அப்பா ப்ளீஸ்.. மானத்தை காப்பாத்திடு..; ‘வாரிசு’ தமனுக்கு அவரது ‘வாரிசு’ அட்வைஸ்

அப்பா ப்ளீஸ்.. மானத்தை காப்பாத்திடு..; ‘வாரிசு’ தமனுக்கு அவரது ‘வாரிசு’ அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

வம்சி இயக்கிய இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்து சமீபத்திய பேட்டியில் தமன் தெரிவித்துள்ளதாவது…

“என் மகன் தினமும் ஸ்கூலுக்குப் போகும்போது… “அப்பா நல்லா மியூசிக் போட்டு என் மானத்தை காப்பாத்திடு.” என்று சொல்லிவிட்டு போவான்” என தெரிவித்துள்ளார் தமன்..

Music Director Thamans son warns his dad

JUST IN செல்ஃபி வீடியோ.. என் நெஞ்சில் குடியிருக்கும்.; பிரச்சினை பழகிட்டு.. முத்தத்திற்கு ஒரு ஸ்டைல்.. வாரிசு 2.; விஜய் பேச்சு ஹைலைட்ஸ்

JUST IN செல்ஃபி வீடியோ.. என் நெஞ்சில் குடியிருக்கும்.; பிரச்சினை பழகிட்டு.. முத்தத்திற்கு ஒரு ஸ்டைல்.. வாரிசு 2.; விஜய் பேச்சு ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எல்லோரும் காத்திருந்தது போல இறுதியாக நடிகர் விஜய் மேடை ஏறி பேசினார்.

விஜய் பேசியதில் ஹைலைட்டான பேச்சு துளிகள் இதோ…

என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகபெருமக்களுக்கு வணக்கம்..

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன்.. என்னை செதுக்கிய உளிகள் தான் நண்பா நண்பீஸ் என்றார்.

இயக்குனர் வம்சி சொல்லும் கதைகளை நடிகர் நடிகைகள் உடனே ஓகே சொல்லி விடுவார்கள்.. ஆனால் எங்கள் நடிப்பை அவர் உடனே ஓகே சொல்லவே மாட்டார். மீண்டும் ஒன்ஸ்மோர் கேட்டு பர்ஃபெக்ட்டாக வரும் வரை நடிக்க வைப்பார். என்றார்.

என்னுடைய சினிமா கேரியரில் வாரிசு முக்கியமான படமாக இருக்கும். எனவே இயக்குனர் வம்சிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன்” என்றார்.

அன்புதான் எப்போதும் ஜெயிக்கும்.. தேவையில்லாத வெறுப்பு தான் நம்மை வளர்க்கும்’ என்றார்

Soul of Varisu பாட்டு ரொம்ப நல்லா வந்திருக்கு நண்பா நம்பி எல்லாம் என்னுடைய குடும்பம் தான். வாரிசு படத்தை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.

பிரகாஷ்ராஜை பற்றி குறிப்பிடும்போது செல்லம் முத்துப்பாண்டி என்றார்

நான் ஒவ்வொரு முறையும் பேசும்போது ரத்த தானம் குறித்து பேச நினைப்பேன். ஏனென்றால் ரத்தத்தில் மட்டும்தான் ஜாதி மதம் என்ற எதையுமே யாரும் பார்ப்பது கிடையாது. அதனால் என் ரசிகர்களும் ரத்தம் தானம் செய்து வருகின்றனர்.

நடிகர் ஷாம் குறித்து பேசும்போது.. குஷி படம் முதலே எனக்கு நல்ல நண்பராக இருந்து வருகிறார். அவர் எப்போதும் படக்குழுவினரை எனர்ஜியாக வைத்திருப்பார் என்றார்.

யோகி பாபு பற்றி பேசும்போது அவரின் வளர்ச்சியை கண்டு தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என பாராட்டினார்.

இந்த ‘வாரிசு’ படம் உறவு முறையை பற்றி சொல்லும் கதை என்றார்.

