நீங்க செய்றது சரியில்ல; பொதுமேடையில் ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்

நீங்க செய்றது சரியில்ல; பொதுமேடையில் ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaமூவிபப் பர்ஸ்டகிளாப் சீசன்-2 குறும்பட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் இன்று அறிவித்துள்ளது.

இதற்கான நிகழ்வு இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்ட சூர்யா பரிசுகளை வழங்கினார்.

அப்போது சூர்யா ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர். அவர்கள் என்ஜிகே என்ஜிகே என்று கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர்.

என்ஜிகே திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாமல் தள்ளிக் கொண்டே போவதால், ரசிகர்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

தீபாவளிக்கு என்ஜிகே ரிலீஸ் இல்லை; சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்!

ரசிகர்கள் தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்ட இருந்ததால்.. இது நம்ம நிகழ்ச்சியில்லை. மற்றொரு நிகழ்ச்சி. அங்கே நம்மை பற்றி நம் படத்தை பற்றி பேசுவது சரியில்லை. நீங்கள் இப்படி செய்வது சரியா படல.” என்றார்.

மேலும் பேசும்போது… “இந்த குறும்படங்களை போல ஒரு வித்தியாசமான முயற்சியாகத்தான் என்.ஜி.கே உருவாகிவருகிறது.

சில நேரங்களில் எங்களையும் மீறி ஒரு விஷயம் நடக்கும்போது நாம் அமைதியாக ஒத்துழைப்பு கொடுத்துதான் ஆகவேண்டும்.

உங்களுடைய ஆதங்கம் புரிகிறது.. இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க” அவர்களை அமைதிப்படுத்தினார் சூர்யா

*ராமர் பாலம்* படத்திற்காக காதலர்கள் கட்டிய பாலம் !

*ராமர் பாலம்* படத்திற்காக காதலர்கள் கட்டிய பாலம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ramar palamகர்ணன் மாரியப்பன் மற்றும் M.முருகேசன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராமர் பாலம்’. சமூக கண்ணோட்டத்துடன் கூடிய காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் புதுமுகங்கள் மது மற்றும் நிகிதா ஜோடியாக நடித்துள்ளனர். நாயகியின் அண்ணனாக ‘பீச்சாங்கை’ கார்த்திக் நடிக்க, கோகுல், கலைமாமணி பி.கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான கர்ணன் மாரியப்பன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். அடிப்படையில் டாக்டரான கர்ணன், தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர். சினிமா மீதிருந்த ஆசையில் இயக்குனராக முடிவெடுத்து சென்னையில் செட்டிலாகிவிட்டார்.

ராமாயணத்தில் ராமர் சீதையின் மீது கொண்ட காதலால் ராமர் பாலம் உருவானது.. அதேபோல தண்ணீர் நிறைந்து ஓடும் ஆற்றங்கரையில் உள்ள இரண்டு ஊர்களுக்கு இடையே பாலம் கட்ட நினைக்கிறார்கள் ஊர்மக்கள்.. ஆனால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என முறையிட்டும் அது நடக்கவில்லை.. ஆனால் ஒரு காதல் காரணமாக அந்த ஊருக்கு பாலம் வருகிறது.. அது எப்படி என்பதுதான் இந்தப்படத்தின் கதை.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நீண்டநாளாக இப்படி ஒரு பாலம் கட்டப்பட வேண்டும் என்பது அந்தப்பகுதியில் உள்ள இரண்டு ஊர் மக்களின் விருப்பமாக இருந்ததாம்.. இந்தப்படம் எடுத்து முடிக்கவும், அங்கே பாலம் கட்டி முடிக்கவும் சரியாக இருந்ததாம்..

