சுதந்திர தினத்தில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’..?

Soorarai Pottru release targets on 15th August 2020 நடிகர் சூர்யா தயாரித்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’.

சுதா கொங்கரா இயக்கியுள்ள இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

அசுரன் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜீன் அல்லது ஜீலைக்குள் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிடும் என்றும் அதற்குள் தியேட்டர்கள் திறக்கப்பட்டு நிலைமை சீராகும் என்ற நம்பிக்கையிலும் சூரரைப்போற்று படத்தை ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Soorarai Pottru release targets on 15th August 2020

Overall Rating : Not available

Related News

தீபாவளி, பொங்கலை போன்று கோடை விடுமுறையும்…
...Read More
சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் சுதா கொங்கரா…
...Read More
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து…
...Read More

Latest Post