2 வாரத்திற்குள் 2 படங்கள் ரிலீஸ்; ஆச்சரியப்படுத்தும் ஆர்யா!

2 வாரத்திற்குள் 2 படங்கள் ரிலீஸ்; ஆச்சரியப்படுத்தும் ஆர்யா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Within 2 weeks Arya plans to release 2 moviesமெளன குரு படத்தை இயக்கிய சாந்தகுமார் தற்போது இயக்கியுள்ள படம் மகாமுனி.

ஆர்யாவுடன் மகிமா நம்பியார் இந்துஜா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆர்யா நடித்துள்ள இப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியானது.

இந்த காட்சிகளை பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.

செப்டம்பர் 6ல் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு சென்சார்போர்டு யு/ஏ வழங்கியுள்ளது.

இந்த படம் வெளியாகி 2வது வாரத்திற்குள் ஆர்யாவின் அடுத்த படம் ரிலீசாகவுள்ளது.

சூர்யாவுடன் ஆர்யா இணைந்துள்ள காப்பான் படம் செப்டம்பர் 20ல் திரைக்கு வருகிறது.

இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

Within 2 weeks Arya plans to release 2 movies

விலையில்லா விருந்தகம்.; வியக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்

விலையில்லா விருந்தகம்.; வியக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vilayilla Viruthangam Free food scheme by Vijay fans விஜய் படங்கள் ரிலீசாகும் சமயத்தில் இவரது ரசிகர்கள் வித்தியாசமாக எதையாவது செய்து மக்களை கவர்ந்து விடுகின்றனர்.

மேலும் அவ்வப்போது மக்களுக்கும் நற்பணிகளை செய்து வருகின்றனர்.

தற்போது இவர்கள் உருவாக்கியுள்ள புதிய திட்டம் தான் விலையில்லா விருந்தகம்.

தினமும் காலை 7:35 முதல் 8:35 மணி வரை, ஓட்டலில் விலையில்லாமல் காலை உணவை உண்ணலாம்.

வருகிற ஒரு வருடத்திற்கு இது போல செய்யவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை, மதுரை, கடலூர், சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இதை செய்துள்ளனர்.

இவர்களின் இந்த சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Vilayilla Viruthangam Free food scheme by Vijay fans

ரசிகைகளை கவர அஜித் திட்டம்.; விஜய்யை மிஞ்சுவாரா..?

ரசிகைகளை கவர அஜித் திட்டம்.; விஜய்யை மிஞ்சுவாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith plans to beat Vijay in attracting girl fansதமிழ் சினிமாவில் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தைகளில் முக்கியமானது தல தளபதி.

இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் அதிகம்.

இதில் விஜய்க்கு பெண் ரசிகைகள் அதிகம். தமிழ் நாடு மட்டுமில்லாது கேரளாவிலும் இவருக்கு ரசிகைகள் அதிகளவில் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய 2 படங்களிலும் அஜித்துக்கு ரசிகைகள் கிடைத்துள்ளனர்.

இந்த இரண்டு படங்களும் குடும்பம் மற்றும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் அஜித்தின் மகளுக்கும் பிடித்திருந்ததாம்.

எனவே இனி வரும் படங்களில் ரசிகைகளை கவர, அதற்கேற்ப காட்சிகளை வைக்க இயக்குனர்களிடம் சொல்லியிருக்கிறாராம் தல.

ஒருவேளை ரசிகைகள் வட்டத்தில் தளபதியை மிஞ்ச திட்டம் போட்டு இருக்காரோ? என்னவோ…

Ajith plans to beat Vijay in attracting girl fans

வெற்றிமாறனை தந்த தனுஷுக்கு கோடி நன்றி.. : தாணு

வெற்றிமாறனை தந்த தனுஷுக்கு கோடி நன்றி.. : தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Thaanu express his thanks to Dhanush for Asuran Vetrimaaranதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன் .இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது,

“ஒரு படத்தில் இருந்து இன்னொரு படத்திற்கான ரிலீஸ் டேட் இந்தப்படம் தான் சீக்கிரம் வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் தாணு சார். இந்தப்படம் பூமணி எழுதிய வெக்கை நாவலில் இருந்து எடுத்தாளப்பட்டது.

வடசென்னை முடித்ததும் வடசென்னை 2 பண்ணலாமா என்று நினைத்தேன். பின் நானும் தனுஷும் இந்தப்படத்தை துவங்க முடிவு செய்தோம்.

நாம எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு விசயத்தை நடத்திட முடியாது. அது தானாவே அமையும். இந்தப்படத்திற்கு அப்படி எல்லாம் அமைந்தது. பசுபதி கூட வொர்க் பண்ணணும்னு பல படங்களில் நினைத்தேன் தற்போதுதான் முடிந்தது. முதலில் இப்படத்தில் நான் முடிவுசெய்த நடிகர் கருணாஸ் மகன் கென் தான்.

ஒரு இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு பாலாஜி சக்திவேல் சார் நடிக்க முதலில் மறுத்தார். பின் சிறப்பாக நடித்துக்கொடுத்தார். நரேன் ஒரு ஸ்ட்ராங்கான ரோல் செய்துள்ளார்.

கஷ்டங்களில் இருந்து மீண்டு எப்படி வரக்கூடிய ஒரு கேரக்டர் மஞ்சுவாரியாருக்கு. படத்தில் உள்ள எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கும்..தனுஷ் எந்த கேரக்டரில் நடித்தாலும் மெனக்கெடுவார். இந்தப்படத்திற்காக அதிக மெனக்கெடலை எடுத்துக்கொண்டார். தேரிக்காடு சூட்டிங் ஸ்பாட்டில் பைட் சீக்வென்ஸுக்காக ரொம்ப சிரமப்பட வேண்டிய இருந்தது. ஆனால் அதை அசால்டாக செய்தார்.

