தல அஜித்துடன் மோத தயாராகும் ‘காப்பான்’ சூர்யா

தல அஜித்துடன் மோத தயாராகும் ‘காப்பான்’ சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)கேவி ஆனந்த் இயக்கத்தில் மோகன்லால், சூர்யா, ஆர்யா, சாயிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காப்பான்.

இப்படத்தின் டீசர் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. இதில் மோகன்லால் பிரதமராக நடித்துள்ளார்.

சூர்யா பல கெட் அப்புகளில் வருகிறார். தீவிரவாதி, காமண்டர், விவசாயி என அசத்துகிறார்.

இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். தேதி முறையாக அறிவிக்கப்பட இல்லை என்றாலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர் கொண்ட பார்வை படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட உள்ளனர். எனவே 2 படங்களும் மோத வாய்ப்பு இருக்கலாம் என பேசப்படுகிறது

ரஜினிக்கு எதிர்ப்பு.?; அரசுக்கு எதிர்ப்பு.? ‘காப்பான்’ டயலாக் சர்ச்சை

ரஜினிக்கு எதிர்ப்பு.?; அரசுக்கு எதிர்ப்பு.? ‘காப்பான்’ டயலாக் சர்ச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் பட டீசர் நேற்று இணையத்தில் வெளியானது.

கே.வி. ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை பணியை ஹாரிஸ் ஜெயராஜ் செய்துள்ளார்.

இப்படத்தின் டீசரில் மக்கள் போராட்டமே தப்புன்னா போராடும் சூழ்நிலையை உருவாக்கியவதும் தப்புதான் என சூர்யா ஒரு டயலாக் பேசுவார்.

சில மாதங்களுக்கு முன், அடிக்கடி போராட்டம் செய்தால் நாடு சுடுகாடாகி விடும் என தூத்துக்குடி போராட்டம் பற்றி பேசியிருந்தார் ரஜினிகாந்த்.

அதுபோல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவே மக்கள் போராட்டம் நடத்தினர்.

அந்த ஆலைக்கு அனுமதி கொடுத்த்து அரசு தானே.. எனவே போராட்டம் நடத்த தூண்டியவர்களா? (சூழ்நிலை) அரசை எடுத்துக் கொள்ளலாமா? எனவும் பேசப்படுகிறது.

புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல்: ‘ஒளடதம்’ தயாரிப்பாளரின் கண்ணீர்க் கதை

புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல்: ‘ஒளடதம்’ தயாரிப்பாளரின் கண்ணீர்க் கதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து ‘ஒளடதம்’ படத்தின் தயாரிப்பாளர் கண்ணீருடன் தன் அனுபவத்தைக் கூறுகிறார். அது திரைப்படத்தை மிஞ்சும் கதையாக இருக்கிறது. நீதிமன்றம் கயவர்களின் தலையில் சம்மட்டியடி கொடுத்து தயாரிப்பாளரைக் காப்பாற்றியுள்ளது.

”ஒளடதம்” திரைப்படத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை நீக்கம்..
கடந்த நான்கு மாதங்களாக
சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை செய்து வைக்கப்பட்டிருந்த
ஒளடதம் திரைப்படம்
அத்தடையிலிருந்து விடுதலை பெற்றுள்ளது.
ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் சார்பாக நேதாஜி பிரபு தயாரிப்பில் ரமணியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒளடதம்.
நான்கு மாதங்களுக்கு முன்னரே சென்சார் செய்யப்பட்டு வெளியிடத் தயாராகப் பத்திரிகைகளில் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சில கயவர்களின் உண்மைக்கு மாறான தவறான சித்தரிப்புகளால் சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்தது.
பணத்தாசை பிடித்த அதுவும் சினிமாக்காரர்களை ஏமாற்றி பணம் பண்ணிவிடலாம் என்று எண்ணிய சில விஷக்கிருமிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதிதான் இத்தடைக்குக் காரணம்.
இப்படத்தைத் தயாரித்த நேதாஜி பிரபு ஒரு சிறிய தயாரிப்பாளர்..அவரே கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துத் தயாரித்த படம் தான் ஒளடதம். தனது முதல் முயற்சி சிறிய பட்ஜெட் படம் என்றாலும் நல்ல கருத்துக்களுடன் ஒரு தரமான படமாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்து பாடுபட்டுத் தயாரித்த படம் இந்த ஒளடதம்.

