மே 10ல் என்ஜிகே; ஆகஸ்ட் 15ல் காப்பான்.. பக்கா ப்ளானில் சூர்யா

மே 10ல் என்ஜிகே; ஆகஸ்ட் 15ல் காப்பான்.. பக்கா ப்ளானில் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya plans to release NGK on 10th May and Kaappaan on 15th Augustசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் என்ஜிகே.

இப்படம் கடந்த 2018ஆம் ஆண்டிலேயே வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் சில பிரச்சினைகளால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிக் கொண்டே இந்த வருடம் மார்ச் வரை நீடித்து வருகிறது.

இந்நிலையில் கோடை விடுமுறை ஸ்பெஷலாக மே 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தை ஆகஸ்ட் 15ல் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

Suriya plans to release NGK on 10th May and Kaappaan on 15th August

அவரை சந்தித்தால் நாளையே திருமணம்.; த்ரிஷா திடீர் அறிவிப்பு

அவரை சந்தித்தால் நாளையே திருமணம்.; த்ரிஷா திடீர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Trisha marriage news updatesகிட்டதட்ட 18 வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் நாயகியாக நடித்து வருகிறார் த்ரிஷா.

டாப் ஹீரோஸ் முதல் எல்லா நாயகர்களுடனும் நடித்து வருகிறார்.

ஆனால் இதுவரை இவர் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

தெலுங்கு நடிகர் ராணாவும் காதல் என கிசுகிசுக்கப்பட்டாலும் அது திருமணம் வரை செய்யவில்லை.

இதன் பின்னர் தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியனோடு காதல் கொண்டு அவரை நிச்சயமும் செய்தார்.

ஆனால் அதுவும் திருமணம் வரை கூட செல்லவில்லை.

இந்த நிலையில், தனது சமீபத்திய பேட்டியில் திருமணம் பற்றி மனம் திறந்துள்ளார்.

தற்போது நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு பிடித்த சரியான ஒருவரை சந்தித்தால் நாளையே திருமணம் செய்துக் கொள்ள தயார் எனவும் கூறியுள்ளார்.

அவர் யாரோ? என்பது மில்லியன் கேள்வி

Actress Trisha marriage news updates

90 ML எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது தேஜ்ராஜ்

90 ML எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது தேஜ்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tejraj and saranraj90 ML படத்தில் துடிதுடிப்புடன் ரவுடி என்ற வேடத்தில் ஹீரோவாக நடித்திருந்த இளைஞரை பார்த்திருப்பீர்கள்…

அவர் தான் தேஜ்ராஜ்…தேஜ்ராஜ் வேறு யாருமில்லை…பிரபல நடிகரான சரண்ராஜின் மகன் தான் இவர்.

அப்பாவின் அடையாளத்தை வெளிக் காட்டாமல் நடித்து இன்று வெள்ளித்திரையில் தானும் ஜொலிக்க முடியும் ..ஜெயிக்க .முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.

அவரிடம் பேசியதிலிருந்து….

எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது பற்று உண்டு…

நிறைய படங்களைப் பார்த்து சினிமா ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். அதோடு இல்லாமல் எஸ்.ஆர்.எம் காலேஜில் விஸ்காம் முடித்தேன். ரகுராம் மாஸ்டரிடமும், ஸ்ரீதர் மாஸ்டரிடமும் டான்ஸை முறைப்படி கற்றுக் கொண்டேன். பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டண்ட் கற்றுக் கொண்டேன். கூத்துபட்டறை,பாலுமகேந்திரா இன்ஸ்டிட்யூட் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள நடிப்பு பள்ளி ஆகியவற்றில் நடிப்பை கற்றுக் கொண்டேன்.

90 ML பட வாய்ப்பு கிடைத்தது..நடித்து படமும் வெளி வந்து எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இன்று என்னை பார்க்கிற பல பேருக்கு அடையாளம் தெரியுது. ஆட்டோகிராப் வாங்குறாங்க…கை கொடுக்கிறாங்க எனக்கு சந்தோஷமா இருக்கு.இன்னும் சாதிக்கனும்னு வெறி இருக்கு. அதற்கான முயற்சியில இருக்கேன்.

நிறைய பேர் வில்லனா நடிப்பீங்களான்னு கேட்கிறாங்க. வில்லனா ஹீரோவாங்கிறது முக்கியமில்லை.,.பேர் வாங்கனும் …அப்பா மாதிரி சினிமாவில நிலைச்சி நிக்கனும்…அது தான் என் ஆசை.

நடிக்க நிறைய வாய்ப்பு வருது…கதை கேட்டுட்டு இருக்கேன்…கூடிய சீக்கிரம் எந்த படத்துல நடிக்கிறேன்ங்கிறத சொல்றேன் என்றார் இந்த துடிப்புள்ள இளைஞர் ஜிம்முக்கு கிளம்பிய படியே.

போதை ஏறி புத்தி மாறி படத்தில் அறிமுகமாகும் மாடல் நடிகை பிரதைனி சர்வா!