இந்தப்படம் எல்லோரிடமும் இருந்து எடுத்துக்கொண்ட கமிட்மெண்ட் அதிகம். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். என்னிடம் கதையே கேட்கவில்லை. சொன்ன நேரத்தில் சரியாக வருவார். இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அவர்களும் ஒரு கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார்.

இப்படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் அவர்களின் அதிகபட்ச நடிப்பை கொடுத்தது எங்களின் வரம். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் எப்போதுமே நான் நினைப்பதை அப்படியே செய்து கொடுப்பார்.

என் கிரியேட்டிவிட்டியை எந்த இடத்திலும் தடை செய்யவே மாட்டார். நானும் ஜிவி பிரகாஷும் வொர்க் பண்ணும் போது ரொம்ப ஜாலியாக இருக்கும். இந்தப்படத்திற்காக நாங்க நிறைய ஸ்டெடி பண்ணோம். படத்தில் ஆர்.ஆர் ரொம்ப புதுசா இருக்கும். ஆர்ட் டைரக்டர் நான் போதும் என்று சொன்னாலும் அதைவிட அதிகமாக செய்து தருவார்.

என் கூட எடிட் வேலை செய்வது ரொம்ப சிரமம். என் எடிட்டர் அதைப்புரிந்து வேலை செய்தார். அதைப்போல தான் ஸ்டண்ட் மாஸ்டரும். எனக்கு இருக்கக் கூடிய மிகப்பெரிய ஷீல்ட் தனுஷ்”.

தயாரிப்பாளர் தாணு பேசியதாவது,

“தனுஷ் சொன்னதும் இந்தப்படத்தை உடனே துவங்கினேன். வியக்கத் தகுந்த இயக்குநர் வெற்றிமாறன். ஒருநாள் வெற்றிமாறன் போன் பண்ணி தனுஷ் இன்று ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கார் என்று சொல்வார்.

மறுநாள் தனுஷ் போன்பண்ணி, ” சார் வெற்றிமாறன் போல ஒரு இயக்குநரை நீங்கள் பார்க்கவே முடியாது என்பார். ஒரு தயாரிப்பாளருக்கு இதைவிட என்ன சந்தோசம் என்ன வேண்டும். வெற்றிமாறனை எனக்குத் தந்த தனுஷுக்கு கோடானகோடி நன்றி”என்றார்

இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது,

“இந்த வாய்ப்பைத் தந்த தாணு சார் ,வெற்றிமாறன் சார் ,தனுஷ் சார் அனைவருக்கும் நன்றி. ஒரு மண் சார்ந்த படத்தில் வேலை செய்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் பெரிய அளவில் உழைத்துள்ளார்கள் “என்றார்

மஞ்சுவாரியர் பேசியதாவது,

“இந்தப்படம் எனக்கு ரொம்ப ஸ்பெசல். முதலில் படம் இப்படி ஒரு பவர்புல் டீமோட களம் இறங்குறது சந்தோஷமா இருக்கிறது. வெற்றிமாறன் படம் என்றால் ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

தனுஷின் ரசிகை நான். இவர்கள் அனைவரோடும் வேலை செய்தது நிஜமாகவே சந்தோஷமாக இருக்கிறது. இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

Producer Thaanu express his thanks to Dhanush for Asuran Vetrimaaran

அந்தாதுன் தமிழ் ரீமேக்..: பிரசாந்தை இயக்கும் கௌதம் மேனன்

அந்தாதுன் தமிழ் ரீமேக்..: பிரசாந்தை இயக்கும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)ஆயுஷ்மன் குரானா, தபு உள்ளிட்டோர் நடித்த ஹிந்தி படம் ‘அந்தாதுன்’.

ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படம் 32 கோடி பட்ஜெட்டில் உருவாகி 450 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த படம் ‘தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்சு படத்தின் தழுவல் என கூறப்படுகிறது.

சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளையும் இப்படம் வென்றது.

சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளதாக தியாகராஜன் அறிவித்திருந்தார்.

தற்போது இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

அண்ணனை சந்தித்து உடல் நலம் விசாரித்த ரஜினிகாந்த்

அண்ணனை சந்தித்து உடல் நலம் விசாரித்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)சிறுவயதிலேயே தன் பெற்றோரை இழந்த ரஜினிகாந்த் தன் அண்ணன் வளர்ப்பில் தான் வளர்ந்தார்.

எனவே தன் அண்ணன் மீது மிகுந்த பாசமும் மரியாதையும் வைத்திருக்கிறார்.

இவரது அண்ணன் சத்யநாராயணா ராவ் பெங்களூரில் வசித்து வருகிறார்.

திடீர் உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காலில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டுள்ளார்.

இதனால் தர்பார் சூட்டிங்கிலிருந்து அவரசமாக கிளம்பி பெங்களூருக்கு வந்து அண்ணன் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது டாக்டர்கள் ரஜினியுடன் செல்ஃபி எடுத்துள்ளனர்.

ரஜினியை வருகையை அறிந்த ரசிகர்கள் அங்கு கூடிவிட்டனர்.

பின்னர் தர்பார் சூட்டிங்கு மீண்டும் ஜெய்ப்பூர் கிளம்பிச் சென்றார் ரஜினிகாந்த்.

More Articles
Follows