சிம்ரனுடன் நடிக்கும்போது கூச்சம்.; த்ரிஷா அப்படியே இருக்கிறார் : ரஜினி

சிம்ரனுடன் நடிக்கும்போது கூச்சம்.; த்ரிஷா அப்படியே இருக்கிறார் : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Star Rajini talks about Simran and Trishaதமிழ் சினிமாவில் உள்ள அனைத்து டாப் ஹீரோக்களுடன் சிம்ரன் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்துவிட்டனர்.

இவர்கள் முன்னணி நடிகையாக உள்ள போதும் ரஜினிகாந்துடன் நடிக்க முடியாமல் இருந்தனர்.

தற்போது பேட்ட படத்தில் ப்ளாஷ்பேக்கில் த்ரிஷாவும் நிகழ்கால கதையில் சிம்ரனும் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளனர்.

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் மற்றும் த்ரிஷாவுடன் நடித்த அனுபவம் பற்றி பேசினார் ரஜினி.

அவர் பேசியதாவது…

சிம்ரனுடன் டூயட் பாடும்போது எனக்கு கூச்சமாக இருந்தது. சிறந்த நடிகை அவர்.

பிளாஷ்பேக்கில் சின்ன கேரக்டர்தான். அதில் த்ரிஷா நடிப்பாரா? என்று சந்தேகம் இருந்தது. அவரது ரசிகர்கள் ஒத்துக் கொள்வார்களா? என்ற தயக்கம் இருந்தது.

அவர் அவர் என்னுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். 16 வருடங்களாக த்ரிஷா அப்படி இருக்கிறார்.

அவர் யோகா செய்கிறார். அதான் அழகாக இருக்கிறார். யோகா செய்தால் மனதும் உடலும் அழகா இருக்கும். எல்லாரும் யோகா செய்ய வேண்டும்.” என்று பேசினார் ரஜினி.

Super Star Rajini talks about Simran and Trisha

தாடி மீசை வச்ச குழந்தை சசிகுமார்.; பேட்ட இசை விழாவில் ரஜினி பேச்சு

தாடி மீசை வச்ச குழந்தை சசிகுமார்.; பேட்ட இசை விழாவில் ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sasikumar is like kid says Rajini at Petta Audio launch eventசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் ரஜினியுடன் சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா,சசிகுமார்,சமுத்திரகனி, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத், தமிழக சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட சசிகுமார் பேசியதாவது…

“எல்லாப் படமும் சீக்கிரம் முடியனும்னு நினைப்போம். ஆனா பேட்ட பட சூட்டிங் சீக்கிரமா முடிந்ததே என்ற கவலை இருந்தது.

ரஜினி சார் டான்ஸ் வராதுன்னு சொல்வார் ஆனால் அது பொய். அதிகாலை 3 மணிக்கு பணியாற்ற சொன்னாலும் அதை செய்து முடிப்பார்.

ஒரு ரஜினி ரசிகனாக இருந்து கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படம் மிகவும் பிரமாதமாக வந்துள்ளது.

ரஜினி சார் தொடர்ந்து படம் நடிக்க வேண்டும் . ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என எல்லோருக்கு ஆசை இருக்கும்.

எனக்கும் ஆசை இருக்கிறது” என்றார். அதன்பின்னர் தளபதி படத்தில் உள்ள நட்புன்னா என்னானு தெரியுமா? என்ற டயலாக்கை பேசி காண்பித்தார்.

அதன் பின்னர் இறுதியாக ரஜினி பேசும்போது…

சசிகுமாரின் கேரக்டர் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை சிறப்பாக இருக்கும்படியான ஒரு அருமையாக கேரக்டர்.
அவர் ஒரு தாடி மீசை வைச்சக் குழந்தை. அவர் படத்தை தயாரிக்காம நடித்தால் நன்றாக இருக்கும்” என்று வாழ்த்தி பேசினார் ரஜினி.