இப்படத்தின் இயக்குநர் ரமணி மலையாளத் திரை உலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி.வி.சந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
தங்கள் கனவுகளையும் கற்பனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு போராடி வாழ்க்கையைத் துச்சமாக மதித்து சினிமா ஒன்றையே உயிர்மூச்சாக எண்ணிப் பாடுபடும் எத்தனையோ தயாரிப்பாளர் இயக்குநர் வரிசையில் இவரும் ஒருவர்.
அப்படித்தான் ஒளடதம் படமும் எடுக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் குடும்ப வியாதி என்று சொல்லத்தக்க எழுபது மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை வியாதிக்கான மாத்திரை தயாரிப்பில் நடைபெறும் சமூக விரோத நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் திரைப்படம்தான் ஒளடதம்.
தயாரிப்பாளரே இப்படத்தை வெளியிடத்தயாராய் இருந்த நிலையில் எங்கிருந்தோ வந்த சில புல்லுருவிகள் சமூகத்தின் விஷக்கிருமிகள்
உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துத்
தடை செய்து விட்டனர்…
கஷ்டப்பட்டு ஒரு திரைப்படத்தை எடுத்து முடித்து வைத்திருக்கும் புதிய தயாரிப்பாளர் ஒருவரைக் கபளீகரம் செய்து அப்படத்தைத் தனதாக்கிக் கொள்ளும் ஒரு ஏமாற்று வேலை சமீப காலமாக தமிழ்த்திரை உலகில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்தான் ஒளடதம் திரைப்படத்திற்குள்ளும்
எஸ்.அஜ்மல்கான் என்பவர் தலைமையில் விஷக்கிருமிகள் உள்ளே நுழைந்து தங்கள் ஆட்டத்தைத் தொடங்கினர்..
ஒரு ஏமாற்று எம் ஓ யு அடிப்படையில் மூன்று மாதத்திற்குள் படத்தை வெளியிடுவதாகவும் அதற்குள் பேசிய தொகையைக் கொடுத்து விடுவதாகவும் ஒப்புகொண்டு, பணத்தையும் கொடுக்காமல் மூன்று மாதத்திற்கு மேல் பல மாதங்களையும் கடத்தினர்..
சட்டப்படி அவர்களது ஒப்பந்தம் காலாவதியானபின் தயாரிப்பாளர் படத்தைத் தானே வெளியிட முன் வருகிறார்.

இந்த சமயத்தில்தான் கோடிகளில் ரூபாயைக் கொடுத்து படத்தை வாங்கியுள்ளதாகப் பொய்ப்பத்திரங்கள் தயார் செய்து, படம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி மேற்படி அஜ்மல்கான் கோஷ்டியினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கி விட்டனர்.
தயாரிப்பாளர் அளித்திருந்த லைசென்ஸ் போட்டோ காப்பியில் உள்ள அட்டஸ்டேஷன் கையெழுத்துக்கு மேல் கோடிகளில் ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக எழுதி நீதிமன்றத்தில் காட்டியுள்ளனர்..இப்படிப்பட்ட கிரிமினல் வேலைகள் நடப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதன்முறை..
எத்தனையோ போராட்டங்களுடன் படத்தை எடுத்து முடித்த நேதாஜி பிரபு சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதி அரசர் முன்னால் தனது பக்கத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்லி கடந்த நான்கு மாதங்களாகப் போராடி இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறார்.

மேலும் குறிப்பிட்ட இந்த நபர் இதைப்போல் இன்னும் சில தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்பதை தக்க சாட்சியங்களுடன் நிரூபித்திருக்கிறார்.

இந்த விஷக்கிருமிகள் இதையே தங்களது தொழிலாக வைத்துக்கொண்டுள்ளனர் என்றும்
இனிமேல் குறிப்பிட்ட இந்த விஷக்கிருமிகளுடன் எந்தவிதத் தொடர்பும் தமிழ்த்திரையுலகினர் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் இவர்கள் கடைந்தெடுத்த ஏமாற்றுக்காரர்கள் எனவும் நீதி அரசர் தனது தீர்ப்பில் எழுதி அவர்களின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்..
இவ்வழக்கை சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள், கே.எஸ்.சாரநாத், D.வீரக்குமார் மற்றும் K.செல்வராஜ் ஆகியோர் மிகத்திறம்பட நடத்தி வெற்றி கண்டுள்ளனர்..