விக்ரமனிடம் துணை இயக்குனராக இருந்தவரும் ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்கிற சூப்பர்ஹிட் பாடலை எழுதியவருமான கலைக்குமார் பாடல்களை எழுதியுள்ளார் கம்பம் கர்ணா, கவி பாஸ்கர் ஆகியோரும் இதில் பாடல்களை எழுதியுள்ளனர். கோபால் இசையமைத்துள்ளார். ஆனந்த் சரவணன்-காளிமுத்து இருவரும் ஒளிப்பதிவை கவனிக்க, .பி.செல்வமணி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

போஸ்ட் புரொடக்சன் மற்றும் சென்சார் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தப்படம் வரும் செப்டம்பரில் திரைக்கு வர இருக்கிறது.

*அவளுக்கென்ன அழகிய முகம்* சூட்டிங்கில் பாதியில் ஓட்டமெடுத்த நடிகை

*அவளுக்கென்ன அழகிய முகம்* சூட்டிங்கில் பாதியில் ஓட்டமெடுத்த நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anupama prakashகதிரவன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அவளுக்கென்ன அழகியமுகம்,பாடல்கள் கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார் A.கேசவன் இயக்கும் இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகளை கொடைக்கானல் மலை உச்சியில் படமாகிக்கொண்டு இருந்தனர்.. மிக உயரமான இடத்தில் வைத்து பாடலை நடன இயக்குனர் ஷங்கர் படம்பிடித்து க்கொண்டு இருந்த வேளையில் உயரமான இடத்தில் நிற்கவைத்தால்

பயத்தில் இருந்த நடிகை அனுபமா பிரகாஷ்.. மாலை படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனது அறை வரை சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவர்.. யாரிடமும் சொல்லாமல் மதுரையில் இருந்து விமானம் மூலம் தனது சொந்த ஊர் டெல்லிக்கு விட்டார்..இந்த தகவல் தெரியாமல் படப்பிடிப்பு தளத்தில் காத்திருந்த குழுவினர்கள்..அவரை கொடைக்கானல் முழுவதும் தேடினர்..பின்பு தான் தெரிந்தது அவர் டெல்லி சென்றது, பின்னர் உடனே தயாரிப்பாளர் டெல்லிக்கு சென்று சமாதானம் செய்து மீண்டும் படபிடிப்பிற்கு அழைத்து வந்தார்…”அவளுக்கென்ன அழகியமுகம்” திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம்7தேதி வெளியாகிறது..

*மயக்கம் என்ன* தனுஷ் வரிசையில் விஜய்சேதுபதியின் *96*

*மயக்கம் என்ன* தனுஷ் வரிசையில் விஜய்சேதுபதியின் *96*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

96மயக்கம் என்ன படத்தில் தனுஷ் போட்டோ கிராபராக நடித்தார்.

தற்போது 96 படத்தில் விஜய்சேதுபதியும் போட்டோ கிராபராக நடிக்கிறாராம். அதன் விவரம் வருமாறு..

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘96 என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.

கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார் . மற்றும் ஜனகராஜ், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம்

இசை – கோவிந்த் மேனன்

எடிட்டிங் – கோவிந்தராஜ்

கலை – வினோத் ராஜ்குமார்

பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா.

எழுத்து, இயக்கம் – C.பிரேம்குமார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.

தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்

படத்தின் அனைத்துகட்ட பணிகளும் முடிந்து விட்டது. விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி புகைப்பட கலைஞராக நடித்துள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களை விட இந்த படம் அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு அனுபவத்தை தரும். படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது எங்களுக்கு கிடைத்த வெற்றிதான் படமும் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்ல என்றார் இயக்குனர் C.பிரேம்குமார்.

படத்தை உலகம் முழுவதும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் S.S.லலித்குமார் வெளியிடுகிறார்.

