தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி என்பவர் இயக்கி இருக்கிறார்.
தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ என்பவர் தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தை அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளனர்.
அதே சமயம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மேலும் அங்கு முன்னணி நடிகர்களின் தெலுங்கு படங்களும் அதே நாளில் வெளியாக உள்ளது.
எனவே தமிழ் படத்திற்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சனை உருவானது.
இதனையடுத்து தில் ராஜு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது…
“‘வாரிசு’ படம் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியிடப்படும் என முன்பே (மே மாதம்) நாங்கள் கூறிவிட்டோம். அதன் பி்ன்னரே சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ சங்கராந்தி வெளியீடு என ஜூனில் அறிவிக்கப்பட்டது.
பாலகிருஷ்ணா காரூவின் ‘வீரசிம்ம ரெட்டி’ படத்தை டிசம்பரில் வெளியிட முடியாமல் போனதால் அதுவும் சங்கராந்தி ரேஸில் இணைந்து விட்டது.
மேலும் பண்டிகை காலங்களில் 3 படங்கள் வெளியாகும் அளவிற்கு போதுமான திரைகள் உள்ளன.
‘வால்டர் வீரய்யா’ பட மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்களே தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்காதபோது மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை. ஏன் பிரச்சினை செய்கிறார்கள்?” என பதிலளித்துள்ளார் தில் ராஜூ.
What is the problem with you all? ‘Dil Raju’s fiery reply