‘வாரிசு’ வெளியீட்டிற்கு முன்னதாக விஜய்க்கு நன்றி சொன்ன இசையமைப்பாளர் தமன்

‘வாரிசு’ வெளியீட்டிற்கு முன்னதாக விஜய்க்கு நன்றி சொன்ன இசையமைப்பாளர் தமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘வாரிசு’ இன்னும் சில மணி நேரத்தில் திரைக்கு வரவுள்ளது.

இதற்கிடையில், படத்தின் இசையமைப்பாளர் தமன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் .

தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணா வாரிசு படத்தின் அனைத்து உணர்ச்சிகரமான காட்சிகளையும் பார்த்து அழுது விட்டேன் …கண்ணீர் விலைமதிப்பற்றது… வாரிசு படம் என் குடும்பம் அண்ணா. இது என் இதயத்திற்கு நெருக்கமானது நன்றி அண்ணா லவ் யூ என பதிவிட்டுள்ளார்.

Thaman gets highly emotional and thanks Vijay on the eve of ‘Varisu’ release

JUST IN சபரிமலையில் ரஜினி அஜித் விஜய் ரசிகர்கள் செய்கையால் கேரள ஐகோர்ட் கண்டனம்

JUST IN சபரிமலையில் ரஜினி அஜித் விஜய் ரசிகர்கள் செய்கையால் கேரள ஐகோர்ட் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

முக்கியமாக தமிழகத்தில் 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க ஆண்டுதோறும் சென்று வருகின்றனர்.

ஆனால் இந்த வருடம் தமிழக பக்தர்கள் ரசிகர்கள் என்ற போர்வையில் திரைப்பட பேனர்களை கொண்டு சென்று படங்கள் வெற்றி பெற வேண்டும் என வேண்டுதல் செய்துள்ளனர்.

விஜய் ரசிகர்கள் வாரிசு பட பேனர் உடனும்.. அஜித் ரசிகர்கள் துணிவு பட பேனருடனும் சென்று உள்ளனர். அவர்கள் ஐயப்பனை தரிசித்து தங்கள் ஹீரோக்களின் படங்கள் வெற்றி பெற வேண்டும் என வேண்டுதல்கள் செய்து அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதனை அடுத்து கேரளா ஐகோர்ட் இந்த ரசிகர்களை கண்டித்துள்ளது. இதுபோன்ற படங்களை கொண்டு வரக்கூடாது.. ஐயப்பன் சன்னிதானத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று ரஜினி ரசிகர்கள் ‘ஜெயிலர்’ பட பேனருடன் சென்று படம் வெற்றி பெற வேண்டும் என வேண்டுதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து கேரள காவல்துறை அவர்களை தடுத்து பேனரை பறித்துக் கொண்டு அவர்களை அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kerala high court has issued an order against rajini vijay ajith fans

JUST IN ‘துணிவு’ படத்திற்கு 1am Special Show ரத்து.; அரசின் முடிவால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

JUST IN ‘துணிவு’ படத்திற்கு 1am Special Show ரத்து.; அரசின் முடிவால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஜனவரி 11ஆம் தேதி அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகின்றன.

ஜனவரி 11ஆம் தேதி மற்றும் 12ஆம் தேதி ஆகிய இரு நாட்களுக்கும் அதிகாலை காட்சிகளுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் துணிவு படத்திற்கு நாளை ஜனவரி 11ல் நள்ளிரவு 1 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாரிசு படத்தை பொறுத்தவரை அதிகாலை 4 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கப்பட உள்ளது.

மேற்கண்ட இந்த தகவல்கள் தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் பொருந்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் துணிவு படத்திற்கு நள்ளிரவு 1.30am மணிக்கு காட்சிக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை.

அதிகாலை 5 30 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கப்பட வேண்டும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

எனவே புதுச்சேரியை பொறுத்தவரை துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தான் தொடங்கப்படும். முதல் காட்சி திரையிடப்படும்.” என தெரிகிறது.

