பிராந்தி விளம்பர சர்ச்சை..; சரக்கடிக்கும் சிம்பு-உதயநிதி பட நடிகை

பிராந்தி விளம்பர சர்ச்சை..; சரக்கடிக்கும் சிம்பு-உதயநிதி பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு உடன் ஈஸ்வரன், ஜெயம் ரவி உடன் பூமி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நிதி அகர்வால்.

இந்த இரு படங்களுமே 2021 பொங்கல் தினத்தில் வெளியானது.

தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தல் உதயநிதி நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் நிதி அகர்வால்.

இந்த நிலையில் இவரின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இவர் நடித்துள்ள பிராந்தி விளம்பர வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பிராந்தியை க்ளாஸில் ஊற்றி அதை முகர்ந்து செம அரோமோ என பேசுகிறார். இது புத்தாண்டு கிப்ட் எனவும் இந்தியாவின் மிகச்சிறந்த மது எனவும் அதில் பேசுகிறார்.

இந்த விளம்பரம் தற்போது சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.

நடிகைகளில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஆகியோரும் இதுபோன்ற மது விளம்பரத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Niddhi Aggerwal insta post creates controversy

ஓடிடியில் ‘புஷ்பா’.. வீட்டிலேயே ஆடி பார்க்கலாம்… ஊ….. சொல்றீயா மாமா..!

ஓடிடியில் ‘புஷ்பா’.. வீட்டிலேயே ஆடி பார்க்கலாம்… ஊ….. சொல்றீயா மாமா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத்பாசில் உள்ளிட்டோர் நடித்த படம் ’புஷ்பா’.

2021ல் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீசாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.

இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. முக்கியமாக தமிழில் ஆண்ட்ரியா பாடி சமந்தா ஆடிய ஊ. சொல்றீயா மாமா என்ற பாடல் வேற லெவல் ஹிட்டானது.

இவையில்லாமல் ராஜலட்சுமி செந்தில் பாடிய சாமி.. சாமி… பாடல் வெறித்தனமாக ஹிட்டடித்தன.

தற்போது ரிலீஸாகி 3 வாரங்கள் ஆன நிலையில் அமேசான் ஓடிடி தளத்தில் ’புஷ்பா’ திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘புஷ்பா’ திரைப்படம் அமேசானில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதனால் ரசிகர்கள் இந்த படத்தை ஓடிடியிலும் பார்த்து மகிழ ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pushpa The rise OTT release date announced

ரேஷன் தியேட்டர்கள் திறக்கப்படுமா? என அரசுக்கு பிரபல இயக்குனர் கேள்வி

ரேஷன் தியேட்டர்கள் திறக்கப்படுமா? என அரசுக்கு பிரபல இயக்குனர் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021ல் சினிமா தியேட்டர்களின் டிக்கெட் விலையை ஆந்திர அரசு நிர்ணயம் செய்தது.

தியேட்டர்களில் உள்ள இருக்கை எண்ணிக்கையைப் பொறுத்து இந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இதில் கிராமப்புறம், நகரப்பகுதிகளில் உள்ள தியேட்டர்களுக்கும் பொருந்தும.

ஐமேக்ஸ் போன்ற பெரிய திரையரங்குகள் ரூ.300 வரையிலும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக ரூ.250 வரையிலும், ஏசி வசதி கொண்ட சாதாரண தியேட்டர்கள் ரூ.150 வரையிலும் கட்டணம் வசூலிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. இதில் முக்கியமாக ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் விதிக்கப்பட்டது.

இத்துடன் பராமரிப்புக் கட்டணமாக ரூ.3 முதல் 5 வரை தனியாகக் கட்டணம் வசூலிக்கலாம் எனவும் ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்தக் கட்டண உயர்வால் ஆந்திராவில் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் ஆர்ஆர்ஆர் படமும் ரிலீஸ் தள்ளிப் போனதாகவும் கூறப்படுகிறது.

ஆந்திர அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் தெலுங்கு திரையுலகம் பெரும பின்னடைவை சந்தித்துள்ளது.

