விஜயதசமியன்று கார்த்தி-ராஷ்மிகாவின் ‘சுல்தான்’ பர்ஸ்ட் லுக்

விஜயதசமியன்று கார்த்தி-ராஷ்மிகாவின் ‘சுல்தான்’ பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார்.

தெலுங்கில் மிக பிரபலமான நடிகையான இவர் தமிழில் அறிமுகமாகும் படம் இது.

ட்ரீம் வாரியர் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விஜயதசமியன்று அக்டோபர் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Karthi’s Sulthan first look on october 26th

sulthan first look

ஒத்த செருப்பு-க்கு பாஜக அரசு விருது..; திமுக MP கிண்டல்.. கடுப்பான பார்த்திபனை சமாதானம் செய்த உதயநிதி

ஒத்த செருப்பு-க்கு பாஜக அரசு விருது..; திமுக MP கிண்டல்.. கடுப்பான பார்த்திபனை சமாதானம் செய்த உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dmk mp senthilkumarபார்த்திபன் தயாரித்து அவர் ஒருவரே நடித்து இயக்கிய படம் ‘ஒத்த செருப்பு’.

இந்தப் படத்தின் புதுமை பலரையும் கவர்ந்தது.

ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும் படத்தில் ‘ஒத்த செருப்பு’ படம் தேர்வாகவில்லை என தனது ஆதங்கத்தை அப்போதே வெளிப்படுத்தி இருந்தார் பார்த்திபன்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.

இந்த விருதை கிண்டலடித்துள்ளார்
தர்மபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார்.

இந்த விருது குறித்து ட்விட்டரில், “அண்ணனுக்கு பாஜகல ஒரு சீட் பார்சல்ல்ல்…” என்று தெரிவித்தார்.

கோபமடைந்த பார்த்திபன் வரிசையாக தி.மு.க எம்.பி செந்தில்குமாருக்கு பதிலடி கொடுத்தார்.

அதில் ஒரு சில…

ஒத்த செருப்பு பார்சல்’ என்பதெல்லாம் அநாகரிகம்.நாமும் அப்படி கீழிறங்கக்கூடாது.sorry for that)அவர் படம் பார்க்கவில்லை என்றால் Netflix-ல் பார்க்கலாம் ்அல்லது ஒரு DVD பார்சல் செய்யலாம்
!———-___________________________________________ திருச்சி பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை.Conti https://t.co/mw24Ktifi5

இவன் ‘ படத்தில் “seat குடுத்தா நிப்பீங்களா?”என என்னிடம் கேட்க,“ Seat குடுத்தா ஏன் நிக்கனும்? உக்காரலாமே?’என இன்றுவரை joke-க்கி விட்டு மட்டும் நகர்கிறேன். சினிமாவில் இன்னுங்கொஞ்சம் stand செய்ய வேண்டும் என்பதால் வேறு எங்கும் நிற்பதில்லை எதிலும் சேர்வதில்லை.மற்றபடி மக்கள் conti https://t.co/EKvJ8titpu

6: மக்கள் பணிகளில் ஆர்வமுண்டு ஆனால் அதற்கு பெயர்தான் அரசியலா?என அறியாதவன் அடியேன்! உண்மையான நேர்மையான சுய சிந்தனையிலும் சுய வருமானத்திலும் கடுமையான உழைப்பிலும் உருவான ஒத்த செருப்புக்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் விருதினைக் கொச்சைப் படுத்தினால் மனம் வலிக்கும்!conti https://t.co/RA0afTwy75

7: உரியது கிடைக்காத போது ஆனந்த’மாய் தூக்கி எறிந்து விட்டு மேடை இறங்குவேனேத் தவிர,அதைத் “தா”இதைத் “தா” வென மரை’முகமாக என் முகம் மலரமாட்டேன்!அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதை பேராண்மையுடன் செய்வேன்.
உசுப்’பேத்தாதீங்க பாஸ்!!!

தி.மு.க MP செந்தில்குமாரின் பதிவுக்கு வருத்தம் தெரிவித்து பார்த்திபனுக்கு ஆடியோ (ஒலிப்பதிவு) அனுப்பியுள்ளார் தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி.

இதுதொடர்பாக பார்த்திபன் தன் ட்விட்டரில்.., “சூரியன் உதிக்குமுன் கண் விழித்த எனக்கு, தி.மு.க.வின் நம்பிக்கை நட்சத்திரமும், உடன்பிறப்புகளின் எதிர்கால நம்பிக்கையுமான என் நண்பர் திரு.உதயநிதி ஸ்டாலின், அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதைக் கேட்டேன்.

அவருடைய பெருந்தன்மையைக் கண்டு, என் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன். யாகாவாராயினும் நா காக்க…..தற்சமய” என்று குறிப்பிட்டுள்ளார்.

Udhayanidhi Stalin expressed regret for DMK MP Senthil Kumar’s controversial tweet

PUBG பட ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ பாடலை வெளியிடும் ஆர்யா

PUBG பட ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ பாடலை வெளியிடும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aryaவிஜய் ஸ்ரீ ஜி இயக்கும் பப்ஜி – பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தின் ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ பாடலை விஜயதசமி அன்று நடிகர் ஆர்யா (26-10-2020 -திங்கள் அன்று )மாலை 6:00 மணிக்கு வெளியிடுகிறார்.