தயாரிப்பாளர் தில்ராஜ் குறித்து பேசும்போது.. ‘வாரிசு’ என்ற குழந்தை நன்றாக வந்துள்ளது. வாரிசு படத்தின் பார்ட் 2 எப்போது வரும்? என தயாரிப்பாளரிடம் கேட்டார்.

ரஞ்சிதமே பாடல் ஸ்டைலில் ரசிகர்களை பார்த்து முத்தம் கொடுத்தார். அதன் பின்னர் தொகுப்பாளர் முத்தம் கேட்டபோது அதை கிரிக்கெட் பந்து போடுவது போல கொடுத்தார்.. பின்னர் முத்தம் கொடுப்பதற்கு என்று ஒரு ஸ்டைல்.. இனிமேல் இதுதான்.. என்றார். அப்போது ரசிகர்கள் கரகோஷத்தை எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

பிரச்சனைகளை எப்படி சந்தித்து வருகிறீர்கள்? என்ற தொகுப்பாளர்கள் கேட்டபோது ‘அது பழகிட்டு..’ என்றார்.

இறுதியாக தனது உதவியாளர் ஜெகதீஷை அழைத்து.. ‘என் நெஞ்சில் குடியிருக்கும்..’ என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் செல்பி வீடியோ பதிவிட சொல்லி இருந்தார். அதை விஜய் ட்விட்டர் பக்கத்தில் பதிவானது. பதிவான நொடி முதலில் பல லைக்ஸ் குவித்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Vijay speech highlights at Varisu Audio Launch

வாரிசு இசை வெளியிட்டு விழா மேடையில் ரசிகர்களுடன் #Selfie வீடியோ எடுத்து #EnNenjilKudiyirukkum என்ற ஹேஷ்டேக் கீழ் பதிவிட்டார் நடிகர் விஜய் #VarisuAudioLaunch

JUST IN – VARISU Music : எந்த நடிகரும் செய்யாததை ரசிகர்களுக்காக செய்த விஜய்

JUST IN – VARISU Music : எந்த நடிகரும் செய்யாததை ரசிகர்களுக்காக செய்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் நடிகர் விஜய், நாயகி ராஷ்மிகா, சரத்குமார், கணேஷ், ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இசை விழா தொடங்குவதற்கு முன்பு முதன்முறையாக எந்த ஒரு நடிகரும் செய்யாத விஷயத்தை விஜய் செய்தார்.

அதாவது நேராக வந்து மேடை முன்பக்க முதல் வரிசையில் அமராமல் ரசிகர்கள் மத்தியில் நடந்து சென்று அவர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும் அவர்களுக்கு வணக்கம் செலுத்தி அவர்கள் நடுவே நின்று சைகை செய்தார்.

இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் கூச்சலிட்டு தளபதி தளபதி என்று கோஷமிட்டனர்.

Vijay walk around in Fans crowd at Varisu Audio Launch

Varisu Audio Launch Live Update.; நண்பர் அஜித் போல வராத விஜய்.?!

Varisu Audio Launch Live Update.; நண்பர் அஜித் போல வராத விஜய்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் விஜய், ராஸ்மிகா இணைந்துள்ள படம் ‘வாரிசு’. இந்த படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகியுள்ள நிலையில் இன்று டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவை காண விஜய் ரசிகர்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர். கட்டுக்கடங்காத கூட்டம் இருப்பதால் போலீசார் ரசிகர்களை கட்டுப்படுத்துவதில் திணறி வருகின்றனர்.

மேலும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதால் ரசிகர்களும் விஜய்யை காண கடல் அலை போல திரண்டு வந்த வண்ண உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது விஜய் அரங்கத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் வெள்ளை பேண்ட் லைட் கலர் பச்சை சட்டை அணிந்து வந்துள்ளார்.

இதற்கு முன்பு விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. அதற்கு முன்பு ‘மாஸ்டர்’ படத்தின் இசை விழா நடைபெற்ற போது விஜய் கோட் சூட் அணிந்து வந்திருந்தார்.

