கலர் வெடி கோகுலின் வாழ்க்கையை கலர்ஃபுல்லாக மாற்றும் தமன்

கலர் வெடி கோகுலின் வாழ்க்கையை கலர்ஃபுல்லாக மாற்றும் தமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் நடந்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரான கானா சிறுவன் கலர் வெடி கோகுலுக்கு, சினிமாவில் பாட வாய்ப்பளிப்பதாகத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி அசத்தியுள்ளார் இசையமைப்பாளர் தமன்.

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி இசைத்துறையில் மிகப்பெரும் மாற்றத்தை நிகழ்த்தி வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இசைத்திறமையுள்ள பலரின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது.

இசையில் சிறந்து விளங்கும், சிறு குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது வெற்றிகரமான 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் சமூகத்தின் பல பக்கங்களிலிருந்து சிறுவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வார எபிஸோடிலும் பல அற்புதமான தருணங்கள் நிகழ்ந்து வருகின்றன.

நிகழ்ச்சியின் தொடக்க வாரத்தில், பங்கு கொண்ட சிறுவன் கலர்வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை, கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தைக் கனவு காணும் கலர்வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் ஆசீர்வாதத்தைத் தந்தார் தமன்.

இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளிக்குள், ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், கலர்வெடி கோகுல் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்திருந்தார் இசையமைப்பாளர் தமன்.

நிகழ்ச்சி முடிவடைவதற்கு முன்னதாகவே தான் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி அசத்தியுள்ளார் தமன். கலர் வெடி கோகுலை விமானத்தில் ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு படத்திற்காக வாய்ஸ் டெஸ்ட் எடுத்துள்ளார்.

மேலும் கலர் வெடி கோகுலுக்கு முதல் சம்பளத்தை தந்து அசத்தியுள்ளார். கலர் வெடி கோகுல் பாடப்போகும் பாடல், படம் மற்றும் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் விவரங்கள் பின் வரும் வார நிகழ்ச்சிகளில் வெளியிடப்படவுள்ளது.

கலர் வெடி கோகுல் விமானத்தில் பறந்து வாய்ஸ் டெஸ்ட் எடுத்த காட்சிகள், இந்த வார நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய தமனை மனமுருகி அனைவரும் பாராட்டினர். தமன் ‘இது கலர் வெடி கோகுலின் திறமைக்குக் கிடைத்த பரிசென்றும் அவர் இன்னும் பல உயரங்களுக்குச் செல்வார்’ என்றும் பாராட்டினார்.

நிகழ்ச்சி முடிவடையும் முன்னர் கலர் வெடி கோகுல் சினிமா பாடகராக மாறியது அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதோடு, போட்டியாளர்களுக்கு பெரும் ஊக்கத்தைத் தந்துள்ளது.

திறமையால் ஒளிரும் எளிமையான சிறுவர்களுக்கு ஒரு அற்புதமான மேடையாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்கி வருகிறது.

கலர்வெடி கோகுல்

Super Singer Gokul get chance to sing in Thamans music

லியோ ட்ரெய்லர்.. ரோகினிக்கு வந்த ரோதனை.; நொறுக்கிய விஜய் ரசிகர்கள்

லியோ ட்ரெய்லர்.. ரோகினிக்கு வந்த ரோதனை.; நொறுக்கிய விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.

இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் டிரைலர் அக்டோபர் 5 தேதி மாலை 6.30 மணிக்கு வெளியானது.

இந்த ட்ரெய்லரை தியேட்டரில் பார்க்க ரசிகர்களுக்கு இலவசமாக அனுமதி அளித்திருந்தது சென்னை ரோகினி தியேட்டர் நிர்வாகம்.

எனவே கட்டுக்கடங்காத கூட்டம் தியேட்டரில் அலை மோதியது. தியேட்டரில் லியோ ட்ரெய்லர் திரையிடப்பட்ட போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து துள்ளி குதித்தனர்.

3 நிமிடங்களில் ட்ரெய்லர் வெளியீடு முடிந்தது. அதன் பிறகு தான் தியேட்டர் நிலைமையை காண முடிந்தது.

