தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலக சினிமாவின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.
இந்த விருதுக்காக உலகெங்கிலும் உள்ள பல மொழி திரைப்படங்கள் பல ஆண்டுகளாக போட்டியிட்டு வருகின்றன.
இந்திய சினிமாவை பொறுத்தவரை ஒரே சமயத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.
தமிழ் சினிமாவை பொறுத்த வரை நடிகர் கமலஹாசனின் ஓரிரு திரைப்படங்கள் ஆஸ்கர் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் விருதுகள் எதுவும் பெறவில்லை.
அதே போல.. அண்மையில் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கார் விருது போட்டியில் பங்கெடுத்தன.
இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினராக தேர்வாகியுள்ளார் நடிகர் சூர்யா.
அதேபோல் இந்தியாவிலிருந்து நடிகை கஜோலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் ‘மின்சார கனவு’ படத்தில் அரவிந்தசாமி மற்றும் பிரபுதேவா உடன் நடித்தவர் நடிகை கஜோல் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையில் இருந்து ஏற்கனவே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் தேர்வு குழு உறுப்பினராக உள்ளார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Suriya and Kajol have been invited by The Academy to join as the member of Oscars 2022