தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மாஸ் ஹீரோ… மாஸ் ஹீரோக்களுக்கு வில்லன்… கெஸ்ட் ரோல்… இப்படி எந்த வேடம் என்றாலும் அதிலும் முத்திரை பதிப்பவர் விஜய்சேதுபதி.
தற்போது கூட காமெடியன் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்கிறார் மக்கள் செல்வன்.
இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க இளையராஜா இசையமைக்கிறார்.
இந்த நிலையில் முதன்முறையாக பேய் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.
தற்போது முருகானந்தம் தயாரிப்பில் ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின்.
நடிகை ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலரும் நடிக்க இவர்களுடன் முக்கிய வேடத்தில் இணைகிறாராம் விஜய்சேதுபதி.
இதற்கான படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடக்கிறது.
இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
Makkal Selvan Vijay Sethupathi in ghost film ?