விஜய்யுடன் மீண்டும் கீர்த்தி சுரேஷ்; கன்பார்ம் செய்தது சன்பிக்சர்ஸ்

vijay and keerthy sureshமெர்சல் படத்துக்கு பிறகு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

பல படங்களை சன்பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்திருந்தாலும், எந்திரன் படத்திற்கு பிறகு விஜய் 62 படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில் படத்தின் நாயகியையும் உறுதிசெய்துள்ளனர். அவர்தான் கீர்த்தி சுரேஷ்.

இதற்கு முன்பே இவர்கள் பைரவா படத்தில் டூயட் பாடியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விரைவில் இப்பட சூட்டிங் துவங்கவுள்ளது. படத்தை 2018 இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post