தமிழே தெரியாதவர்கள் கூட ஆடி பாடிய ‘விளம்பர இடைவெளி..’ பாடல் சாதனை

தமிழே தெரியாதவர்கள் கூட ஆடி பாடிய ‘விளம்பர இடைவெளி..’ பாடல் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூக வலைத் தளங்களில் எப்போது எந்த பாடல் டிரெண்டாகும் என்று யாருக்கும் தெரியாது. அப்படி சமீபத்தில் உலகம் எங்கும் ஏழு லட்சம் பேருக்கும் மேல் ரீல்ஸ் உருவாக்கி டிரெண்டாகிக் கொண்டிருப்பது ஒரு தமிழ் பாடல்.

நயன்தாரா – அதர்வா – ராஷி கண்ணா நடித்து 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘விளம்பர இடைவெளி’ என்ற பாடல்தான் அது.

ஹிஹாப் தமிழா ஆதி இசையில் கபிலன் வைரமுத்து எழுதிய பாடல். குறிப்பாக இந்தப் பாடலின் இறுதி வரிகளான “நான் உனதே நீ எனதா ? தெரியாமலே நான் தேய்கிறேன் – இல்லை என்றே சொன்னால் இன்றே என் மோகப் பார்வை மூடுவேன்” என்ற வரிகளைக் கொண்டு உலகம் முழுக்க ரீல்ஸ் உருவாகி பரவிக் கொண்டிருக்கிறது.

இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, கனடா என்று எல்லா நாடுகளிலும் இது டிரெண்டிங்கில் இருக்கிறது.

தமிழே தெரியாதவர்கள் கூட இந்தப் பாடலுக்கு நடனமாடியும் பாடியும் பதிவு செய்து வருகிறார்கள்.

இது குறித்து பாடலாசிரியர் கபிலன்வைரமுத்து தன் முக நூலில் “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை” என மகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார்.

Vilambara Idaiveli song goes viral till now

#KabilanVairamuthu is thrilled over his 2018 song #VilambaraIdaiveli from #ImaikkaNodigal composed by @hiphoptamizha getting viral across the world all of a sudden on various social media platforms. The song is trending in India, US, Pakistan, Spain, Africa, Australia, Canada etc

தனது தந்தை கொடுத்த பாலியல் துன்புறுத்தல் குறித்து அதிர்ச்சி பேட்டி – குஷ்பூ

தனது தந்தை கொடுத்த பாலியல் துன்புறுத்தல் குறித்து அதிர்ச்சி பேட்டி – குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 90களில் உச்சபட்ச நட்சத்திரமாக லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த நடிகை குஷ்பூ.

ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுடன் ஜோடி நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தனது 8 வயதில் தந்தையால் அவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும் அதை அவர் எவ்வாறு எதிர்த்து வெளியில் வந்தார் என்பது குறித்தும் மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தார்.

இது குறித்து குஷ்பூ சமீபத்தில் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

உங்களின் இந்த மோசமான அனுபவம் பற்றி நீங்கள் மிகவும் தைரியமாக குரல் கொடுத்துள்ளீர்கள் . அதன் மூலம் நீங்கள் மக்களுக்கும் இன்றைய இளைய சமூகத்தினருக்கும் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது.

இது போன்ற துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு உங்களின் அறிவுரை என்ன?
என கேட்கப்பட்டது.

குஷ்பூ பேசுகையில், “நிச்சயமாக அவர்கள் அதை வெளிப்படுத்த வேண்டும். நான் அதை மிகவும் தாமதமாகவே வெளிப்படுத்தினேன். ஒவ்வொருத்தருக்கும் பிரச்சனைகள், குடும்பம், இமேஜ் இப்படி பல காரணங்களால் உங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து நீங்கள் வெளிப்படையாக பேச தயக்கம் இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் சொல்வதை கேட்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அன்று எங்களுக்கு தீர்ப்பு சொல்ல யாருமில்லை.” என பேசினார்.

Kushboo’s description of sexual abuse by her father when she was 8 years old

சாதாரணமா வந்துட்டு போற ஹீரோயின் இல்ல சித்தி.; ஆச்சரியத்தில் ஆர்யா

சாதாரணமா வந்துட்டு போற ஹீரோயின் இல்ல சித்தி.; ஆச்சரியத்தில் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்யா – சித்தி இதானி இணைந்து நடித்துள்ள படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.

முத்தையா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஜூன் 2ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக.குழுவினர்.