விரைவில் ஒளடதம் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடங்க உள்ளதாகக் கூறுகிறார் நேதாஜி பிரபு.

லாரன்ஸை அரசியலுக்கு அழைக்கும் சீமான்?; எச்சரிக்கும் லாரன்ஸ்

லாரன்ஸை அரசியலுக்கு அழைக்கும் சீமான்?; எச்சரிக்கும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence slams Seeman and gave warning to him“வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை!”*

இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்!

அண்ணா வணக்கம்! உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து *”அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன்! மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்”* என, மனதார வாழ்த்தினேன்! அதற்குத் தாங்கள் *”நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி?”* என தெரிவித்திருந்தீர்கள்.

அதன் பிறகும்… இரண்டு மூன்று முறை போனில் உங்களிடம் பேசி இருக்கிறேன்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போராட்டத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை செய்திட, சேவை மனப்பான்மையோடு சென்றிருந்தேன் அதை செவ்வனே செய்து விட்டு வழக்கம் போல் அமைதியாக எனது வேலைகளை செய்துகொண்டு இருந்தேன்.

ஆனால்…..
நீங்கள் தான் முதன் முதலில் உங்களது மேடையில், எனது பெயரை இழுத்து, என்னையும் எனது ரசிகர்களையும், தன்னலமற்ற எனது சேவைகளையும், தரமற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசினீர்கள்…. அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

*”எனக்கும் அண்ணனுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையே… பிறகு ஏன் அண்ணன் இப்படி தப்பு தப்பாக பேசுகிறார்”*
என எனது நண்பர்களிடம் கேட்டேன் அவர்கள் சொன்னது….. *”ஒன்று அரசியலாக இருக்கலாம் அல்லது பயமாக இருக்கலாம்”* என்றார்கள்.

அப்பொழுதுதான் இது அரசியல் என்று நான் புரிந்து கொண்டேன்!
அதே சமயம்….. நீங்கள் அப்படி என்னைப்பற்றி பேசியதற்கு
நான் பதில் சொல்லும் பொழுது கூட உங்களைப்பற்றி மிக மரியாதையோடு தான் பேசினேன்!

இது அச்சமயத்தில் அனைவருக்குமே தெரியும்!
*”சரி இந்த விஷயம் அத்தோடு முடிந்து விட்டது”* என நான் என்னுடைய திரைப்பட பணியையும், பொது சேவையையும் அமைதியாக செய்து கொண்டு இருக்கிறேன்…‌!

*”என்னைப்பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசி விட்டுப் போய் விட்டீர்கள்….*
ஆனால் உங்கள் பேச்சால் *தூண்டிவிடப்பட்ட* *உங்களுடைய ஒரு சில தொண்டர்கள்*

*என்னை* *எதிரியாகவே இன்றளவும் பாவித்து வருகிறார்கள்!”*

*”நீங்கள் என்னை தவறாகப் பேசியதையும்,* *அதற்கு* *நான் நாகரீகமாக பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல்”* உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில்….. தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள்! அது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது ஏதேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு நான் போகும்போது கூட
உங்களது ஒரு சில தொண்டர்கள் அங்கு வந்து மிகவும் நாகரீகமற்ற முறையில் மறைமுகமாக பேசுகிறார்கள்!

இவையெல்லாம், எப்பொழுது நீங்கள் மேடையில் என்னைப் பற்றி தவறாக பேசினீர்களோ, அப்பொழுதிருந்தே இது நடந்து வருகிறது.
நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை! ஆனால்…. மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க, நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும் செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள்!
இவ்வளவு நாள் பொறுமையாக தான் இருந்தேன் ஆனால் உங்களது ஒரு சில தொண்டர்களின் செயல்பாடுகள் தற்பொழுது எல்லை மீறி போகிறது…
கடந்த வாரம் கூட இந்த கசப்பான சம்பவம் நடந்துள்ளது!

அதை மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க என்னிடம் கூறி, மிகவும் வருத்தப்பட்டார்கள்! அதற்காகத்தான் இந்தப் பதிவு!

இறுதியாக ஒன்றை மட்டும் உறுதிபட கூறுகிறேன். *”எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன்!

