் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கருணாஸ் நடித்துள்ள படம் ‘ஆதார்’.

இவருடன் ரித்விகா, அருண்பாண்டியன் இனியா, உமா ரியாஸ்கான், திலீப் உள்ளிட்டோர் நடிக்க ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பாக சசிக்குமார் தயாரித்துள்ளார்.

6) டிரிக்கர்

அதர்வா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ட்ரிக்கர்’.

இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஸ்ருதி நல்லப்பா தயாரித்துள்ளார். லக்ஷ்மி’, ‘மாறா’ படங்களுக்குப் பிறகு இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

September Month upcoming movies Kollywood release updates

ஒய் ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை படமாக்க கமல் சம்மதம்

ஒய் ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை படமாக்க கமல் சம்மதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒய்ஜிபி துவங்கிய யுஏஏ குழுவின் 70-ம் ஆண்டு, நாடக உலகில் ஒய் ஜி மகேந்திரனின் 61-ம் ஆண்டு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் அவரது புதிய நாடகமான சாருகேசி பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக உலகநாயகன் கமல்ஹாசன் சாருகேசி நாடகத்தை நேற்று நேரில் சென்று கண்டு மகிழ்ந்தார்.

நாடகம் முடிந்த உடன் குழுவினருடன் அவர் கலந்துரையாடினார்.

இது குறித்து ஓய் ஜி மகேந்திரன் கூறுகையில்…

“நாடகத்தை பார்த்த கமல்ஹாசன் வெகுவாக பாராட்டினார். இது போன்ற நாடகங்கள் தனக்கு மிகவும் புடிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

எங்கள் இருவருக்கும் 50 வருட கால நட்பு. மேலும் 20 படங்கள் மேல் ஒன்றாக நடித்திருக்கிறோம். எங்களுக்கிடையே இருக்கும் நட்பை பற்றியும் அவர் நினைவுகூர்ந்தார்,” என்றார்.

தொடர்ந்து பேசிய மகேந்திரன்…

“சாருகேசி நாடகத்தை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று தனது எண்ணத்தை கமல் அவர்கள் வெளிப்படுத்தினார். அவ்வாறு படமாக எடுக்கப்பட்டால் அவரது ஒத்துழைப்பு வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார்,” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்று சாருகேசி நாடகத்தை பார்த்து, நாடக குழுவினரை தனது வீட்டிற்கே அழைத்து வெகுவாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன்

Kamal watches YG Mahendrans Charukesi showers rich praises

Y G Mahendran’s stage play ‘Charukesi’, which has been winning accolades from various quarters, is also marking the 70th year of UAA group started by YGP and 61st year of YG Mahendran as theater artiste.

More Articles
Follows