Thunivu 1am Special Show Canceled in pondicherry

JUST IN சினிமா டிக்கெட் கிடைக்காததால் சட்டசபையை முற்றுகையிட்ட ரசிகர்கள்

JUST IN சினிமா டிக்கெட் கிடைக்காததால் சட்டசபையை முற்றுகையிட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் நாளை ஜனவரி 11ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகிறது.

நாளை அஜித்தின் துணிவு படமும் ரிலீஸ் ஆகிறது.

இந்த இரு படங்களுக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

டிக்கெட்டுகள் கிடைக்காத காரணத்தினால் பல திரையரங்குகளில் பிளாக் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.

எனவே ரூ 1000 முதல் 3000 வரை டிக்கெட் விற்கப்பட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் புதுச்சேரியில் ‘வாரிசு’ பட சினிமா டிக்கெட் கிடைக்காததால் சட்டசபையை முற்றுகையிட்டு ரசிகர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் தகவல்..

அண்மையில்.. வாரிசு பட இசை விழாவில் விஜய் பேச்சை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பார்த்து ரசித்தார்.. இந்த வீடியோவும் இணையதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Fans besieged the assembly because they did not get cinema tickets

JUST IN ‘வாரிசு’ படத்தை முன்பதிவில் முந்தியது ‘துணிவு’.; முதல்நாள் வசூலிலும் முன்னிலை.!

JUST IN ‘வாரிசு’ படத்தை முன்பதிவில் முந்தியது ‘துணிவு’.; முதல்நாள் வசூலிலும் முன்னிலை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஜனவரி 11ஆம் தேதி துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகின்றன.

ஜனவரி 11ஆம் தேதி மற்றும் 12ஆம் தேதி ஆகிய இரு நாட்களுக்கும் அதிகாலை காட்சிகளுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் துணிவு படத்திற்கு நாளை ஒரு மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாரிசு படத்தை பொறுத்தவரை அதிகாலை 4 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் ‘துணிவு’ படம் முன்பதிவில் சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் ‘துணிவு படத்திற்கு அதிக காட்சிகள் (1 மணி காட்சியை சேர்த்து) ஒதுக்கப்பட்டுள்ளதால் ‘வாரிசு’ படத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளதாம்.

எனவே முதல் நாளில் வாரிசு படத்தை விட துணிவு படம் தான் வசூலில் முந்தும் எனவும் கூறப்படுகிறது.

‘Varisu’ was preceded by ‘Thunivu’ in bookings and collections too

JUST IN இதெல்லாம் செய்யவே கூடாது.; விஜய் – அஜித் ரசிகர்களுக்கு ஐகோர்ட் & போலீஸ் எச்சரிக்கை

JUST IN இதெல்லாம் செய்யவே கூடாது.; விஜய் – அஜித் ரசிகர்களுக்கு ஐகோர்ட் & போலீஸ் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஜனவரி 11ஆம் தேதி துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரு படங்கள் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தை வரவேற்க அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.

எனவே தியேட்டர் எங்கும்.. வீதி எங்கும்.. முக்கியமான பல பகுதிகளில் பேனர்கள் கட் அவுட்டுகள் வைத்து திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

மேலும் நாளை நள்ளிரவு அதிகாலை முதல் காட்சி துவங்கும் போது பட்டாசுகள் வெடித்து மேல தாளங்களுடன் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாட ரெடியாகி வருகின்றனர்.

இதனிடையில் பால் முகவர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.. அதில் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அது போல பைரசி மூலம் திருட்டுத்தனமாக இணையதளங்களில் படங்களை வெளியிடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் காவல்துறையும் விஜய் அஜித் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவர்களின் அறிக்கையில்… ” வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாகும் திரையரங்கிற்கு பட்டாசுகளை கொண்டு வரக்கூடாது.

திரையரங்கில் உள்ள நாற்காலிகளை சேதப்படுத்தினால் அதற்கு ரசிகர் மன்ற மன்றங்கள் & நிர்வாகிகள் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பேண்ட் வாத்தியங்கள் மேளத்தாளங்கள் கொண்டு வரக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையெல்லாம் ரசிகர்கள் செய்வார்களா .?

This should not be done at all.; Court & Police warning to Vijay-Ajith fans

More Articles
Follows