கவிஞர் அறிவுமதி வெளியிட்ட அமெரிக்கத் தமிழரின் *என் செடி உன் பூக்கள்* கவிதைகள்

கவிஞர் அறிவுமதி வெளியிட்ட அமெரிக்கத் தமிழரின் *என் செடி உன் பூக்கள்* கவிதைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

En Sedigal Un Pookkal book written by Dr Chitra Mahesh and released by Poet Arivumathiடல்லாஸ் : அமெரிக்கத் தமிழர் முனைவர். சித்ரா மகேஷ் எழுதிய கவிதைகள் அடங்கிய ‘உன் செடி என் பூக்கள்’ புத்தகத்தைக் கவிஞர் அறிவுமதி வெளியிட்டார். சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன், கால்டுவெல் வேள்நம்பி மற்றும் அருண்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

அமெரிக்கத் தமிழர்களின் மொழி இன உணர்வுகளையும் அது சார்ந்த தமிழ் விழாக்களையும் பாராட்டிய கவிஞர்.அறிவுமதி, இத்தகைய தமிழ்ப் படைப்புகளும் இந்த மண்ணிலிருந்து வெளி வரவேண்டும். முனைவர். சித்ரா மகேஷின் கவிதைத் தொகுப்புக்குப் பாராட்டுகள். மேலும் பல படைப்புகளை அவர் படைக்க வேண்டும் என வாழ்த்தினார்.

எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசும் போது, அமெரிக்காவில் தமிழுக்கு இத்தகைய வரவேற்பும், சிறப்பும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த புத்தக வெளியீட்டில் முனைவர்.சித்ரா மகேஷின் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டது மகிழ்ச்சியான தருணமாகும். அவர் மென் மேலும் பல படைப்புகளும், இந்த மண் சார்ந்த இலக்கியங்களும் தமிழில் படைக்க வேண்டும் என்று கூறினார்.

தமிழ் விழா வின் ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் வேள்நம்பி, முனைவர். சித்ரா மகேஷின் திருக்குறள் அறிவு, எழுத்தாற்றல், தமிழ்ப் பணிகள் குறித்து விவரித்து வாழ்த்தினார். ஃபெட்னா தொழில் முனைவோர் கருந்தரங்க ஒருங்கிணைப்பாளர் அருண்குமாரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

‘இத்தகைய பெருமை மிக்க மேடையில், என் முதல் நூலைப் பெரும் மதிப்பிற்குரியவர்களான கவிஞர். அறிவுமதி வெளியிட எழுத்தாளர் சு.வெங்கடேசன் பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி, எனது வாழ்வில் முக்கியமானதாகும்.

வாழத்துரை எழுதிய அன்பு அக்கா தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு இதயப்பூர்வமான நன்றி. உற்சாகப்படுத்தும் பதிப்பாளர் பரிதிக்கும் நன்றி’ என்று உணர்ச்சிமயமானார் முனைவர். சித்ரா மகேஷ். மேலும், தமிழ் விழாக் குழுவினருக்கும், கருத்தரங்கக் குழுவினருக்கும், நூலை வெளியிட வாய்ப்பளித்த அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருண்குமாருக்கும் நன்றி கூறினார்.

பரிதி பதிப்பகத்தின் சார்பில் ‘என் செடி உன் பூக்கள்’ கவிதைகள் புத்தகத்தைப் பதிப்பாளார் பரிதி வெளியிட்டுள்ளார். அமெரிக்கத் தமிழர்களின் படைப்புகளை ஆதரிக்கும் வகையில், ஃபெட்னாவின் தொழில் முனைவோர் கருத்தரங்கத்தில் இந்த புத்தக வெளியீடு நடைபெற்றுள்ளது.

En Sedigal Un Pookkal book written by Dr Chitra Mahesh and released by Poet Arivumathi

குருதி ஆட்டம்.. 3வது முறையாக அதர்வா உடன் இணைந்த யுவன்

குருதி ஆட்டம்.. 3வது முறையாக அதர்வா உடன் இணைந்த யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kuruthi Aattam‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் அடுத்து இயக்கும் படம் ‘குருதி ஆட்டம்’.

இதில் அதர்வா நாயகனாக நடிக்கிறார்.

கிரைம் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த கதைக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை மேலும் பலம் சேர்க்கும் என்றும் கூறுகிறார் ‘ராக்ஃபார்ட் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கும் முருகானந்தம்

ஏற்கெனவே அதர்வா நடித்த ‘பானா காத்தாடி’, ‘செம போத ஆகாதே’ ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

தற்போது 3வது முறையாக அதர்வாவுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows