மீண்டும் பிசாசு 2 கூட்டணி.; எஸ்ஜே. சூர்யாவை இயக்கும் மிஷ்கின்

மீண்டும் பிசாசு 2 கூட்டணி.; எஸ்ஜே. சூர்யாவை இயக்கும் மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மிஷ்கின்.

அவ்வப்போது படங்களில் நடித்தும் சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

தற்போது ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின்.

இப்பட இறுதிக்கட்ட பணிகளில் மிஷ்கின் கவனம் செலுத்தி வரும் நிலையில் அவரின் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

இதில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க நடிகர் விதார்த் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளராம்.

பிசாசு 2 படத்தை தயாரித்து வரும் முருகானந்தமே இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

எனவே விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

SJ Suryah’s next with Director Mysskin

JUST IN ஜெயலலிதாவின் முதல் ஹீரோ.. ரஜினியின் முதல் வில்லன்.. நடிகர் ஸ்ரீகாந்த் மரணம்.: ரஜினி இரங்கல்

JUST IN ஜெயலலிதாவின் முதல் ஹீரோ.. ரஜினியின் முதல் வில்லன்.. நடிகர் ஸ்ரீகாந்த் மரணம்.: ரஜினி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்.

1965-ல் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். இதில் தான் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நாயகியாக அறிமுகமானார்.

தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரீகாந்துக்கு தற்போது வயது 82.

ஆரம்பகாலங்களில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த் ‘பைரவி’ என்ற படத்தில் தான் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ஸ்ரீகாந்த்.

மேலும் ரஜினியுடன் சதுரங்கம் & தம்பிக்கு எந்த ஊரு படங்களிலும் நடித்துள்ளார்.

எம்ஜிஆர் உடன் இவர் நடிக்கவில்லை. சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

200 படங்களில் நடித்த இவர் 50 படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சற்றுமுன் தன் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில்…

“என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்…”

என பதிவிட்டுள்ளார்.

Veteran Actor Srikanth passed away at 83.

தமிழக உள்ளாட்சி தேர்தல் ஹைலைட்ஸ்..; பாஜக வேட்பாளருக்கே ஒரே ஓட்டு.; விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி

தமிழக உள்ளாட்சி தேர்தல் ஹைலைட்ஸ்..; பாஜக வேட்பாளருக்கே ஒரே ஓட்டு.; விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வருகிறது.

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சி 9-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் அருள்ராஜ், அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், பாஜக சார்பில் கார்த்திக், தேமுதிக சார்பில் ரவிக்குமார் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அங்கு மொத்தம் 1,551 வாக்குகள் உள்ள நிலையில், தேர்தலில் 913 வாக்குகள் மட்டுமே பதிவாகியது.

திமுக வேட்பாளர் அருள்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் 1 வாக்கையும், தேமுதிக ரவிக்குமார் 2 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கார்த்திக் மாவட்ட பாஜக இளைஞரணி துணைத் தலைவராக பதவி வைக்கிறார்.

“கார்த்திக் வீட்டில் அவர் உள்பட அவர் குடும்பத்தில் 6 பேர் உள்ளனர். அவரது குடும்பத்தினர் வாக்களித்திருந்தாலே இதை விட அதிகம் வாக்கு வாங்கியிருக்க முடியும்.” என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியில் இரண்டாம் வார்டு உறுப்பினர் விஜய் மக்கள் மன்றம் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் இதே மாமண்டூர் பகுதியில் நான்காம் வார்டு உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்டவரும் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த பல வருடங்களாக விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் ரசிகர்கள் செய்து வருகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேட்சையாக போட்டியிட்டவர்களில் 49 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளதாக தகவல்.

TN rural Local body Election results 2021

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்ட்டா..; நியூ இயரில் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்ட்டா..; நியூ இயரில் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2021 ஆம் ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை குவித்திருக்கும் படம் “வலிமை”.

அஜித் நடித்துள்ள இந்த படத்தினை தயாரிப்பாளர் போனி கபூர் (BayView Projects) மற்றும் Zee Studios இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் அஜித்துடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும் யோகி பாபு உடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் H. வினோத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்துள்ளார். அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பாராயன் அமைத்துள்ளார்.

கே.கதிர் கலை இயக்கம் செய்ய, அனு வர்தன் இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும், பி.ஜெயராஜ் படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தை அடுத்தாண்டு 2022 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு படக்குழு அறிவித்தனர்.

இந்த நிலையில் 2022 புத்தாண்டு பிறக்கும் தினத்தில் வலிமை டீசர்/ட்ரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

வலிமை படம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரட்டும் என ரசிகர்களும் காத்திருக்க தொடங்கி விட்டனர்.

Special New year treat for Thala fans

தீபாவளி முதல் தியேட்டர்களில் 100% சீட் அனுமதி.; ‘அண்ணாத்த’ முதல் ‘எனிமி’ ரசிகர்கள் வரை ஹாஃப்பி

தீபாவளி முதல் தியேட்டர்களில் 100% சீட் அனுமதி.; ‘அண்ணாத்த’ முதல் ‘எனிமி’ ரசிகர்கள் வரை ஹாஃப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா தொற்று முதல் அலையில் 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

அதன் பின்னர் படிப்படியாக 50% சீட்… 100% சீட் என உயர்த்தப்பட்டன.

தற்போது கொரோனா 2வது அலைக்கு பிறகு தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தியேட்டர்கள் ஆகஸ்ட்டில் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

அப்போது 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த நவம்பர் மாதம் தீபாவளி முதல் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு ரஜினியின் ‘அண்ணாத்த’ & சிம்புவின் ‘மாநாடு’ & அருண்விஜய்யின் ‘வா டீல்’ & ஆர்யா – விஷாலின் ‘எனிமி’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி முதல் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது உறுதியாகும் பட்சத்தில் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.

