சூர்யாவின் அரசியல் படமான என்ஜிகே அர்த்தம் இதுவா..?

சூர்யாவின் அரசியல் படமான என்ஜிகே அர்த்தம் இதுவா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyas NGK Title meaning and shooting news updatesசூர்யா, ரகுல் பிரித்தி சிங், சாய்பல்லவி ஆகியோர் நடிக்க, செல்வராகவன் இயக்கி வரும் படம் என்ஜிகே.

இதன் தலைப்பு என்னவாக இருக்கும்? என்ற கேள்வி கோலிவுட்டில் வலம் வந்த வண்ணம் உள்ளன.

இது அரசியல் சார்ந்த கட்சி பெயராக இருக்கும் என தகவல்கள் வந்துள்ளன.

அதாவது.. தமிழகத்தில் டிஎம்கே, ஏடிஎம்கே, பிஎம்கே, டிஎம்டிகே, ஐஏகே, எம்என்எம் ஆகிய கட்சிகள் இருப்பது போல ‘என்ஜிகே’ என்பது ஒரு கட்சி பெயரை குறிக்கும் என கூறப்படுகிறது.

‘என்’ என்றால் ‘நேஷனல்’ என்றும், ‘கே’ என்றால் ‘கட்சி’ என்றும், ‘ஜி’ அவரது பெயரை குறிக்கும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் இதை நிரூபிக்கும் வகையில், அண்மையில் இப்படம் தொடர்பான சில புகைப்படங்கள் வெளியானது.

அதில் கட்சி கரை வேட்டியுடன் சூர்யாவும், புடவையில் சாய் பல்லவியும் உள்ளனர். மேலும் சூர்யாவின் சட்டையில் ஒரு ‘பேட்ஜ்’ம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Suriyas NGK Title meaning and shooting news updates

ஆந்திராவை அதிர வைக்கும் •அபிமன்யுடு• விஷால் காரு

ஆந்திராவை அதிர வைக்கும் •அபிமன்யுடு• விஷால் காரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishals Abhimanyudu get good collections in Telugu Industryமித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா மற்றும் பலர் நடித்து தமிழில் வெளியான படம் ‘இரும்புத்திரை’.

தமிழ் ரசிகர்களால் இப்படம் பெரிதும் பாராட்டப்பட்டது.

இப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.

தெலுங்கில் நேரடியாக வெளியான ‘ஆபீசர், ராஜு காடு’ ஆகிய படங்களை விட ‘அபிமன்யுடு’ படத்தின் ஓபனிங் சிறப்பாக இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘ஆபீசர்’ படத்தை ராம்கோபால் வர்மா இயக்க நாகார்ஜுனா நாயகனாக நடித்துள்ளார்.

‘ராஜு காடு’ படத்தில் ராஜ் தருண், அமைரா தஸ்தூர் நடித்திருந்தனர்.

அண்மை காலமாக தமிழில் விஷாலுக்கு வெற்றிப் படங்கள் அமையவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வசூல் படமாக ‘இரும்புத்திரை’ அமைந்தது போல தெலுங்கிலும் ‘அபிமன்யுடு’ படம் நல்ல வசூலைப் பெறும் எனத் தெரிகிறது.

Vishals Abhimanyudu get good collections in Telugu Industry

தனுஷ் இயக்கி நடிக்கும் படத்திற்கு அனிருத் இசை.?

தனுஷ் இயக்கி நடிக்கும் படத்திற்கு அனிருத் இசை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Aniruch combo will join again in VIP3தனுஷ் தயாரித்து நடித்த விஐபி படத்தின் முதல் பாகத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கினார்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படம் பெரும் ஹிட்டடித்தது.

எனவே 2ஆம் பாகத்தையும் தனுஷ் தயாரித்து நடித்தார்.