Sasikumar is like kid says Rajini at Petta Audio launch event

மகா நடிகன்.. சிறந்த மனிதர்.; விஜய்சேதுபதிக்கு ரஜினி பாராட்டு

மகா நடிகன்.. சிறந்த மனிதர்.; விஜய்சேதுபதிக்கு ரஜினி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sethupathi is Maga Nadigan says Rajini at Petta audio launchகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனும் கலந்துக் கொண்டார்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது…

இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பின் கார்த்திக் சுப்பராஜிடம் பட வில்லன் யாருன்னு? கேட்டேன் விஜய் சேதுபதின்னு சொன்னார்.

எனக்குச் சந்தேகம். எப்படினு கேட்டேன். நான் பார்த்துக்கிறேன் சார்னு கார்த்தி சொன்னார்.

அடுத்த நாள் போன் பன்னி விஜய் சேதுபதி ஓ.கே சொல்லிட்டாருன்னு சொன்னார். விஜய் சேதுபதியோடு படம் பார்த்திருக்கிறேன்.

அவர் சாதாரண நடிகன் இல்லை. அவர் ஒரு மகா நடிகன். நடிகர் என்பதை விட ஒரு நல்ல மனிதர், பொறுமையான மனிதர். நாம் சிந்திப்பதை விட ஒரு எதிர்மறையாக சிந்திக்கிறார்.

அவரிடம் நிறைய புத்தகங்கள் படிப்பிங்களா? சினிமா பாப்பிங்களா? எனக் கேட்டேன். ஆனால் படிக்க மாட்டேன். பார்க்க மாட்டேன். என்றார்.

அவருடைய பேச்சு, சிந்தனை, கற்பனை வித்தியாசமானது. ரொம்ப நாளுக்குப் பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் இந்த படத்தில் கிடைத்தது.“ என்று பேசினார் ரஜினி.

Vijay sethupathi is Maga Nadigan says Rajini at Petta audio launch

நல திட்டங்களுக்காக மோடி-ரஜினி-கமலை சந்திக்க நினைத்தேன்; அவர்கள் விரும்பல.. : சுரேஷ் மேனன்

நல திட்டங்களுக்காக மோடி-ரஜினி-கமலை சந்திக்க நினைத்தேன்; அவர்கள் விரும்பல.. : சுரேஷ் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suresh Menon launched My Karma mobile app You can win Cash prizesபுதிய முகம் திரைப்படம் மூலம் நடிகராக தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சுரேஷ் மேனன்.

சினிமாவில் பல துறைகளில் பணியாற்றிய இவர் நடிகை ரேவதியின் முன்னாள் கணவர் ஆவார்.

இவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து நம் சமூகம் சார்ந்த விஷயங்களை பேசினார்.

அவர் பேசியதாவது…

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பணியாற்றி வருகிறேன். சினிமாவில் எல்லா வேலைகளையும் செய்துவிட்டேன்.

சினிமா ஒருபக்கம் இருந்தாலும், சமூகம் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் போக்குவரத்தை சரி செய்ய பல ஆலோசனைகள் வழங்கியுள்ளேன். அதில் ஒரு சிலவற்றை அரசு செய்துள்ளது.

சென்னை ராஜ்பவன் கிண்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆலோசனை தந்தேன். தற்போது அங்கு போக்குவரத்து மாற்றப்பட்டது.

இதுபோல நிறைய இலவச ஆலோசனைகள் அளித்து வருகிறேன். இதனால் என்னை அவ்வப்போது தலைமை செயலகத்தில் பார்க்கலாம்.

சில நேரங்களில் இது உனக்கு தேவையில்லாத வேலை என்பார்கள். எனக்கு பொருளாதார ரீதியாக எந்த பயனும் இல்லை. ஆனால் ஒரு மன திருப்திக்காக இதனை செய்து வருகிறேன்.

ஒரு முறை டெல்லி சென்றேன். சில நல திட்டங்களுக்கு ஆலோசனை சொல்ல பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை.