இதற்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ராம் கோபால் வர்மாவும் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அதில்…

கோதுமை, அரிசி, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்போது, அரசாங்கம் தலையிட்டு அவற்றை சமநிலைக்குக் கீழே அல்லது அதற்கு மேல் விலையை நிர்ணயம் செய்யலாம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அது திரைப்படங்களுக்கு எப்படி பொருந்தும்?

ஏழைகளுக்கு சினிமா மிகவும் அவசியம் என்று நீங்கள் நினைப்பீர்கள் ஆனால் மருத்துவம் கல்விக்கு அரசு மானியம் கொடுக்கிறீர்களோ, அதுபோல சினிமாவுக்கும் ஏன் அரசு மானியம் தருவதில்லை?

ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட ரேஷன் கடைகளை போல ரேஷன் தியேட்டர்களையும் உருவாக்குவது பற்றி பரிசீலிப்பீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Director Ram Gopal Varma question to Andhra govt

தள்ளிப் போகும் அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ்..; டென்ஷனில் ரசிகர்கள்

தள்ளிப் போகும் அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ்..; டென்ஷனில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் ஜனவரி 13ல் ரிலீசாகவுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பல மாநிங்களில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சற்றுமுன் தமிழகத்தில் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கும் வார நாட்களில் இரவு ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர்களில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அரசு அனுமதியளித்துள்ளது.

இதனால் தியேட்டர்களில் இரவு நேர காட்சிகள் ரத்து செய்யப்படும். மேலும் ஞாயிறு முழுவதும் காட்சிகள் இருக்காது. இதனால் ‘வலிமை’ படத்தின் வசூல் பெருமளவில் குறையும்.

இதன்படி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் ஊரடங்கு உத்தரவால் தள்ளிப்போனது. தற்போது வலிமை திரைப்படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் முன்னதாக நேற்று இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.. தற்போது ‘வலிமை’ ரிலீஸ் தள்ளி வைப்பு என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith Kumar’s Valimai may postpone again

‘ஆர்ஆர்ஆர்’ விட்ட கேப்பில் நுழைந்த ‘1945’…; காந்தி வழியை மறுத்து நேதாஜி வழியில் ராணா

‘ஆர்ஆர்ஆர்’ விட்ட கேப்பில் நுழைந்த ‘1945’…; காந்தி வழியை மறுத்து நேதாஜி வழியில் ராணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்திய நாட்டில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதனால் இந்தியாவே எதிர்பார்த்த ‘ஆர்ஆர்ஆர்’ பட ரிலீஸ் ஜனவரி 7ல் அறிவிக்கப்பட்ட படம் தள்ளிப்போனது. புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இதனால் சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இன்று சற்றுமுன் தமிழகத்தில் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கும் வார நாட்களில் இரவு ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தியேட்டர்களில் 50 % பார்வையாளர்களுக்கே மட்டுமே அனுமதி என அரசு அறிவித்துள்ளது.

இதனையடுத்து ஜனவரி 26ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட விஷாலின் வீரமே வாகை சூடும் படம் (தெலுங்கு பதிப்பு) ஜனவரி 14ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் ராணா நடித்துள்ள ‘1945’ என்ற படம் வரும் ஜன-7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவித்துள்ளனர். இந்த படத்தில் ரெஜினா நாயகியாக நடித்துள்ளனர்.

இந்த ஜோடியுடன் நாசர், சத்யராஜ், காளி வெங்கட் உள்ளிட்டோரும் உண்டு.

இந்திய சுதந்திர கால போராட்டத்தை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் காந்தியின் அஹிம்சை வழியை பின்பற்றாமல் நேதாஜி எடுத்துக் கொண்ட போராட்ட வழியை பின்பற்றுபவராக நடித்திருக்கிறார் ராணா.

இந்த படம் ரிலீசுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பே தயாரானாலும் சில பிரச்சினைகளால் முடங்கி கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

The grand period drama Rana Daggubati’s 1945 Movie is all set for Jan Keycap digit seventh release

ராஜ் கமலின் PV999 படம் ஐகானிக் படமாக அமையும்..; ‘ஆக்சன் ரியாக்சன்’ ஜெனிஷ் நம்பிக்கை

ராஜ் கமலின் PV999 படம் ஐகானிக் படமாக அமையும்..; ‘ஆக்சன் ரியாக்சன்’ ஜெனிஷ் நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘
படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இயக்குநர் பேரரசு பேசினார்.