ஆனால்… மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது!*
ஏனென்றால் *”அவர்கள் எனது பிள்ளைகள் மாதிரி!”*

உங்களது ஒரு சில தொண்டர்களால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினை போலவே, தமிழகத்தில் உள்ள பல *அரசியல் தலைவர்களுக்கும்* எனது *சக திரைப்பட நண்பர்களுக்கும்,*

உங்களின் ஒரு சில தொண்டர்களால் தொடர்ந்து ஏற்படுகிறது என்பதை
இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்! எனவே, உங்களுடைய *”அந்த ஒருசில தொண்டர்களை”* அழைத்து தப்புத்தப்பாக என்னைப்பற்றி பேசுவதையும் எழுதுவதையும் கண்டிப்பாக தவிர்க்கும் படி கூறிடுங்கள்!

*”பொதுவாக தாங்கள் அனைவரையுமே தம்பி, தம்பி என்றுதான் அழைக்கிறீர்கள்… அந்த தம்பியில் ஒருத்தனாக கேட்கிறேன் எந்த அண்ணனும் தனது தம்பியோட வளர்ச்சியை பார்த்து ரசிக்கத்தான் செய்யனும், அந்தத் தம்பியின் வளர்ச்சியை அழிக்க வேண்டுமேன நினைக்கக்கூடாது!”* *”நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்!”*

இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எனக்கும் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொந்தரவு கொடுத்து வந்தால்….?

எச்சரிக்கை தான்! அந்த
*எச்சரிக்கை* என்னவென்றால்…?
*”எனக்கு “இந்த அரசியல்” எல்லாம் தெரியாது!”*

*”அரசியலைப் பொருத்தவரை நான் ஒரு ஜீரோ!”*

*”முன்பு நடனத்தில் கூட நான் ஜீரோவாகத்தான் இருந்தேன்,*
*பிறகு கற்றுக் கொண்டேன்!”*

*”டைரக்‌ஷன் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது,*

*பிறகு கற்றுக்கொண்டேன்!”*

*”படத்தயாரிப்புக் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது,*
*பிறகு கற்றுக்கொண்டேன்*

*”அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன், அதில் “ஹீரோவாக்கி” என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள்!”*

*”நீங்கள் பேச்சை அதிகமாக பேசுவீர்கள்…!*

*”நான் சேவையை அதிகமாக செய்வேன்!”*

*”மக்களுக்கு பேசுகிறவர்களை விட,* *”செயலில்”காட்டுகிறவர்களைத்தான் அதிகம் பிடிக்கும்!”*

*”நாமிருவரும் ஏதேனும் ஒரு பொதுவிவாத மேடையில் அமர்ந்து*
*நீங்கள் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்தீர்கள்?*

*”நான் என்னென்ன நன்மைகள் செய்தேன்” என பட்டியலிட்டேன் ஏன்றால்* *உங்களால் பதில் சொல்ல*
*முடியாது!”*

*”நான், ஏழைகளுக்கு செய்கிற சேவைகளை, ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட, மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் பாராட்டுகிறார்கள்,*
*எனது தலைவனும்,*

*என் நண்பனும் கூட,* *நான் எந்த உதவி கேட்டாலும் உடனே,*
*செய்து கொடுக்கிறார்கள்…* *செய்தும் வருகிறார்கள்…* அத்துடன் மனப்பூர்வமாக என்னை வாழ்த்துகிறார்கள்..
ஆனால்… *”நீங்களும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மட்டும் தான், என்னையும் எனது தன்னலமற்ற சேவைகளையும் மிகக் கடுமையாக கேவலப்படுத்தி வருகிறார்கள்”* அப்புறம் உங்களது “பெயரை”
நான் இங்கு குறிப்பிடாமல் இருப்பதற்கு காரணம்? *”பயம்”* இல்லை!
நாகரிகம்தான் காரணம்!

அது மட்டுமல்லாமல்… *”இது தேர்தல் நேரம் வேறு!”*

இந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான்
உங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை!

தயவுசெய்து என்னையும் எனது மாற்று திறனாளி பிள்ளைகளின் மன உணர்வுகளையும், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

*”நான் சொல்வது சரி”* என உங்களுக்கு தோன்றினால் *”தம்பி வாப்பா பேசுவோம்!”* என கூப்பிடுங்கள்…. *”நானே உங்களது வீட்டுக்கு வருகிறேன்…..”* உட்கார்ந்து…..