ரசிகர்கள் ஆரவாரம் போட்டு ஓடிக் குதித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் தியேட்டர் சீட்டுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு ரஜினி ‘ஜெயிலர்’ படத்தின் 50-வது நாள் கொண்டாட்டங்கள் இதே ரோகினி தியேட்டரில் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அப்போது கூட இது போன்ற எந்தவிதமான பிரச்சனை எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் படத்தின் டிரைலர் அல்லது ஏதாவது விழா நடைபெறும் போது இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது இங்கே கவனிக்கத்தக்கது.

Leo Trailer screening at Rohini Vijay fans destroyed seats

‘லியோ’ ட்ரைலரில் தாய்மையை அசிங்கப்படுத்தி ‘தளபதி’ பேசிய தரங்கெட்ட வார்த்தை

‘லியோ’ ட்ரைலரில் தாய்மையை அசிங்கப்படுத்தி ‘தளபதி’ பேசிய தரங்கெட்ட வார்த்தை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.

இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் டிரைலர் அக்டோபர் 5 தேதி மாலை 6.30 மணிக்கு வெளியானது.

இந்த ட்ரெய்லர் 2 நிமிடங்கள் 43 நொடிகள் ஓடுகிறது. இதில் விஜய், அர்ஜூன், மிஸ்கின், கௌதம் மேனன் ஆகியோரது தோற்றங்கள் வித்தியாசமாக உள்ளன.

ஒரு பக்கம் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஓடிக்கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் விஜய் பேசும் வசனங்கள் மாஸாக உள்ளன. திடீரென எதிர்பாராத விதமாக விஜய் பேசும் தே—- கெட்ட வார்த்தை பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அனிருத்தின் பின்னணி இசை பட்டையை கிளப்புகிறது ஆனாலும் இது ஏற்கனவே அனிருத் படங்களில் கேட்ட இசையாகவும் தோன்றுகிறது.

விஜய் பேசும் ஒரு வசனத்தில்.. “என்னைப்போல் ஒருவன் செய்யும் பிரச்சனைகளுக்கு என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்கிறார்./ஒருவேளை விஜய் இரண்டு கேரக்டர்களில் நடிப்பது போல தெரிகிறது.

மேலும் நாயகி த்ரிஷாவும் ஓரிரு நொடிகள் வந்து செல்கிறார். ஆக அக்டோபர் 19ஆம் தேதி நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு லியோ மாபெரும் ட்ரீட் கொடுக்கும் என நம்பலாம்.

Vijay spoke badwords in Leo Trailer

பொங்கல் – சங்க்ராந்தி விருந்தளிக்கும் ஆர்யா & வெங்கடேஷ்

பொங்கல் – சங்க்ராந்தி விருந்தளிக்கும் ஆர்யா & வெங்கடேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் பொயனபள்ளி, நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் ‘சைந்தவ்’ படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது.

(தெலுங்கில் சங்க்ராந்தி பண்டிகை)

விக்டரி வெங்கடேஷ்-இன் 75-வது படமாக உருவாகி வரும் சைந்தவ்-இல் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

ஹிட்வெர்ஸ் படத்தை இயக்கிய சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்-இன் வெங்கட் பொயனபள்ளி இப்படத்தை தயாரித்துள்ளார்.

வெங்கடேஷ்-க்கு பொங்கல் வெளியீடு எப்போதும் நல்ல வகையில் அமைந்து இருக்கிறது. மேலும் நீண்ட நாட்கள் பண்டிகை விடுமுறையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் படக்குழு இந்த முடிவை எடுத்திருக்கிறது.

முன்னதாக இந்த படத்தில் நடித்திருக்கும் எட்டு மிகமுக்கிய கதாபாத்திரங்கள்.. : வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஆர்யா, ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெர்மியா, சாரா மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோரை படக்குழு வித்தியாசமாக அறிமுகப்படுத்தி இருந்தது.