அவர் பேசும்போது

இங்கே வந்திருக்கும் ரோபோ சங்கர் மகளைப் பார்க்கும்போது எனக்கு அவர் பிகில் படத்தில் நடித்த பாண்டியம்மா என்ற பாத்திரத்தின் பெயர் தான் ஞாபகம் வருகிறது.சொந்தப் பெயரை விட்டுவிட்டு கதாபாத்திரத்தின் பெயர் பேசப்பட்டால் அதுதான் அந்தப் பாத்திரத்தின் வெற்றி என்று சொல்லுவேன்.

நான் ‘திருப்பாச்சி’யில் பசுபதியை நடிக்க வைத்து இருந்தேன். அந்த படம் வெளியாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் பசுபதி என்னிடம் பேசினார் .”என்ன சார் இப்படி செய்து விட்டீர்கள்?” என்றார்.
என் படத்தில் நல்ல கேரக்டர் தானே அவருக்குக் கொடுத்து இருந்தேன்.
அவருக்கு நல்ல பெயர் தானே கிடைத்தது ஏன் இப்படிச் சொல்கிறார் என்று நினைத்து என்ன ? என்றேன்.

“என்னை எங்கே பார்த்தாலும் பட்டாசு பாலு என்றுதான் அழைக்கிறார்கள். பசுபதி என்று யாரும் அழைப்பதில்லை ” என்றார்.அந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரம் மக்களிடம் போய்ச் சேர்ந்து இருந்தது.

இந்தப் படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றிப் பேசுகிறது. அதற்கு எதிராகப் பேசுகிறது என்று சொன்னார்கள் .

சிலரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் தான் ஏற்படுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது
டிக் டாக் மூலம் நாட்டில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை. சில கேவலமான பெண்கள் நடந்து கொள்ளும் விதமும் பேசுகிற பேச்சும் சகிக்க முடியவில்லை.

குறிப்பாக இரண்டு பெண்கள் செய்யும் செயல்பாடுகள் மிகவும் அருவருப்பானவை. பார்க்க சகிக்க முடியவில்லை.அவர்களை எல்லாம் பிடித்து உள்ளே தள்ளவேண்டும்.
அந்த அளவிற்கு அவர்களது செயல்பாடுகள் இருக்கின்றன . இவர்களை விட்டு வைக்கக் கூடாது. ஜெயிலில் தள்ள வேண்டும்

நாட்டில் நடக்கும் பல கலாச்சார சீர்கேடுகளுக்குக் காரணம் செல்போன்கள் தான் .தங்கள் பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் .
இதைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு கவனமாக வேண்டும். நம் சுதந்திரம் இப்படி மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

அளவற்ற சுதந்திரம் தான் நாட்டைக் கெடுக்கிறது.செல்போனில் ஃபுல் டாக்டைம் என்பதை ஒழித்துக்கட்ட வேண்டும்.அளவில்லாமல் பேசும் வாய்ப்பு தான் அத்தனை தவறுகளுக்கும் வழிவகுக்கிறது.

நாடு இப்படிப் போய்க்கொண்டிருக்கும் போது நாம் எத்தனை படம் எடுத்தாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பெண்களைத் தவறாக பயன்படுத்துவது என்று பல இடங்களிலும் நடக்கிறது.நம்பிக்கையோடு அனுப்பி வைக்கப்படும் இடத்தில் சில ஆசிரியர்கள்,நம்பிக்கையோடு வணங்கச் செல்லும் இடத்தில் சில மதகுருமார்கள் என்று எத்தனை வடிவங்களில் இருக்கிறார்கள். பெண்கள்
விஷயத்தில் யார் தப்பு செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். வாத்தியாராக இருந்தாலும் சரி மதகுருமார் களாக சாமியார்களாக அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

நாம் நம்பிக்கை வைக்கும் அவர்கள் இப்படி நடந்து கொள்வது பெரிய நம்பிக்கை துரோகமாகும். அப்படித் துரோகம் செய்பவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுக்க வேண்டும்

சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம் அதில் மக்களை சந்தோஷப்படுத்தும் பொழுதுபோக்கு அம்சங்கள் தான் இருக்க வேண்டும். கருத்து சொல்லவேண்டும் விழிப்புணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எடுத்துக் கொண்டிருந்தால் பொழுது போக்கு தளத்தை விட்டு சினிமா விலகிவிடும்.