இப்படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

இப்படம் முதல் பாக அளவுக்கு வெற்றிப் பெறவில்லை என்றாலும், ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எனவே இதன் 3ஆம் பாகத்தை உருவாக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதை தனுஷே இயக்க வாய்ப்புள்ளதாகவும் அனிருத் இசையமைக்கக் கூடும் எனத் தெரிய வந்துள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ‘அடுத்த வருடம் 2019 தனுஷுடன் இணைவேன் என அனிருத் கூறியிருந்தது நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

Dhanush and Anirudh combo will join again in VIP3

தேவராட்டம் படத்திற்காக கௌதம் உடன் ஆட்டம் போடும் மஞ்சிமா

தேவராட்டம் படத்திற்காக கௌதம் உடன் ஆட்டம் போடும் மஞ்சிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manjima Mmohan on board in Devarattam opposite to Gautham Karthikஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் 15 வது படத்தின் பெயர் “தேவராட்டம்”.

இப்படத்தை குட்டி புலி, கொம்பன், மருது, கொடி வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்குகிறார் என்பதை பார்த்தோம்.

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். எடிட்டிங் செய்கிறார் பிரவீன்.

இப்படத்தில் நாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்க, முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார்.

இந்நிலையில் ஹீரோயினாக மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ள தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Manjima Mmohan on board in Devarattam opposite to Gautham Karthik

devarattam team

பிரச்சினை இல்லாமல் மணிரத்னம் படத்தை முடித்து கொடுத்தார் சிம்பு

பிரச்சினை இல்லாமல் மணிரத்னம் படத்தை முடித்து கொடுத்தார் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu completed his portions in Chekka Chivantha Vaanam and Shoot wrapped

சிம்பு நடிப்பில் வளர்ந்து வந்த செல்வராகவனின் கான் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

அதற்கு முன் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படமும் பல பிரச்சினைகள் தாண்டியே வெளியானது.

சிம்பு சூட்டிங்குக்கு சரியாக வராத காரணத்தால் படத்தின் கதையையே மாற்றியதாக ஏஏஏ (அன்பானவன் அசராதவன் அடங்காதவன்) படக் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இப்படிதான் அண்மை காலமாக சிம்பு படத்தின் செய்திகளை பார்த்து வந்தோம்.

ஆனால் முதன்முறையாக எந்த பிரச்சினையும் இல்லாமல் ஒரு படத்திற்கு கால்ஷீட் கொடுத்து அதை சரியாக முடித்துக கொடுத்துள்ளார் சிம்பு.

அந்த படம்தான் மணிரத்னம் இயக்கி வரும் செக்கச் சிவந்த வானம் திரைப்படம்.

இப்படத்தில் சிம்பு உடன் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் துபாயில் படப்பிடிப்பை முடித்த மணிரத்னம், அடுத்ததாக செர்பியாவில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தார்.

தற்போது சிம்பு காட்சிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்க இருப்பதாகவும் படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Simbu completed his portions in Chekka Chivantha Vaanam and Shoot wrapped

விஜய்யுடன் இணைந்தார் வரலட்சுமி; தளபதி62 படத்தலைப்பு ஆயுதப் பெயரா.?

விஜய்யுடன் இணைந்தார் வரலட்சுமி; தளபதி62 படத்தலைப்பு ஆயுதப் பெயரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varalakshmi joins with Vijay for Thalapathy 62 shooting updatesஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி ஆகியோர் ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.

தற்காலிகமாக இப்படத்திற்கு தளபதி 62 என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

அப்போது வரலட்சுமி காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால், அவர் சூட்டிங்கில் கலந்துக் கொண்டுள்ளார்.

அரசியல் பின்னணியில் உருவாகும் இப்டத்திற்கு கோடாரி எனப் பெயரிடப்படலாம் என கூறப்படுகிறது.

ஏஆர் முருகதாஸ் இயக்கிய விஜய்யின் 2 படங்களுக்கு கத்தி, துப்பாக்கி என ஆயுதப் பெயரை வைத்திருந்தனர்.

எனவே அந்த ராசிப்படி இந்த படத்திற்கு ஆயுத பெயரை வைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Varalakshmi joins with Vijay for Thalapathy 62 shooting updates

More Articles
Follows