விஜய்சேதுபதி – ஆண்ட்ரியா இணையும் ‘பிசாசு 2’ சூட்டிங் & ரிலீஸ் அப்டேட்

விஜய்சேதுபதி – ஆண்ட்ரியா இணையும் ‘பிசாசு 2’ சூட்டிங் & ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T. முருகானந்தம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்குகின்றார்.

கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

திண்டுக்கல்லில் 3 கட்டமாக நடைபெற்ற ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது.

படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து இயக்குனர் மிஷ்கின் அனைவரின் ஒத்துழைப்பிற்கு தனது அன்பை தெரிவித்து வாழ்த்துக்களை கூறினார்.

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

திரையரங்குகளில் ‘பிசாசு 2’ வெளியாகும் என்று கூறிய தயாரிப்பு தரப்பு விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.

Pisaasu 2 movie release update is here

நடிகர்கள் ரமணா & நந்தா தயாரிப்பில் விஷால்..; மீண்டும் இணையும் பிரபல நடிகை

நடிகர்கள் ரமணா & நந்தா தயாரிப்பில் விஷால்..; மீண்டும் இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் தனது அடுத்த புதிய படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார்.

பெயரிடப்படாத இதற்கு தற்காலிக பெயராக #விஷால்32 என்று வைத்துள்ளார்கள்.

நடிகர்களில் நெருங்கிய நண்பர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ராணா புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த நிறுவனம் தான் #விஷால்32 படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே, சன் டிவியில் ஹிட் அடித்த நிகழ்ச்சியான, விஷால் பங்கு பெற்ற “சன் நாம் ஒருவர்” நிகழ்ச்சியை இந்த ராணா புரொடக்‌ஷன்ஸ் தான் தயாரித்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து தனது நண்பர்கள் ரமணா, நந்தா தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கிறார் விஷால்.

இதன் படபிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

#சமர் படத்தில் விஷால் திரிஷாவுடன் இணைந்து நடித்த சுனைனா, முதன் முறையாக விஷாலுடன் தனி ஹீரோயினாக ஜோடி சேருகிறார். சுனைனா படங்களில் இது முக்கிய படமாக இருக்கும்.

ஒரு ‘பொருள்’ – #விஷால்32 படத்தின் கதையையும் டைட்டிலையும் தீர்மானிக்கும். விரைவில் டைட்டில் வெளியாகும் போது அந்த ‘பொருள்’ என்னவென்று தெரிந்துவிடும்.

சமீபத்தில் வெளியான பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய A. வினோத்குமர் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே கதை, திரைக்கதை எழுதுகிறார்.
வசனம்: A.வினோத்குமார்/பொன்பார்த்திபன்.
சாம் CS இப்படத்திற்கு இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.

Vishal to romance actress Sunaina for his next

இம்சை இன்னும் தீரல..; நாய் சேகருக்காக மோதும் காமெடியன்கள் வடிவேலு – சதீஷ்

இம்சை இன்னும் தீரல..; நாய் சேகருக்காக மோதும் காமெடியன்கள் வடிவேலு – சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு வழியாக தனக்கு போடப்பட்ட ரெட் கார்டு பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்த்து வைகைப் புயல் வடிவேலு விரைவில் திரையை கடக்கவிருக்கிறார்.

விரைவில் ‘நாய் சேகர்’ மற்றும் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ ஆகிய படங்களில் நாயகனாக நடிக்கவுள்ளார் வடிவேலு.

இந்த நிலையில் அடுத்து ஒரு பிரச்சினை வடிவேலுக்காக உருவெடுத்துள்ளது.

இவர் நடிக்கவுள்ள ‘நாய் சேகர்’ படத்தின் தலைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்க உள்ள படத்தில் காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ பவித்ரா நடித்து வருகிறார்.

அந்தப் படத்திற்கும் நாய் சேகர் என்று தான் டைட்டில் வைத்துள்ளனர். இதுதான் இப்போ பிரச்சினை ஆகியுள்ளது.

அண்மையில் அளித்த பேட்டியில்… “தன்னுடைய அடுத்த படம் நாய்சேகர் என்று வடிவேலு கூறியதால் இந்த டைட்டில் பிரச்சினை வெளியே தெரிய வந்துள்ளது.

எனவே தற்போது ‘நாய் சேகர்’ என்ற தலைப்பை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என கேட்டிருக்கிறாராம் வடிவேலு.

ஆனால் சதீஷ் படக்குழு மறுத்துவிட்டதாம். எனவே இரு தரப்பிலும் பஞ்சாயத்து நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Vadivelu and Sathish joins for a new movie

மிஸ்டர் உத்தமனாக மாறிய மனோபாலா..; நயன்தாரா தம்பியுடன் கூட்டணி

மிஸ்டர் உத்தமனாக மாறிய மனோபாலா..; நயன்தாரா தம்பியுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த ’ஊர்காவலன்’, விஜயகாந்த் நடித்த சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கருப்பு நிலா உள்பட சுமார் 20க்கும் மேலான திரைப்படங்களை இயக்கியவர் மனோபாலா.

