தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிறந்த நடிகராகவும் நல்ல மனிதராகவும் வெற்றி வாகை சூடி வருகிறார் சூர்யா.
தன் அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்காக பல உதவிகளை செய்து வருகிறார்.
மேலும் இயற்கை பசுமையை போற்றும் வகையில் மாத இதழையும் நடத்தி வருகிறார்.
தற்போது ஹரி இயக்கி வரும் சிங்கம்-3 படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், சென்னை தீவுக்கடலில் நடைபெற்ற இரவு நேர மராத்தான் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
இதில் கிட்டதட்ட 5 கிலோ மீட்டர் வரை சூர்யா ஓடியுள்ளார்.
ஏழை குழந்தைகளின் படிப்பு செலவுக்காக இந்த போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.