சிம்புவை இயக்க காத்திருந்த கேவி ஆனந்த்..; ‘காப்பான்’ இயக்குனரின் கடைசி நிமிடங்கள் பற்றி சிம்பு உருக்கம்

simbu kv anand (1)இந்திய சினிமா துறைக்கு ஒளிப்பதிவாளராக நுழைந்தவர் கே.வி. ஆனந்த். (தற்போதைய வயது 54.)

இவர் முதன்முறையாக ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ‘தேன்மாவின் கொம்பத்து’ என்ற படத்திற்காக தேசிய விருதை பெற்றார். இந்த படமே பின்னர் தமிழில் ரஜினி நடிப்பில் ‘முத்து’ என்றானது.

முதல்வன், பாய்ஸ் படங்களிலும் ரஜினி நடித்த சிவாஜி படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். அந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் இயக்குனர் ஷங்கருடன் தோன்றியிருப்பார்.

ஆனால் அதற்கு முன்பே பத்திரிகை துறையில் புகைப்படக்கலைஞராக பணியாற்றியிருக்கிறார்.

ஶ்ரீகாந்த் கோபிகா பிரித்வி ராஜ் விவேக் நடித்த ‘கனா கண்டேன்’ எனும் படத்தை முதன்முதலாக இயக்கி அதன் பின்னர் இயக்குநராக அறியப்பட்டவர் இவர்.

கோ, கவண், அனேகன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் சூர்யாவின் ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ எனப் பல படங்களை இயக்கியுள்ளார்.

கே.வி. ஆனந்த் அவர்களின் வீடு சென்னை அடையாறில் இருக்கிறது.

இவர் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார்.

இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட போது இவரே காரை ஓட்டிக்கொண்டு ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்.

ஆனால், அவரது உயிரை மருத்துவர்களால் காப்பாற்றமுடியவில்லை.

அவரது மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட திரையுலகத்தினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆனந்த் மறைவுக்கு சிம்பு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில்…

*தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது..

மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே வி ஆனந்த் அவர்கள். கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும் படியாகிவிட்டது.

சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் எனச் சொல்லியிருந்தேன்.

தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக் கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது.

பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன்.

இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே வி ஆனந்த் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார். அவசரமாகப் பயணித்துவிட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு.

அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுளின் கரங்களில் இளைப்பாறட்டும்”.

இவ்வாறு சிம்பு இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

STR’s condolence message to director KV Anand

Overall Rating : Not available

Related News

இறுதிச் சுற்று பட இயக்குனர் சுதா…
...Read More
செப்டம்பர் 20ல் சூர்யா நடித்த காப்பான்,…
...Read More
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால்…
...Read More

Latest Post