தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து தான் தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்தார் சூர்யா.
அது தொடர்பான அறிக்கையில்… “சூரரைப் போற்று திரைப்படத்தின் வெளியீட்டுத் தொகையிலிருந்து ரூ.5 கோடியை க்களுக்கும், திரையுலக சங்கங்களுக்கும் கொரோனா களத்தில் பணியாற்றியவர்களுக்கும் பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளேன்” என தெரிவித்திருத்தார்.
அதன்படி முதற்கட்டமாக ஐந்து கோடியில் 1.5 கோடியை திரையுலகினருக்கு அளித்துள்ளார் சூர்யா.
இதில் திரையுலகத்தின் தொழிலாளர்கள் அமைப்பான ‘பெப்சி’ க்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இத்தொகையை பெப்சியின் தலைவர் ஆர். கே. செல்வமணியிடம், 80 லட்ச ரூபாயும், பெப்ஸியின் அங்கமான இயக்குநர் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரிடம் 20 லட்ச ரூபாயும் பிரித்து வழங்கப்பட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்றுக்கொண்டு, அதை தயாரிப்பளர்கள் சங்க தனி அலுவலரிடம் வழங்குகிறார்.
தென்னித்திய நடிகர் சங்கத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டடது. நடிகர் சங்கத்தலைவர் நாசர் பெற்றுக்கொண்டு அதை அவர், நடிகர் சங்க தனி அலுவலரிடம் வழங்குவார். இந்தத் தொகைகளுக்கான காசோலைகளை சிவக்குமார் வழங்கினார்.
இந்த நிகழ்வில், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இயக்குநர் பாரதிராஜா தலைமையேற்க, நடிகர் சிவகுமார் முன்னிலையில் கொடுக்கப்பட்டது.
சூர்யாவின் 2டி பட நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜ்சேகர பாண்டியன் மற்றும் தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி லலித்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.
1.5 கோடி கொடுக்கப்பட்டது போக மீதமுள்ள ரூ. 3.5 கோடி தொகை பகிர்ந்தளிப்பு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.