அப்போது.. “நண்பர் அஜித்தை போல கோட் சூட் அணிந்து வந்ததாக அவர் பேசி இருந்தார்.

தற்போது விஜய் சிம்பிளாக விராவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஸ்மிகா

vijay’s Varisu Audio Launch Live Update

முதன்முறையாக தனுஷை போலீசாக மாற்றும் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்

முதன்முறையாக தனுஷை போலீசாக மாற்றும் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழக ரசிகர்களை தன் பக்கம் திருப்பியவர் எச். வினோத்.

இதனையடுத்து அஜித் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். நேர்கொண்ட பார்வை வலிமை படங்களை தொடர்ந்து தற்போது அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படங்களை அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை வினோத் இயக்குவார் எனக் கூறப்பட்டு வருகிறது.

இதனிடையில் நடிகர் தனுஷிடம் வினோத் கதை சொன்னதாகவும் அதற்கு தனுஷ் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

முக்கியமாக இதுவரை தனுஷ் ஏற்காத போலீஸ் கேரக்டரில் இந்த படத்தில் நடிப்பார் எனவும் இது ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே விரைவில் இது பற்றிய தகவல்களை எதிர்பார்க்கலாம்.

First time Actor Dhanush doing Police role

அன்று ‘கல்லூரி-யில் தமன்னாவுடன்.?!.. இன்று காலேஜ் ரோடு’-ல் தனி நாயகனாக லிங்கேஷ்

அன்று ‘கல்லூரி-யில் தமன்னாவுடன்.?!.. இன்று காலேஜ் ரோடு’-ல் தனி நாயகனாக லிங்கேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்று தமன்னாவோடு ‘கல்லூரி’ படத்தில் நாயகனாக வாய்ப்பு கிடைத்தும் நடிக்காமல் போனவர் லிங்கேஷ்.

இன்று ” காலேஜ் ரோடு ” படத்தின் மூலம் கதாநாயகனாகிறார் நடிகர் லிங்கேஷ்.

நடிகர் லிங்கேஷ். பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர்.

இவர் நடித்த கபாலி, பரியேறும் பெருமாள் , படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தாலும். நாயகனாக இப்போதுதான் ‘காலேஜ் ரோடு’ படத்தில் அறிமுகமாகிறார்.

காலேஜ் ரோடு திரைப்படம் டிசம்பர் 30 அன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

காலேஜ் ரோடு

ஏற்கனவே இந்த திரைப்படத்தை இயக்குனர் ரஞ்சித் அவர்கள் பாராட்டியுள்ளார்.

மாணவர்களின் கல்விக் கடனை பற்றி பேசி இருக்கும் இத்திரைப்படம் மாணவர்கள் மத்தியில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் ஆவலுடன் இருக்கின்றனர் .

ஏறக்குறைய கல்லூரி படத்திற்காக 10 வருடங்களுக்கு முன்னால் எடையை குறைத்து இரண்டு வருடங்கள் திரைப்படத்திற்காக கடினமாக உழைத்த லிங்கேஷ் பின்னர் தொகுப்பாளராக தன் வாழ்க்கையை கடந்து, மெட்ராஸ், கபாலி பரியேறும் பெருமாள், போன்ற திரைப்படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்தார்.

கடின உழைப்பும் , அற்பணிப்போடும் போராடி இன்று கல்லூரியில் படத்தில் நாயகனாக நடிக்காமல் விட்டதை காலேஜ்ரோடு திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.

டிசம்பர் 30 திரையரங்கில் வெளியாகிறது பி வி ஆர் பிச்சர்ஸ் வெளியிடுகின்றனர்.

மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு திரைப்படம் பெரும் என்று ஆவலோடு எதிர்பார்க்கலாம்..

காலேஜ்

Missed Chance with Tamannah at Kalluri but now Lingesh at College Road

More Articles
Follows