இந்த சந்திப்பில் நடிகர் ஆர்யா பேசியதாவது…

“பயங்கரமான சிட்டி சப்ஜெக்டோட என்னிடம் வந்தாரு முத்தையா. இது வேண்டாம் ஒரு கிராமத்துப் படம் பண்ணனும் அதுவும் உங்க கூட பண்ணனும்னு சொன்னேன், அவர் (காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்) இந்தக் கதையோடு திரும்ப வந்தாரு.

அவரோட படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். எமோஷன் எப்பவும் சூப்பரா இருக்கும், சீன் சொல்லும் போதே அழுதுருவாரு. அவர் மாதிரி என்னால நடிக்க முடியுமானு பயமா இருக்கும்.

நிறைய நிறையச் சம்பவங்கள் கதைகள் சொல்லிக்கொண்டே இருப்பாரு. மிகத்திறமையான இயக்குநர். தயாரிப்பாளர்கள் அவ்வளவு உறுதுணையா இருந்தாங்க. ஜீ ஸ்டூடியோஸ் எப்பவும் எனக்கு பெரிய சப்போர்ட் தந்திருக்காங்க, இந்தப்படத்துக்காகவும் தந்திருக்காங்க அவங்களுக்கு நன்றி.

ஹீரோயின் என்ன விட அவங்களுக்கு டயலாக் அதிகம் அவங்களுக்கு நிறைய காட்சிகள் இருக்கு, சாதாரணமா வந்துட்டு போற ஹீரோயின் ரோல் இல்ல. சூப்பரா நடிச்சிருக்காங்க, ஒரு செம்மையான டீம் முத்தையா சார் வச்சிருக்காரு. டெக்னிகலா எல்லோருமே அட்டகாசமா பண்ணிருக்காங்க.

எல்லோரும் ஒரு குடும்பமா தான் இருந்தாங்க. என்னோட படங்கள்ல இந்தமாதிரி தோற்றம் பண்ணதே இல்ல உங்களுக்கு பிடிக்கும்னு நம்புகிறேன் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார் ஆர்யா.

இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார்.

‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் உலகமெங்கும் 2023 ஜீன் 2 ஆம் தேதி படம் வெளியாகிறது.

Sidhi character is not just usual heroine says Arya

எனது எல்லா படங்களும் உறவுமுறை பற்றி இருக்கும்.. ஆனா இது வேற மாதிரி – முத்தையா

எனது எல்லா படங்களும் உறவுமுறை பற்றி இருக்கும்.. ஆனா இது வேற மாதிரி – முத்தையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்யா – சித்தி இதானி இணைந்து நடித்துள்ள படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.

முத்தையா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஜூன் 2ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக.குழுவினர்.

இந்த சந்திப்பில் இயக்குநர் முத்தையா பேசியதாவது…

இது என்னுடைய 8வது படம். எனது அனைத்து படங்களும் ஒரு உறவைப் பற்றிய கதையாக இருக்கும்.

ஆனால் இந்த படத்தில் நன்றி உணர்வைப் பற்றிக் கூற முயற்சி செய்துள்ளேன். படத்தில் அனைத்து கதாபாத்திரமும் ஒரு உணர்வை மற்றும் உறவைச் சொல்லும், படத்தின் கதைக்களம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பது போல அமைந்துள்ளது , நிறைய நகரப் படங்கள் வருகிறது, இந்த கிராமத்து மண் படத்தையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும். இந்தப் படத்தில் அனைவரும் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர் மிகப்பெரிய ஆதரவு எனக்குக் கொடுத்தார், மிகவும் நன்றி, படம் மிகவும் அருமையாக வந்துள்ளது உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.

Kadhar Basha endra Muthuramalingam is different movie for me says Muthaiya

ஆர்யா பட சந்திப்பில் சிம்பு படம் பற்றி பேசிய நடிகை சித்தி இதானி

ஆர்யா பட சந்திப்பில் சிம்பு படம் பற்றி பேசிய நடிகை சித்தி இதானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்யா – சித்தி இதானி இணைந்து நடித்துள்ள படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.

முத்தையா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஜூன் 2ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக.குழுவினர்.

இந்த சந்திப்பில் நாயகி சித்தி இதானி பேசியதாவது…

என்னுடைய முதல் படம் வெந்து தணிந்தது காடு படத்திற்கு, நீங்கள் நல்ல ஆதரவு கொடுத்தீர்கள் அதே போல் இந்த படத்திற்கும் ஆதரவு தர வேண்டும், அனைவருக்கும் மிகவும் நன்றி மகிழ்ச்சியாக உள்ளது படத்தை தியேட்டரில் வந்து அனைவரும் பார்க்க வேண்டும். ஆர்யா மிகச்சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தார். இந்தப்படம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. நன்றி

நடிகர் நரேன் பேசியதாவது…

எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இது மாதிரி கதாப்பாத்திரம் நான் இதுவரை செய்ததில்லை. இது ஒரு புது அனுபவமாக இருந்தது..

