சூர்யா ஒன்னும் சும்மா பேசல…; மோடிக்கு எதிராக ரஜினி பேச்சு

Rajinikanth supports Suriya speech and slams BJP Governmentமோகன்லால் உடன் முதன்முறையாக சூர்யா நடித்துள்ள படம் ‘காப்பான்’.

கேவி ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க, ஹாரீஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.

இதில் பேசிய ரஜினிகாந்த்…

‘சில தினங்களுக்கு முன் சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்திற்கு நான் ஆதரிக்கிறேன். அவர் அகரம் பவுண்டேசன் நடத்தி வருகிறார். மாணவர்கள் படும் கஷ்டத்தை அருகில் இருந்து பார்த்தவர் சூர்யா.

அவர் ஒன்றும் தெரியாமல் பேசவில்லை. தம்பி சூர்யாவின் இன்னொரு முகம் சில தினங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரிந்தது. சூர்யாவின் கல்வி குறித்த கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

ரஜினி பேசினால்தான் மோடிக்கு கேட்கும் என்பது இல்லை. சூர்யா பேசியதும் மோடிக்கும் கேட்டு இருக்கும்.
சூர்யா நடித்த பிதாமகன், மற்றும் கார்த்தி நடித்த பருத்திவீரன் படங்கள் அருமை. அவர்களின் நடிப்பை பார்த்து வியந்தேன்.

காப்பான் படத்தில் மோகன்லால் நடிப்பது சில நாட்களுக்கு முன்பு தான் தெரிந்தது. அவர் மிகச்சிறந்த நடிகர்.
நான் கடவுள் படத்தில் அகோரியாக நடித்த ஆர்யா பார்த்து ஆச்சரியப்பட்டேன். நான் நிறைய அகோரிகளை நேரில் சந்தித்திருக்கிறேன். அப்படியொரு நடிப்பை ஆர்யா கொடுத்திருந்தார்.

சிவாஜிக்கு பிறகு கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது.

இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்து கொள்ள வேண்டும். தமிழாற்றுபடை படித்த பின் வைரமுத்து மீதான மதிப்பு இன்னமும் பல மடங்கு உயர்ந்தது.’ என்றார்.

புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யாவின் கருத்தை ஆரம்பம் முதலே பாஜக. வினர் எதிர்த்தனர். இப்போது சூர்யாவுக்கு ஆதரவாக ரஜினி பேசியிருப்பது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rajinikanth supports Suriya speech and slams BJP Government

Overall Rating : Not available

Related News

செப்டம்பர் 20ல் சூர்யா நடித்த காப்பான்,…
...Read More
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால்…
...Read More

Latest Post