தாதா 87 வெற்றிப் படத்தைத் தொடர்ந்து விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா,நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன், அனித்ரா, ஆராத்யா, சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் பொல்லாத உலகின் பயங்கர கேம் படத்தில் லியாண்டர் மார்ட்டி இசையமைப்பில் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதி, பாடிய ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ பாடலை விஜயதசமி 26-10-2020 அன்று மாலை நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறார்.

இப்படத்தின் பாடல்களை
இசையில் வெளியீட்டில் தனி டிரெண்ட்டை ஏற்ப்படுத்திவரும் “டிரெண்ட் நிறுவனம்” வெளியிடுகிறது

பொங்கல் அன்று உலகமெங்கும் வெளியிடப்படும் இப்படத்தின் இசை தீபாவளியன்று வெளியாகிறது.

பொல்லாத உலகில் பயங்கர கேம்( PUBG) படம் தீபாவளி சரவெடியுடன் ஆரம்பித்து (இசை, ட்ரெய்லர்) பொங்கலின் போது கரும்பு சுவையுடன் (திரையரங்குகளில்) வெளியாக உள்ளது.

Arya to release promo song from Director Vijay Sri G’s PUBG

தளபதி 65 படத்திலிருந்து முருகதாஸ் விலகல்..? விஜய் ரசிகர்கள் அப்செட்

தளபதி 65 படத்திலிருந்து முருகதாஸ் விலகல்..? விஜய் ரசிகர்கள் அப்செட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ar murugadossவிஜய்க்கு ஹிட் படங்கள் லிஸ்ட் பெரிதாக இருந்தாலும் அதில் நிச்சயம் துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய திரைப்படங்கள் நிச்சயம் இடம்பெறும்.

விஜய்யின் இந்த 3 படங்களையும் இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

தற்போது தளபதி 65 படத்திற்காக இவர்கள் இருவரும் இணையவுள்ளனர். இந்த படத்தை பிரபல நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

எனவே ரசிகர்கள் இந்த படத்தின் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இது தொடர்பான செய்திகளை பலமுறை பார்த்துவிட்டோம்.

ஆனால் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ செய்திகளை இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி 65 படத்தை இயக்க விருப்பமில்லாமல் விலகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும், தயாரிப்பு தரப்பு சில மாற்றங்களை செய்ய சொன்னதாகவும் அதில் இயக்குனருக்கு உடன்பாடு இல்லை என்பதால் இந்த விலகல் என கூறப்படுகிறது.

ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டும் தான் எது உண்மை என்பது தெரியவரும். எனவே காத்திருப்போம்.

Director AR Murugadoss walks out of Thalapathy 65 ?

பேப்பர் ராக்கெட் செய்து ‘சூரரைப் போற்று’ சூப்பர் அப்டேட் கொடுத்த சூர்யா

பேப்பர் ராக்கெட் செய்து ‘சூரரைப் போற்று’ சூப்பர் அப்டேட் கொடுத்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என சில மாதங்களுக்கு முன்பே அறிவித்தனர்.

ஆனால் இந்த படத்திற்கு விமானப்படை தரப்பிலிருந்து தடையில்லாச் சான்றிதழ் வருவது தாமதமானது.

இதனையடுத்து ‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தள்ளிபோகும் என அறிவித்து அது தொடர்பான தனது வருத்தத்தை அறிக்கையாக வெளியிட்டார் சூர்யா.

இதன்பின்னர் ‘சூரரைப் போற்று’ படத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துவிட்டது என அறிவித்தனர்.

எனவே ட்ரெய்லர் மற்றும் இதர பாடல்கள் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

மேலும் தீபாவளி வெளியீடாக ‘சூரரைப் போற்று’ படத்தை ரிலீஸ் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு ‘சூரரைப் போற்று’ டிரைலர் வெளியாகும் என்ற அறிவிப்பை பேப்பர் ராக்கெட் செய்துக் கொண்டே ஒரு வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார் சூர்யா.

Actor Suriya announces when ‘Soorarai Pottru’ trailer would be out

பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு..; விஜய் கட்டளை

பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு..; விஜய் கட்டளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளை தன்னுடைய பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் சந்தித்தார்.

இந்த சந்திப்பில்… விஜய் மக்கள் இயக்கத்தின் வலுப்படுத்துவது பற்றியும் அதன் மூலம் பல நலத்திட்டங்கள் செய்வது பற்றியும் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தினாராம்.

அப்போது தேவையற்ற போஸ்டர்கள் எதுவும் ஒட்ட வேண்டாம் என அவர்களிடம் விஜய் அறிவுறுத்தினாராம்.

இன்றைய ஆலோசனை கூட்டத்தில் திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு நிர்வாகிகள் மற்றும் கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ‘நாளைய முதல்வர் விஜய்’ என்ற போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் நேரத்தில் அரசியல் சக்தியாக மாறும் என்று பேசியிருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Thalapathy Vijay met VMI members in his residence

More Articles
Follows