இந்தப் படத்தில் எல்லோரும் உண்மையாகவே ஒரு குடும்பம் போலத் தான் இருந்தோம். படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றியடையும், உங்கள் ஆதரவை இந்த படத்திற்குத் தர வேண்டும். அனைவருக்கும் நன்றி.

நடிகை மீனா பேசியதாவது…

இயக்குநர் முத்தையா சாரை பற்றிப் பல நல்ல விஷயங்கள் உள்ளது. அதில் எதைச் சொல்வதென்று தெரியவில்லை. எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இந்தப்படத்தில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.

Sidhi idnani talks about VTK at KBEM Trailer Launch

‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படக்கதையை கேட்காமல் நடித்தேன் – விஜி

‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படக்கதையை கேட்காமல் நடித்தேன் – விஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்யா – சித்தி இதானி இணைந்து நடித்துள்ள படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.

முத்தையா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஜூன் 2ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக.குழுவினர்.

இந்த சந்திப்பில் நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது…

இந்தப் படத்தில் நான் கதை கேட்காமலே நடித்தேன். இயக்குநர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது, படத்தில் வரும் உறவுகள் போலத்தான் நாங்கள் ஷூட்டிங் சமயத்திலும் இருந்தோம். படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும் இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.

தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் பேசியதாவது…

இந்தப்படம் பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள். இந்தப்படத்தில் பணம் சம்பாதிக்கிறோமோ இல்லையோ உறவுகளைச் சம்பாதித்துள்ளோம். ஆர்யா மிக மிக நல்ல மனிதர் என்பதை இதில் உணர்ந்தோம்.

இந்தப்படத்தை இந்த வாய்ப்பை தந்த முத்தையாவிற்கு நன்றி. இந்தப்படம் ஒரு குடும்பத்தில் வாழ்ந்த மாதிரி இருக்கும். எப்போதும் எங்களுக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள் இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் R.K விஜயமுருகன் பேசியதாவது…

இயக்குநருடைய இரண்டு படங்களில் நான் நடிக்க வேண்டியதாக இருந்தது, ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அது நடக்கவில்லை. இந்தப்படத்தில் அது நிறைவேறிவிட்டது. இந்தப் படத்தில் நான் டப்பிங் பேச மிகவும் சிரமப்பட்டேன், சண்டைக் காட்சிகளில் ஆர்யா நிறைய உதவி செய்தார், ஆர்யாவிற்கு நன்றிகூறிக்கொள்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு ஆதரவு தாருங்கள்

நடிகர் பாலா ஹாசன் பேசியதாவது…

நான் இதுக்கு முன்னாடி அசுரன் விடுதலை படங்கள் பண்ணியிருக்கிறேன். சில படங்கள்ல வேலை பார்க்கும் போது தான் உறவு முறை சொல்லிக் கூப்பிட முடியும். இந்தப்படத்தில் அப்படித்தான் இருந்தது. வாய்ப்பு தந்த முத்தையா அண்ணனுக்கு, தயாரிப்பாளருக்கு நன்றி.

நடிகர் ரிஷி ரித்விக் பேசியதாவது…

முத்தையா சாருக்கு நன்றி இரண்டாவது முறையாக எனக்கு வாய்ப்பளித்துள்ளார், இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் அனைவரும் வில்லனாகத் தான் இருப்போம் ஆனால் அனைவரும் தனித்துவமாக நடித்துள்ளாம். உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி. ஆர்யா மிகச்சிறந்த மனிதர். அவருக்காகவே நிறையக் கஷ்டப்படலாம் என்று தோன்றியது.

கலை இயக்குநர் வீரமணி பேசியதாவது…

முத்தையா சார் கூட பன்ற 4வது படம், ஆர்யா சார் டிரெய்லர்ல பார்த்த மாதிரியே மரண மாஸா நடிச்சிருக்கார். ஆர்ட் டைரக்டரோட வேலையே தெரியலைனு சொன்னாங்க அது சந்தோஷம் ஆர்ட் டைரக்டர் வேல தெரியவே கூடாது.

ஆர்ட் அமைச்சிருக்குது தெரியக் கூடாதென்று முத்தையா சார் சொல்வார்.. அப்படித்தான் ஒவ்வொரு படத்திலும் வேலை செய்கிறோம். இந்தப்படம் அவர் கூட வேலை பார்த்தது சந்தோசம்” நன்றி.

I didn’t asked story line of KBEM says Viji Chadrasekar

More Articles
Follows