மனம் விட்டு பேசுவோம்! *”சுமூகமாகி”* “அவரவர் வேலையை, அவரவர் செய்வோம்!” *”நீங்களும் வாழுங்கள்!*
*”வாழவும் விடுங்கள்!”*

இல்லை…… *”இதை பிரச்சனையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம்”* என நீங்கள் முடிவெடுத்தால்…. அதற்கும் நான் தயார்!

*”சமாதானமா?* *”சவாலா?”*

முடிவை நீங்களே எடுங்கள்!

Raghava Lawrence slams Seeman and gave warning to him

ஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு வந்து குவிந்த நட்சத்திரங்கள்

ஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு வந்து குவிந்த நட்சத்திரங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Stars inaugurated AA Guru silks at Chennaiசென்னையில் திருமூர்த்தி நகரில் ஏஏ குரு சில்க்ஸ் என்கிற பெயரில் புதிய ஜவுளிக்கடை  ஷோரூம் இன்று திறக்கப்பட்டது.

இத்திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவுக்கு நடிகைகள் காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு, சீமா, வெண்ணிற ஆடை நிர்மலா, பானுபிரியா, நிரோஷா, சோனியா அகர்வால், நடன இயக்குநர் கலா, anchor திவ்யதர்ஷினி என்று திரையுலக மூத்த இளைய கதாநாயகிகள், சின்னத்திரை நடிகைகள் வந்து குவிந்தனர்.

வருகை புரிந்த நட்சத்திரங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த போது மகிழ்ச்சியுடன் மலரும் நினைவுகளைப் பரிமாறிக் கொண்டனர்.

புதிய ஷோரூம் பற்றி உரிமையாளர் மோகன் பேசும்போது…

“என் மனைவி அனிதாவுக்கு ஆடைகள் வடிவமைப்பதில் தனி ஆர்வமும் ஈடுபாடும் உண்டு அவருடைய கனவு தான் இந்த ஷோரூம்.

இதில் இந்தியாவில் பல இடங்களிலிருந்து வரும் பட்டுப் புடவைகள் வாடிக்கையாளர்கள் விரும்பும் கலை வேலைப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆடைகள்,சேலைகள் வடிவமைப்பதற்காகவும் சித்திர வேலைப்பாடுகள் செய்வதற்காகவும் 30 கலைஞர்கள் இங்கேயே தங்கிப் பணியாற்றுகிறார்கள் வாடிக்கையாளர்களின் கனவில் மலரும் எண்ணங்களைக் கூட வண்ணங்களாக வடிவமைத்துத் தருகிறோம்.

சென்னையின் போக்குவரத்து நெரிசலற்ற இதயப்பகுதியில் இக்கடை அமைந்திருப்பது இதன் சிறப்பாகும்” என்று கூறினார்.

Kollywood Celebrities inaugurated AA Guru silks at Chennai

Kollywood Celebrities inaugurated AA Guru silks at Chennai

குறும்பட இயக்குனர் MRK முதன்முதலாக இயக்கும் படம் ‘ஜெனி’

குறும்பட இயக்குனர் MRK முதன்முதலாக இயக்கும் படம் ‘ஜெனி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Short film director MRK directing feature film Jeniஇன்னர் விஷன் என்ற புதிய பட நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் படத்திற்க்கு “ஜெனி” என்ற தலைப்பு வைத்து இருக்கின்றனர்.

இப்படத்தின் கதை மாலை ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரையில், மூன்று மணி நேரத்தில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி ஒரு பேயுடன் மாட்டிக்கொண்டு, மூன்று மணி நேரத்தில் எப்படி தப்பித்து வெளியே வருகிறார் என்பதை திரில், மர்மம் கலந்து.

ஹாலிவுட் ஸ்டைலில் இந்த ஹாரர் படத்தின் கதை-திரைக்கதை எழுதி இயக்க இருக்கிறார் இயக்குனர் எம்.ஆர்.கே.

இவர் “தீச்செடி” என்ற குறும் படத்தை இயக்கி மூன்று விருதுகளையும், “எல்லை” என்ற குறும் படம் மூலம் இரண்டு விருதுகளயும் பெற்றவர். முதன் முதலாக இவர் முழு நீள படத்தை இயக்குகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தில் நடிப்பதற்காக முன்னணி கதாநாயகி ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. ஊட்டி, குன்னூர். கோத்தகிரி ஆகிய இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அரவிந் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜெய்கீர்த்தி இசையமைக்கிறார்.

Short film director MRK directing feature film Jeni

More Articles
Follows