அப்புறம் மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது. சினிமா சரியாக இருக்கிறது என்றால் பொழுதுபோக்கு படங்கள் வந்தால் தான் சரியான பாதையில் செல்கிறது என்று அர்த்தம்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒரு நாள் செய்தியாகக் கடந்து போய் விடுகின்றன – எத்தனையோ செய்திகளைப் பார்க்கிறோம்;நாம் மறந்துவிடுகிறோம். பொள்ளாச்சி என்னாச்சு? இப்போது யார் அதைப் பற்றிப் பேசுகிறார்கள்? எல்லாம் செய்தியாக கடந்து போய்விடுகின்றன.

அப்படித் தவறுகள் செய்துவிட்டு ஜெயிலுக்குப் போவது என்றால் கூட ஏதோ நாட்டுக்கு தியாகம் செய்துவிட்டு போய் வந்தது போல் 3 மாதம் 6 மாதம் என்று போய்விட்டு , நாட்டுக்குத் தியாகம் செய்து விட்டு சென்று வந்தது போல் மகிழ்ச்சியாக வருகிறான்.

இந்தப் படம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்”
இவ்வாறு பேரரசு பேசினார்.

படத்தை வெளியிடும் ஆக்சன் ரியாக்சன் ஜெனிஷ்
பேசும்போது…

“இந்தப் படத்தை ஆரம்பித்து PV 999 என்று ஹேஷ்டாக் செய்தபோது விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் போன்றவர்கள் ஆதரவு கொடுத்தார்கள். அதனால் நல்ல வகையில் அது மக்களிடம் போய்ச் சேர்ந்தது. அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தந்த அந்த ஊக்கத்தில் தான் முழு படமாக எடுத்து முடித்திருக்கிறோம் . இப்போதுஅதை வெளியிடுகிறோம்.

கதாநாயகன் ராஜகமல் தொலைக்காட்சி, விளம்பரங்கள் என்று பரவலாக அறியப்பட்டவர். இதில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இயக்குநர் இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்று தெளிவாக இருந்ததால் எவ்வளவோ சர்ச்சைகளையும் தாண்டிப் படம் தயாராகி இதோ வெளியீட்டுக்கே வந்திருக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி எத்தனையோ படங்கள் பேசலாம். இதுவரைக்கும் வந்த படங்களில் இது ஐகானிக் படம் என்று சொல்லலாம். ” என்றார்.

நடன இயக்குநர் அர்ச்சனா பேசும்போது,

” இந்தப்படத்தின் பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருக்கும். பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும் .அந்த அளவுக்கு இசையிலும் சரி காட்சிகளிலும் சரி நன்றாக அமைந்துள்ளது. நாங்கள் காட்சி நன்றாக அமைய வேண்டுமென்று ரிஸ்கான மலைப்பகுதியில் அபாயகரமான இடங்களுக்கெல்லாம் சென்று எடுக்க விரும்பினோம். நடித்தவர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் நடித்துக் கொடுத்து அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். பாடல் காட்சிகளை பார்த்தால் உங்களுக்குத் தெரியும் எங்கள் மேல் முழு நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பு கொடுத்தது மறக்க முடியாதது” என்றார்

நாயகன் ராஜ் கமலின் மனைவி நடிகை லதா ராவ் பேசும்போது,

“என் கணவர் நடித்ததால் என்று மட்டும் சொல்லவில்லை. உண்மையிலேயே இது ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம் தான். படத்தின் தலைப்பைக் கேட்டபோது முதலில் நான் அதிர்ந்தேன்.

இது என்ன தலைப்பு என்று எனக்குக் கோபமாக வந்தது. அவர் பேசிய பிறகுதான் புரிந்தது.

இந்தப் படம் பார்த்த பிறகு பெண்களுக்குச் சுற்றிலும் உள்ள மனிதர்களால், பழகும் மனிதர்களால் உள்ள ஆபத்தைப் பற்றி யோசிக்க வைக்கும். நல்லவர்கள் தானே என்று நம்பும் நாம் அவர்களைப் பற்றி சரியானவர்கள் தானா என்று சிந்திக்க வைக்கும்.யாராவது படத்தை பார்த்த ஒரு பெண் யோசித்துத் திருந்தினால் அதுவே இந்த படத்தின் வெற்றி.

