காலாவுக்கு டைனோசர்; சர்காருக்கு ரிக்‌ஷா… கலாய்க்கும் *தமிழ்ப்படம்2*

Tamilpadam2 poster teasing Kaala Rajini and Sarkar Vijayதமிழ் சினிமா ரசிகர்கள் தமிழ் படத்திற்கு காத்திருப்பது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் வெகுநாட்களுக்கு பிறகு தற்போது தமிழ்ப்படம்2 என்ற படத்திற்கு பெரும் ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், ட்ரைலர் பாடல்கள் என அனைத்தும் பட்டி முதல் சிட்டி வரை பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் ஹிட்ட்டித்த எல்லா படங்களின் முக்கிய காட்சிகளையும் கலாய்த்து வருகின்றனர்.

முக்கியமாக ரஜினி, கமல், விஜய், அஜித், விஜயகாந்த், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் வரை அனைத்து ஹீரோக்களையும் ஏதாவது ஒரு காட்சியிலாவது கலாய்த்து உள்ளனர்.

அனைத்து தரப்பு ரசிகர்களும் அப்படி என்னதான் கலாய்த்து இருக்கிறார்கள் என பார்க்கவே, இந்த டீசர் ஹிட்டடிக்க இதுவே மிகப்பெரிய காரணமாகிவிட்டது.

அண்மையில் வெளியாக நடிகையர் திலகம் பட கீர்த்தி சுரேஷையும் கலாய்த்து ஒரு ஸ்டில் விட்டு இருந்தனர்.
மேலும் சின்ன கவுண்டர் விஜயகாந்த் போஸ்டரையும் கலாய்த்திருந்தனர்.

காலா பட போஸ்டரில் ரஜினி ஒரு நாய் மீது கை வைத்திருப்பார். அதனை கலாய்த்து சிவா ஒரு டைனோசர் மீது கை வைத்திருக்கிறார்.

சர்கார் பட 2வது போஸ்டரில் ஒரு காரில் அமர்ந்துக் கொண்டு விஜய் லேப்டாப் ஆப்ரேட் செய்வார். அதே ஸ்டைலில் மிர்ச்சி சிவா ஒரு ரிக்சாவில் அமர்ந்திருக்கிறார்.

இப்படம் வருகிற ஜீலை 12ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு பிறகு யாரையும் கலாய்க்க முடியாது என்பதால் அண்மைக்கால படங்களையும் அதன் போஸ்டர்களையும் முடிந்தவரை கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

சி.எஸ். அமுதன் இயக்கியுள்ள இப்படத்தில் சிவா நாயனாக நடிக்க, சதீஷ் வில்லனாக நடித்துள்ளார்.

Tamilpadam2 poster teasing Kaala Rajini and Sarkar Vijay

Overall Rating : Not available

Related News

கும்பகோணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கபாலி,…
...Read More
அமெரிக்கா நாட்டில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில்…
...Read More

Latest Post