வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகிக்கு வந்த நிலைமை

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகிக்கு வந்த நிலைமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sridivyaவருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை உள்ளிட்ட படங்கள் வந்த போது தமிழ் சினிமாவின் ராசியான நடிகையானார் ஸ்ரீதிவ்யா.

தமிழில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்த நிலையில் சில படங்களுடன் இவரை எந்த படத்திலும் காணவில்லை.

தற்போது அதர்வாவுடன் நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த என்ற படம் மட்டுமே இவர் கைவசம் உள்ளது.

இவரது தாய்மொழியான தெலுங்கு சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லையாம்.

எனவே இனி கிளாமர் ரூட்டுக்கு செல்ல முடிவெடுத்து விட்டாராம்.

தனது உடல் மற்றும் உயரத்திற்கு கிளாமர் செட்டாகாது என கூறிவந்தவருக்கு வந்த நிலைமையை பார்த்தீர்களா..?

காவிரிக்காக விவசாயிகளுடன் கமல் நடத்தும் ஆலோசனை கூட்டம்

காவிரிக்காக விவசாயிகளுடன் கமல் நடத்தும் ஆலோசனை கூட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanநடிகரும் மக்கள் நீதி மைய கட்சி தலைவருமான கமல்ஹாசன் அவர்கள், காவிரி விவகாரத்தில் மே.19 ஆம் தேதி சென்னையில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில்….

காவிரி பிரச்னையில் நாம் உரிமைகளை இழந்து வருகிறோம்.

இது நம் அனைவரின் பிரச்னை என்பதால் கட்சிகளை தாண்டி ஒன்றாக நிற்க வேண்டும்.

இளைஞர்கள், ஆர்வலர்கள் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

காவிரி பிரச்னைக்காக கர்நாடகாவில் யார் முதல்வராக வந்தாலும் அவரை சந்தித்து பேச உள்ளோம்.

தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை அவசியம்.” என்றார்.

பிரபுதேவாவை திருமணம் செய்துக் கொள்கிறாரா நிகிஷா பட்டேல்.?

பிரபுதேவாவை திருமணம் செய்துக் கொள்கிறாரா நிகிஷா பட்டேல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nikesha Patel Clarifies On Marriage Rumours With Prabudeva

நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள தான் விரும்புவதாக நடிகை நிகிஷா பட்டேல் சொன்னதாக கடந்த சில தினங்களாக செய்திகள் பரவியது.

நம் தளத்தில் அப்படியொரு செய்தி வெளியாகவில்லை.

தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நிகிஷா பட்டேல்.

அதில் அவர் கூறும்போது… பிரபுதேவாவைப் போன்ற ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினேன்.

ஆனால் அதை பிரபு தேவாவையே நான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பலர் திரித்து கூறிவிட்டார்கள்.

அவர் குடும்பத்துக்கும் எனது குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை. என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு ஜஸ்ட் பிரண்ட்.” என கூறியுள்ளார் நிகிஷா.

Nikesha Patel Clarifies On Marriage Rumours With Prabudeva

விஷால் ராஜினாமா செய்யணும்; பாரதிராஜா-டிஆர்-ராதாரவி போர்க்கொடி

விஷால் ராஜினாமா செய்யணும்; பாரதிராஜா-டிஆர்-ராதாரவி போர்க்கொடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalநடிகர் சங்க பொதுச் செயலாளராக பதவியேற்ற விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

ஆனால் சங்கத் தலைவர் என்ற முறையில் அவர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி, அவர் பதவி விலக வேண்டும் என தயாரிப்பாளர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இது தொடர்பாக பாரதிராஜா, டி.ராஜந்தர், ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அவர்கள் கூட்டாக பேட்டியளித்தனர்.

45 நாட்களாக தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடந்தது. இதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை, தனது இரும்புத்திரை படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் மட்டுமே இருந்திருக்கிறார்.

அந்த படத்துக்கு 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் கிடைத்துள்ளது.

மற்றவர்களது படங்களுக்கு 200 தியேட்டர்கள் கூட கிடைப்பதில்லை.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துடன் விஷால் டீல் பேசியிருக்கிறார்.