மேலும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகினரும் மிகவும் மகிழ்வார்கள் என நம்பலாம்..

Will TN govt approve 100% occupancy in theatre?

‘அந்நியன்’ விக்ரம் ஸ்டைலில் அசத்தப் போகும் லட்சுமி மேனன்

‘அந்நியன்’ விக்ரம் ஸ்டைலில் அசத்தப் போகும் லட்சுமி மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை லட்சுமி மேனன் இதுவரை ஒரு வணிகரீதியிலான கதாநாயகியாகப் படங்களில் வலம் வந்தவர். இப்போது புதிய பாத்திரங்களில் நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.

வித்தியாசமான சவாலான இதுவரை ஏற்றிராத ,யாரும் கற்பனை செய்ய முடியாத மாதிரியான கதாபாத்திரங்களுடன் கதை சொல்பவர்களுக்கு முன்னுரிமை தருகிறார் .அவ்வகையில் கதையும் பாத்திரமும் கவர்ந்து நடிக்கும் தமிழ்ப்படம்தான் ‘ஏஜிபி’.

இதில் ஸ்கீசஃப்ரீனியா (Schizophrenia) என்கிற மனச்சிக்கல் கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.அது என்ன ஸ்கிசஃப்ரீனியா ?

கற்பனை உலகையும் மெய்யான உலகையும் ஒன்றை மற்றொன்றாக மாறுபடக் கருதுதலும், பெரும்பாலும் விசித்திரமான, எதிர்பாராத முறைகளில் நடந்துகொள்ளுதலும் ஆகிய கடுமையான மனநோய் வகை இது.

எண்ணம், உணர்வு, செயல் ஆகியவை ஒன்றோடொன்று முரண்படுதலும் மாயத் தோற்றங்களுக்கு ஆட்படுதலுமான மனக் கோளாறு இது.

இதன்படி ஒரு பாத்திரம் நடந்ததை நடக்காததாகச் சொல்லும். நடக்காததை நடந்ததாகச் சொல்லும். கண்முன் இருப்பவர்களை இல்லாதவர்கள் போலவும் இல்லாதவர்களை இருப்பவர்கள் போலவும் பாவனை செய்து கொள்ளும்.

இது ஒரு கொடுமையான மனக்கோளாறாகும். இப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கிறார்.

ஒரே மனிதருக்குள் மூன்று கதாபாத்திரங்கள் உள்நுழைந்து அந்த மனிதரை ஆட்டிவைக்கும் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் தான் இந்தப் படம்.

இப்படி மூன்று பாத்திரங்கள் உள்நுழைந்து பாதிப்புக்குள்ளாகும் பாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கிறார்.

(ஷங்கர் இயக்கிய ‘அந்நியன்’ படத்தில் அம்பி ரெமோ அந்நியன் என 3 விதமான (உடல் உள்ளே நுழையும்) கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார் விக்ரம் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.)

இப்படத்தை இயக்குபவர் ரமேஷ் சுப்ரமணியன். இவர் ‘நாய்கள் ஜாக்கிரதை ‘ போன்ற படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜனிடம் சினிமா கற்றவர் .

மேலும் பல படங்களில் பணியாற்றியவர். இந்தக் கதையைக் கேட்டு லட்சுமிமேனன் பாராட்டியதுடன், இதற்கு முன்பு, தான் 13 கதைகள் கேட்டதாகவும், பலரும் தனக்குப் பிடிக்காத கதைகளைக் கூறியதாகவும் கூறியுள்ளவர், இக்கதை கேட்டு உடனே ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார். இயக்குநரை ஊக்கப்படுத்தியும் இருக்கிறார்.

‘AGP ‘என்றால் அஞ்சலி , கெளதம், பூஜா என்கிற மூன்று பிரதான பாத்திரங்களின் முதல் எழுத்தை வைத்துப் படத்தலைப்பு உருவாகியுள்ளது.

இந்த மூவர் தவிர, இன்னொரு முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரமும் உண்டு. இப்படி நான்கு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றிக் கதை செல்கிறது.

லட்சுமிமேனன் முகம் தெரிந்த நடிகை. பரதன் பிலிம்ஸ் ஆர்.வி.பரதன், சாய் ஜீவிதா என்கிற குழந்தை நட்சத்திரம், மோத்தீஸ்வர் ஆகிய நான்கு பேர் நடிக்கிறார்கள். மற்றும் பலர் தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு சந்தோஷ் பாண்டி. இவர் ‘நிஷா ‘ என்கிற வெப்சீரிஸ் ஒளிப்பதிவு செய்தவர். அதற்காக விருதுகளையும் பெற்றவர்.

இசை ஜெய்கிரிஷ் .இவர் பல குறும்படங்களுக்கு இசையமைத்தவர். கலை இயக்கம் சரவண அபிராமன், எடிட்டிங் -சந்திரகுமார் .ஜி.

கே.எஸ்.ஆர் ஸ்டுடியோ சார்பில் கே.எஸ்.ஆர்.இந்த படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் வெளியிட்டார்கள்.

நடிகர்கள் விஜய்சேதுபதி ,ஆர்யா, விமல், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள்
சக்தி சௌந்தர்ராஜன் இயக்குநர்
சிம்புதேவன் ஆகிய 6 பேர் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

ஒரு புதிய படத்திற்கு நம்பிக்கை தரும் வகையில் ஏழு நட்சத்திரங்களும் வெளியிட்டிருப்பது படக்குழுவினர் அனைவரையும் மகிழ்ச்சியாக்கி இருக்கிறது.

அது மட்டுமல்ல படம் பற்றிய எதிர்பார்ப்பையும் இப்போதே ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.

Lakshmi Menon’s new avatar for her next film

More Articles
Follows