NGK டீசர் லீக்கானது..; அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய சூர்யா வருகிறார்

NGK டீசர் லீக்கானது..; அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய சூர்யா வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NGK Teaser Leaked Suriyas Political punchசூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் என்ஜிகே.

இதில் நாயகிகளாக ரகுல் பிரித்தி சிங், சாய் பல்லவி இருவரும் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் சூட்டிங் சில தடங்களால் நின்றுபோனது. பின்னர் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி தற்போது கோடை விடுமுறைக்கு படம் வருகிறது.

இதன் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் தற்போது இணையங்களில் கசிந்துள்ளது.
இதற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த டீசர் 1 நிமிடம் 6 நொடிகள் ஓடக்கூடியது.

இந்த டீசரில் அரசியல் களத்தில் இறங்க சூர்யா ஆயுத்தமாகி வருவதாக தெரிகிறது. இந்த டீசரில் நீங்க இறங்குனா அது சாக்கடையா இருந்தாலும் சுத்தமாகிடும் என சாய்பல்லவி சொல்வதாக டயலாக்குகள் உள்ளது.

மேலும் இதில் சூர்யா விவசாயி போல நடிப்பதாகவும் காட்சிகள் உள்ளது. இறுதியாக காத்திருப்போம் என்ற சூர்யா பேசும் வசனத்துடன் முடிகிறது என்ஜிகே டீசர்.

NGK Teaser Leaked Suriyas Political punch

தல பிறந்தநாளில் அஜித்துடன் மோதும் Mr லோக்கல் சிவகார்த்திகேயன்

தல பிறந்தநாளில் அஜித்துடன் மோதும் Mr லோக்கல் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mr Local Sivakarthikeyan clash with with Thala 59 on 1st Mayஞானவேல்ராஜா தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘மிஸ்டர்.லோக்கல்’.

இதில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.

‘வேலைக்காரன்’ படத்திற்கு பிறகு இவர்கள் ஜோடியாக இணைந்துள்ள படம் இது.

இவர்களுடன் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதி இசையக்க தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மே மாதம் 1ம் தேதி, உழைப்பாளர் தினத்தில் இப்படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நாளில்தான் அஜித் நடித்துவரும் தல 59 படமும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Mr Local Sivakarthikeyan clash with with Thala 59 on 1st May

காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம்

காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedy Actress Jangiri Madhumitha marriage news updatesநிறைய படங்களில் காமெடி நடிகையாக வலம் வந்தாலும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானத்துடன் நடித்து பிரபலமானவர் மதுமிதா.

அண்மையில் வெளியான அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் அவரின் சகோதரியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை மதுமிதாவிற்கும் அவரது உறவினரும் உதவி இயக்குனருமான மோசஸ் ஜோயல் என்பவருக்கும் நாளை (பிப்ரவரி 15) திருமணம் நடக்கவுள்ளது.

Comedy Actress Jangiri Madhumitha marriage news updates

சிம்புவின் அரசியல் மாநாட்டில் பங்கேற்கிறார் ஜெய்

சிம்புவின் அரசியல் மாநாட்டில் பங்கேற்கிறார் ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jai to play a cameo in Simbus Maanaaduசிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான செக்கச் சிவந்த வானம் மற்றும் வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக சிம்பு நடிக்கவுள்ள படம் மாநாடு. இப்படம் முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகிறது.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

இந்நிலையில் சிம்புவுடன் முக்கிய கேரக்டரில் நடிகர் ஜெய் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கு முன்பே வாலு மற்றும் இது நம்ம ஆளு படங்களிலும் ஜெய் சிம்புவுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jai to play a cameo in Simbus Maanaadu

அதிகாலையில் ‘90ML’ காட்சி; ரசிகர்களுடன் படம் பார்க்கும் ஓவியா

அதிகாலையில் ‘90ML’ காட்சி; ரசிகர்களுடன் படம் பார்க்கும் ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oviyaபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டவர் நடிகை ஓவியா.

இவர் தற்போது 90 எம்.எல் என்ற அடல்ட் ஒன்லி படத்தில் நடித்துள்ளார். யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அனித் உதுப் இப்படத்தை இயக்க, நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார்.

இப்பட டிரைலர் வெளியாகி இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அதே சமயம் மற்றவர்கள் பட ட்ரைலரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படம் அடுத்த வாரம் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அப்போது அதிகாலை சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க உள்ளதாக ஓவியா தெரிவித்துள்ளார்.

மீண்டும் நயன்தாராவுடன் இணையும் விக்னேஷ் சிவன்

மீண்டும் நயன்தாராவுடன் இணையும் விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara and vignesh shivanபோடா போடி மற்றும் நானும் ரௌடிதான் படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.

நானும் ரவுடிதான் படம் மாபெரும் வெற்றிப் பெற்ற ராசியை அடுத்து நயன்தாராவுடன் நெருக்கம் காட்டினார் விக்னேஷ் சிவன்.

அதன்பின்னர் சில படங்களுக்கு பாடல்கள் எழுதினாலும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. பின்னர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார்.

கிட்டதட்ட 7 வருடங்களில் 3 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். ஆனால் தன் முழு நேர வேலையாக நயன்தாராவுடன் சுற்றி வருகிறார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கவுள்ளாராம் விக்னேஷ் சிவன்.

அப்படத்தை ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்க நாயகியாக நயன்தாரா நடிக்கிறாராம்.

எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

More Articles
Follows