என் கணவரின் பாத்திரம் பற்றி முதலில் எனக்குத் தயக்கம் இருந்தது பிறகு படத்திற்காகச் சமாதானம் ஆனேன்” என்றார்.

இந்திரஜா ரோபோ சங்கர் பேசும்போது

“முதலில் படத்தின் தலைப்பே ஆர்வமூட்டியது. படக்குழுவினர் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்கள் .பெண்களை மையப்படுத்தி படம் எடுப்பது என்பது சுலபமல்ல .
பல ஆண்டுகளாகத் தெரிந்த ராஜ்கமல் மற்றும் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் “என்றார்

நடிகர் இயக்குநர் போஸ் வெங்கட் பேசும்போது,

“இங்கே வந்தபோது பிரபஞ்சன் எழுதிய ‘பெண்’ என்கிற புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தார்கள். அதன் மூலம் எதுவோ சொல்ல விரும்புகிறார்கள் என்றே நினைத்தேன்.

இப்படம் பெண்கள் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது .ராஜ்கமல் ஒரு வகையில் எனக்குத் தம்பி . ஒருவகையில் எனக்கு ரோல்மாடல். அவன் எப்போதும் ஓடிக் கொண்டே இருப்பான்.

எங்கே தான் இப்படி ஓடுகிறான் என்று நினைப்பேன். இப்போது புரிகிறது சரியான இடத்திற்குத்தான் சென்று கொண்டிருக்கிறான் என்று. அவன் மேலும் வளர்வான்.

சில படங்கள் ஓடுகின்றன. சில படங்கள் ஓடுவதில்லை. காரணம் சினிமாவிலும் தலைமுறை இடைவெளி வந்துவிட்டது என்று சொல்லத் தோன்றுகிறது” என்றார்

கதா நாயகனாக நடித்துள்ள ராஜ் கமல் பேசும்போது,

“முதலில் கன்னட நடன இயக்குநர் சதீஷ் அவர்களுக்கு என் நன்றி. ஏனென்றால் அவர் மூலம்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது .

நான் இயக்குநரிடம் கதை கேட்கப் போகவில்லை. வாய்ப்பு கேட்டுத்தான் போனேன். அப்படித்தான் இந்த படம் எனக்குக் கிடைத்தது

இந்தப் படத்தில் நடித்தபோது இதில் பேசப்படும் பிரச்சினையைப் பார்க்கும் போது எனக்கு எதுவுமே தெரியவில்லை. என் இரண்டு மகள்கள் தான் எனக்குக் தெரிந்தார்கள். அந்த அளவிற்கு பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களை எச்சரிக்கிறது இந்தப் படம்.

நான் டிவி நடிகன் என்று என்னை ஒதுக்காமல் இயக்குநர் எல்லாமே நடிப்புதான் என்று என்னை ஏற்றுக் கொண்டு நடிக்க வைத்ததற்கு நன்றி. எந்த சமரசமும் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தினார். தான் விரும்பிய காட்சிகளைத்தான் எடுத்தார்”என்றார்.

இவ்விழாவில் டப்பிங் கலைஞர் நடிகர் மது, பப்ஜி பட நாயகி சாண்ட்ரியா, தயாரிப்பு வடிவமைப்பாளர் கர்ணன் ருத்ராபதி,நடிகர் ஜெயச்சந்திரன் , சூர்யா டெலிகாம் வெங்கடேஷ் ராஜா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
முன்னதாக இயக்குநர்கள் பேரரசு,போஸ் வெங்கட் ட்ரெய்லர் பாடல்களை வெளியிட்டார்கள். பதுங்கி பாயணும் தல படத்தின் தயாரிப்பாளர் அமீனா ஹூசைன் கலந்து கொண்டு வாழ்த்த்தினார். அவருக்கு தயாரிப்பாளர் வரதராஜ். பிரபஞ்சன் எழுதிய பெண் புத்தகத்தை நினைவுப்பரிசாக வழங்கினார்

Action reaction Jenish talks about PV 999 movie

More Articles
Follows