சூர்யாவை சுற்றி வளைத்து ராஜு பாய் என கோஷமிட்ட ரசிகர்கள்

Suriya fans crowd Rajamundry at NGK shootingசூர்யா மற்றும் இயக்குனர் செல்வராகவனின் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு ராஜாமுந்திரியில் வைத்து நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யா பங்குபெற்று நடித்து வருகிறார். அவர் நடிக்கும் காட்சிகள் வேகமாக அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.

சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பு அங்கே நடைபெறுகிறது என்று இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்டதிலிருந்து. அங்குள்ள ரசிகர்கள் அவரை காண படப்பிடிப்பு தளத்துக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

நேற்று சூர்யாவை காண படப்பிடிப்பு தளத்துக்கு வந்த ரசிகர்கள் கேரவனில் இருந்து வெளியே வந்த சூர்யாவை சூழ்ந்தனர்.

சூர்யாவை சூழ்ந்து ராஜு பாய், சூர்யா என்று கோஷங்கள் எழுப்பிய வண்ணம் அவருக்கு அன்பு வரவேற்பு அளித்தனர்.

சூர்யாவும் அவர்களுக்கு கையசைத்து அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

தெலுங்கில் தமிழுக்கு நிகராக சூர்யாவுக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்பது நாம் அறிந்த ஒன்று. அவரை நேற்று ரசிகர்கள் சூழ்ந்து கோஷங்கள் எழுப்பியது ஏதோ தமிழ் நாட்டில் நடக்கிறதா ? அல்லது ஆந்திராவில்லா ? என்று ஒரு யோசிக்க வைத்தது என்று தான் கூறவேண்டும்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க ட்ரீம் வாரியார் பிச்சர்ஸ் S.R. பிரகாஷ் பாபு , S.R. பிரபு தயாரிக்கிறார்கள்.

Suriya fans crowd Rajamundry at NGK shooting

Overall Rating : Not available

Related News

நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து…
...Read More
சூர்யா நடிப்பில் உருவாகியிள்ள என்ஜிகே படத்தை…
...Read More
சூர்யா நடிப்பில் செல்வராகவன் உருவாக்கியுள்ள படம்…
...Read More
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள `என்ஜிகே' வருகிற…
...Read More

Latest Post