தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் ரஜினிகாந்த் ஒரு நட்சத்திர பட்டாளத்துடன் நடித்து வருகிறார்.
இதில் ரஜினியுடன் சமுத்திரக்கனி, நானா படேகர், மற்றும் வில்லன் நடிகர் அருள்தாஸ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
இதன் சூட்டிங் பூந்தமல்லி அருகே அமைக்கப்பட்டுள்ள, மும்பை தாராவி செட்டில் நடந்து வருகிறது.
இதில், ரஜினி இருக்கும்போது அருள்தாஸ் பேசிக்கொண்டிருப்பது போல காட்சி இருந்தது.
அப்போது ஒரு ஜீப் வருவது போல காட்சி இருந்தது.
அந்த ஜீப் திடீரென அருள்தாஸ் மீது மோதியது. அவரது இடது காலில் ஜீப்பின் டயர் ஏறி இறங்கியது.
இதில் அவரது 3 விரல்கள் நசுங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது அங்கு தெரிய வந்துள்ளது.
தற்போது அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.