சைந்தவ் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

சைந்தவ்

பல்வேறு முன்னணி நடிகர்கள், மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடத்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, இப்படத்தில் ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

பாலிவுட்-ஐ சேர்ந்த பன்முகத் தன்மை கொண்ட நடிகரான நவாசுதீன் சித்திக், சைந்தவ் படத்தில் விகாஸ் மாலிக் கேரக்டர் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இப்பட நாயகியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். இவர் மனோயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ருஹானி ஷர்மா டாக்டர் ரேனுவாகவும், ஆன்ட்ரியா ஜெர்மியா ஜாஸ்மின் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை எஸ் மணிகண்டன் மேற்கொண்டுள்ளார்.

படத்தொகுப்பு பணிகளை கேரி பி.ஹெச். மேற்கொள்ள புரோடக்‌ஷன் டிசைனராக அவினாஷ் கொல்லா, இணை தயாரிப்பாளர் கிஷோர் தல்லூர் ஆகியோர் உள்ளனர்.

நடிகர்: வெங்கடேஷ், ஆர்யா, நவாசுதீன் சித்திக், ஷ்ரதா ஸ்ரீனாத், ருஹானி ஷர்மா, ஆன்ட்ரியா ஜெர்மியா, சாரா

தொழில்நுட்ப குழு:

எழுத்து-இயக்கம்: சைலேஷ் கொலனு
தயாரிப்பாளர்: வெங்கட் பொயனபள்ளி
பேனர்: நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்
இசை: சந்தோஷ் நாராயணன்
இணை தயாரிப்பாளர்: கிஷோர் தல்லுர்
ஒளிப்பதிவாளர்: எஸ். மணிகண்டன்
படத்தொகுப்பு: கேரி பி.ஹெச்.
ப்ரோடக்‌ஷன் டிசைனர்: அவினாஷ் கொல்லா
வி.எஃப்.எக்ஸ். மேற்பார்வையாளர்: பிரவீன் காந்தா
நிர்வாக தயாரிப்பாளர்: எஸ். வெங்கடரத்னம்
மக்கள் தொடர்பு: வம்சி-சேகர், சதீஷ் குமார்
விளம்பர வடிவமைப்பாளர்: அனில் மற்றும் பானு

சைந்தவ்

SAINDHAV movie Release In Theatres Worldwide on 13th January 2024

விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்

விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’.

இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30-ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த நிலையில் திடீரென ரத்தானது.

சமீபத்தில் ‘லியோ’ படத்தின் இரண்டாவது பாடலான `BADASS’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

‘லியோ’ திரைப்படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ம் தேதி நாளை மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘லியோ’ படத்தின் டிரைலரை ரோகிணி திரையரங்கின் பார்க்கிங்கில் வெளியிட காவல் ஆணையர் அனுமதி பெற வேண்டும் என்று கோயம்பேடு காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Big trouble for Vijays Leo Trailer screening

‘தலைவர் 170’ சூட்டிங் பூஜையுடன் ஆரம்பம்.; ரஜினி – மஞ்சுவுடன் இணைந்த டிவி நடிகர்

‘தலைவர் 170’ சூட்டிங் பூஜையுடன் ஆரம்பம்.; ரஜினி – மஞ்சுவுடன் இணைந்த டிவி நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தலைவர் 170’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கப்பட உள்ள நிலையில் ரஜினிகாந்த் அங்கு சென்றுள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ஞானவேல் இயக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங், உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 4 தேதி ரஜினியின் லுக்கை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் ரஜினியின் ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக உள்ளது.

தலைவர் 170

பொதுவாகவே 1980 90 ஆண்டுகளில் ரஜினியின் ஹேர் ஸ்டைலை பின்பற்றி பல ரசிகர்கள் தங்கள் சிகை அலங்காரத்தை மாற்றி அமைத்து இருந்தனர்.

தற்போது இந்த பட பூஜை புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் ரஜினி, மஞ்சு & இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் உள்ளனர். இவர்களுடன் பிரபல டிவி நடிகர் ரக்சனும் பங்கேற்றுள்ளார்.

தலைவர் 170

TV Actor Rakshan joins with Thalaivar 170 team

More Articles
Follows