சொன்ன வாக்குறுதிகளை அவர் ஓராண்டில் நிறைவேற்ற வில்லை என்றால் பதவி விலகுவேன் என்றார்.2 ஆண்டுகள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றி, தமிழ் நடிகர்கள் சங்கம் என பெயர் வைக்க வேண்டும்.

புதிதாக சங்கத் தேர்தல் நடத்தி தமிழர்களை நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும்.” என்றனர்.

4 நாயகிகள் இருந்தும் அம்ரிதாவுடன் மட்டும் நெருக்கம் காட்டும் விஜய் ஆண்டனி

4 நாயகிகள் இருந்தும் அம்ரிதாவுடன் மட்டும் நெருக்கம் காட்டும் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaali stillsவிஜய் ஆண்டனி தயாரித்து நடித்துள்ள படம் காளி.

பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த வாரம் மே 18ஆம் தேதி ரிலீஸ் செய்கின்றனர்.

கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

இதில் அம்ரிதாவுடன் மட்டும் நெருக்கமாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.

அது ஏன் என்பது பற்றி அவரே கூறியதாவது…

நான் எல்லா படத்திலும் ரொம்ப சீரியசாக நடிப்பதாகவும், ஹீரோயின்களை தொடாமல், நெருக்கம் காட்டாமல் நடிப்பதாவும் குறை சொன்னார்கள்.

இன்னொரு பெண்ணை கட்டிப்பிடித்து நடிப்பதில் எனக்கு தயக்கம் இருந்தது.

ஆனால் இப்போது அதை மாற்றி, கொஞ்சம் ரொமான்ஸ் செய்துள்ளேன்.

அம்ரிதாவுடன் நெருக்கமாக நடித்திருக்கிறேன். சீரியசாக நடிக்கிறேன் என்கிற இமேஜையும் இந்தப் படம் மாற்றும்” என்றார்.

அதுபோல் அம்ரிதா பேசும்போது… விஜய் ஆண்டனி ரொம்ப அமைதி. அதிகமாக பேச மாட்டார்.

ஒரு பாடல் காட்சியில் நாங்கள் இருவரும் நெருக்கமாக நடிக்க வேண்டும் என நடன இயக்குனர் சொன்னார். எனவே அப்படி நடித்துள்ளோம்.” என்றார்.

தனது அடுத்த படத்தலைப்பையும் நெகட்டிவ்வாக வைத்த விஜய்ஆண்டனி

தனது அடுத்த படத்தலைப்பையும் நெகட்டிவ்வாக வைத்த விஜய்ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay antonyஒரு படம் தயாரித்தால் அந்த தயாரிப்பாளருக்கு எல்லாம் பாசிட்டிவ்வாக அமைய வேண்டும்.

எனவே படத்தின் தலைப்பையும் பாசிட்டிவ்வாகவே வைப்பார்கள்.

தமிழ் சினிமாவின் இந்த சென்டிமெண்ட்டை உடைத்தெறிந்தவர் விஜய் ஆண்டனி.

தான் தயாரித்து நடிக்கும் படங்களுக்கு நெகட்டிவ் டைட்டில்களை வைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் இவர்.

பிச்சைக்காரன், சைத்தான், எமன், ஆகிய தலைப்புகளை வைத்து அனைத்தையும் வெற்றிப் படங்களாக கொடுத்தார்.

அண்ணாதுரை என்ற படத்தலைப்பில் ஒரு படம் நடித்தார். ஆனால் அது வெற்றிப் பெறவில்லை என்பதால் தற்போது மீண்டும் நெகட்டிவ் தலைப்புக்கே மாறியுள்ளார்.

இவர் நடித்துள்ள காளி படம் இந்த வாரம் மே 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் தனது அடுத்த படத்திற்கு கொலைகாரன் என தலைப்பு வைத்திருப்பதாக அறிவித்தார்.

அதுபோல் மற்றொரு படத்திற்கு திமிரு புடிச்சவன் என்று தலைப்பிட்டு நடித்து வருகிறார். இதில் நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடித்து வருகிறார்.

More Articles
Follows