போதை ஏறி புத்தி மாறி படத்தில் அறிமுகமாகும் மாடல் நடிகை பிரதைனி சர்வா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)எந்தவொரு மாடல் நடிகையும் பிறப்பிலேயே நடிகையாக இருப்பதில்லை, ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே மிகச்சிறந்த நடிகையாக மாறும் அதிர்ஷ்டம் கிடைக்கும். இத்தனை ஆண்டுகளில் அத்தகைய அரிதான மாடல் நடிகைகள் திரை வாழ்வில் சாதித்து, தங்கள் இடத்தை நிறுவுவதை நாம் பார்த்திருக்கிறோம். லென்ஸ், ஸ்பாட்லைட்ஸ் என புகழ் வெளிச்சத்திலேயே இருந்த, மிகவும் கொண்டாடப்பட்ட மாடல் பிரதைனி சர்வா, ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மூலம் நடிகையாக தனது பயணத்தை தொடங்குகிறார். தனித்துவமான கதை மற்றும் வலுவான கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் கே.ஆர். சந்துரு. ஏற்கனவே குறும்படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்ற தீரஜ் இந்த படத்தில் நடிக்கிறார்.

இந்த படம் குறித்து நாயகி பிரதைனி சர்வா கூறும்போது, “தனிப்பட்ட முறையில், திரைப்படங்களில் சில பெண் கதாபாத்திரங்களை நான் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவை பார்வையாளர்களை ஊக்குவிக்கும் அல்லது உற்சாகப்படுத்தும். நடிகைகள் வெறுமனே பார்பி பொம்மைகள் அல்லது கவர்ச்சி சின்னங்களாக சித்தரிக்கப்படக் கூடாது என்பதை நான் நம்புகிறேன். இயக்குனர் சந்துரு எனக்கு கதையையும், என் கதாபாத்திரத்தையும் விளக்கிய போது, என் கதாபாத்திரம் பிருந்தாவை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. வெறுமனே என் கதாபாத்திரம் மட்டுமல்ல, படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அழுத்தமானதாக இருந்தது. இயக்குனர் சந்துருவை பாராட்டும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை, ஆனால் கே.ஆர்.சந்துரு உண்மையில் திறமை வாய்ந்த இயக்குனர், அவரது திறமையை திரையுலகம் கண்டிப்பாக புகழும்” என்றார்.

போதை ஏறி புத்தி மாறி திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட, சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் திரைப்படம். ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களும் படத்தில் உண்டு. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, கேபி இசையமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். கோபி ஆனந்த் கலை இயக்குனராகவும், சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

அமெரிக்காவில் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

அமெரிக்காவில் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறும் சர்வதேச திபுரான் திரைப்படவிழாவிலும் மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” தேர்வாகியுள்ளது. தொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட பட்டுகொண்டிருக்கும் இத்திரைபடத்திற்க்கு திரைப்ப்ட விழாக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழாவில் தேர்வுசெய்யப்பட்டு வெளியாகியுள்ளது
சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது.

இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரத்யோகமாக பின்னனி இசை இல்லாதாது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது குறிப்பிடதக்கது.
எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் சுசீந்திரன்; கடுப்பான ரஜினி ரசிகர்கள்

அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் சுசீந்திரன்; கடுப்பான ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Suseenthiran invites Ajith to enter into Politics தமிழக அரசியல் எப்படி இருக்கிறது? என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். யாராவது நல்லவர் ஒருவர் வந்து தமிழகத்தை காப்பாற்ற மாற்றாரா? என அனைவரும் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் அவர்கள்.. தலைவா…. வா.. நாங்கள் காத்திருக்கிறோம் என்று ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டார்.

பொதுவாக திரையுலகினர் ரஜினியை தலைவா என அழைப்பார்கள். எனவே அவர் ரஜினியைத்தான் குறிப்பிடுகிறார் என நினைத்தனர்.

ரஜினி ரசிகர்களும் அவ்வாறே நினைத்து உற்சாகம் அடைந்தனர்.

ஆனால் சில மணி நேரங்களுக்கு பிறகு தலைவா என்பதை அஜித்தை குறிப்பதாக சுசீந்திரன் பதிவிட்டார். இதனால் ரஜினி ரசிகர்கள் கடுப்பாகினர்.

அந்த பதிவில் “40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன்.

இது தான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு…. உங்களுக்காக காத்திருக்கும், பலகோடி மக்களில் நானும் ஒருவன்” என்று தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2017-ம் ஆண்டு “சினிமா துறையில் இருந்து அடுத்து யார் முதல்வராக வர தகுதியானவர்கள் என்ற கேள்விக்கு, நான் அளித்த பதில் கமல் சார், அஜித் சார் வந்தா நல்லா இருக்கும்” என்று சுசீந்திரன் கூறியிருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஆனால் அரசியலே வேண்டாம். அஜித்தே போதும என தல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஏனென்றால் 2 மாதங்களுக்கு முன் தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என அஜித் அறிக்கை விட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Suseenthiran invites Ajith to enter into Politics

More Articles
Follows