அதுபோல் ரஜினி, கமலை சந்திக்கவும் நேரம் கேட்டேன். ஆனால் அவர்களுக்கு என்னை சந்திக்க விருப்பமில்லை.
நான் ஒரு மலையாளி என்பதால் தமிழ்நாட்டில் என்னால் அரசியலில் சாதிக்க முடியாது.

அதேபோல் நான் இங்கு வந்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் அங்கும் (கேரளா) என்னால் ஒண்ணும் சாதிக்க முடியாது.

எனவே, தற்போது மை கர்மா (my karma) என்ற மொபைல் ஆப் மூலம் வினாவிடை போட்டி ஒன்றை ஆரம்பித்துள்ளேன். எனது நண்பர்கள் ஆதரவுடன் ரூ. 20 லட்சம் செலவில் இதை ஆரம்பித்துள்ளேன்.

இந்தியாவை பற்றி தான் 90% கேள்விகள் கேட்கப்படும். குடும்பத்துடன் அமர்ந்து இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

தினமும் மாலை 7 மணி, 8 மணி, 9 மணி என 3 முறை இப்போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயழியை பதிவிறக்கம் செய்து விளையாடலாம். ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசுத் தொகை உண்டு”, என சுரேஷ் மேனன் கூறினார்.

Actor Suresh Menon launched My Karma mobile app You can win Cash prizes

*பேட்ட* படத்தில் தனுஷ்-அனிருத்தை இணைய வைத்த ரஜினி

*பேட்ட* படத்தில் தனுஷ்-அனிருத்தை இணைய வைத்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Anirudh joins together in Rajinis Petta movie3 படத்தில் தொடங்கிய தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கூட்டணியாக விளங்கியது.

இதனையடுத்து தனுஷ் தயாரித்த படங்களிலும் நடித்த படங்களிலும் அனிருத்தே இசையமைப்பாளராக இருந்தார்.

எதிர் நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, மாரி, தங்கமகன் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணி புரிந்தனர்.

ஆனால் மாரி படத்திற்கு இவர்கள் இணையவில்லை. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இணைந்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தில் இளமை திரும்புதே என்ற பாடலை தனுஷ் எழுதியுள்ளார். அனிருத் இந்த பாடலை பாடியுள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பேட்ட படத்தின் பாடல்கள் நாளை சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதில் ரஜினிகாந்துடன் படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

Dhanush and Anirudh joins together in Rajinis Petta movie

petta songs track list

Breaking அதிரடி தலைப்புடன் மீண்டும் தினேஷுடன் இணைந்த ரஞ்சித்

Breaking அதிரடி தலைப்புடன் மீண்டும் தினேஷுடன் இணைந்த ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranjith titled his next production as Irandam Ulaga Porin Kadaisi GUNDUஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, தயாரிப்பாளர் ரஞ்சித் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரஞ்சித் தினேஷ், கபாலி காலா ரஞ்சித்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான “பரியேறும் பெருமாள்” மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் இரண்டாவது படத்தை தயாரிக்கிறது.

“இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை அதியன் ஆதிரை என்கிற புதுமுக இயக்குநர் இயக்குகிறார்.

இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.

கதாநாயகனாக தினேஷ் நடிக்கிறார். நாயகிகளாக அனேகா, ரித்விகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் லிஜீஷ், முனீஸ்காந்த் ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கிறார்கள். இசையமைப்பாளராக தென்மா அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார், படத்தொகுப்பாளராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணியாற்றுகிறார்கள். பாடல்களை உமாதேவி, அறிவு, தனிக்கொடி, தங்கவேலு ஆகியோர் எழுதுகிறார்கள். கலை இயக்குனராக ராமலிங்கம் பணி புரிகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

இப்படத்தின் தயாரிப்பாளர் ரஞ்சித் தான் இயக்கிய முதல் படமான அட்டக்கத்தி-யில் தினேஷை நாயகனாக நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ranjith titled his next production as Irandam Ulaga Porin Kadaisi GUNDU

More Articles
Follows