மேலும் இவர் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

’சதுரங்க வேட்டை’ ’பாம்பு சட்டை’ உள்ளிட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

தற்போது மனோ பாலா முதல் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடித்து இருக்கிறார்.

‘மிஸ்டர் உத்தமன்’ என்ற இந்த வெப் தொடரை நிஷாந்த் லோகநாதன் இயக்கி இருக்கிறார்.

இதில் முதன்மை கதாபாத்திரத்தில் சச்சின் நாச்சியப்பன் நடிக்கிறார்.

இவர் நயன்தாராவுக்கு தம்பியாக நெற்றிக்கண் படத்தில் நடித்திருந்தார். யூடியூப், விளம்பர படங்களில் நடித்த பிரணிகா தக்ஷு இதில் நாயகியாக நடிக்கிறார்.

மிஸ்டர் உத்தமன் வெப் தொடர் காதல், காமெடி, பேண்டஷி கலந்து உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த வெப் தொடர் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் ‘ஸ்டே டியூன்’ என்ற யூடியூப்பில் வெளியாக இருக்கிறது.

Staytuned launches a new Web Series named Mr Uthaman by Manobala

Staytuned youtube channel is proudly announcing a new launch of web series named Mr Uthaman directed by Nizhanth Loganathan and a fame actor Manobala played an important role. The web series is going to be launched on September 3 2021, Friday. Actor Sacchin Nachyappan played the lead role, Saccin Nachiyappan has played an important role in Netrikann as Actress Nayanthara’s brother.

Female lead role is played by Pranika Dhakshu who has acted in many youtube series, advertisements and also Vijay TV artist.

Mr Uthaman is a fantasy love comedy genre and it’s the first youtube web series for Actor Manobala which is expected to be a huge success.

Staytuned youtube channel has released two web series namely Kadhal Café and Sagiye. For the first time Staytuned youtube channel proudly works with the Comedy Legend Manobala which is expected to have a huge response.

Staytuned launches a new Web Series named Mr Uthaman by Manobala

ஆரம்பிக்கலாமா.. பிக்பாஸ் 5 புரோமோ வெளியானது.; போட்டியாளர்கள் இவர்கள் தானா.?

ஆரம்பிக்கலாமா.. பிக்பாஸ் 5 புரோமோ வெளியானது.; போட்டியாளர்கள் இவர்கள் தானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவி-யில் ஒளிப்பரப்காகி வரும் பிக்பாஸ் சீசன்களை கமல் தொகுத்து வழங்கி சிறப்பாக நடத்தி வருகிறார்.

கமல் இல்லை என்றால் இந்த நிகழ்ச்சி தமிழில் இப்படியொரு வரவேற்பை நிச்சயம் பெற்றிருக்காது. எனவே பிக்பாஸ் 5 சீசன்னையும் கமலே தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்த நிகழ்ச்சித் தொடருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இதில் பங்கேற்றதால் தான் நடிகைகள் ஓவியா, லாஸ்லியோ, ஷிவானி, நடிகர்கள் பாலாஜி, ஆரி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் படு பிரபலமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கு காரணமாக அக்டோபர் மாதம் தான் பிக்பாஸ் 4 தொடங்கியது. அக்டோபர் 4ல் தொடங்கி 2021 ஜனவரி 17ம் தேதி வரை நடந்தது.

இந்தாண்டும் கொரோனா தொற்று அச்சத்தால் பிக்பாஸ் சீசன் 5 தொடங்குவதில் தாமதம் ஆகிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் 5 சீசனுக்கான வீடு சென்னையில் உள்ள இ.வி.பி. படப்பிடிப்பு தளத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து, சுனிதா கோகாய், கனி திரு உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

தற்போது பிக்பாஸ் புரோமா வெளியாகியுள்ளது. அதில் கமல் ஆரம்பிக்கலாமா? என கேட்கிறார்.

ஆரம்பிக்கலாமா? ? #BiggBossTamil Season 5 | விரைவில்.. @ikamalhaasan #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision

Kamal Haasan’s Bigg Boss promo 5 Tamil revealed

‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் கைது.; அவருக்கே ஷாக்கிங் நியூஸ் கொடுத்த ரசிகர்

‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் கைது.; அவருக்கே ஷாக்கிங் நியூஸ் கொடுத்த ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குக் வித் கோமாளி’ என்ற டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பலரில் ஒருவர் அஸ்வின் குமார்.

இதனையடுத்து இவருக்கும் சினிமா வாய்ப்புக்கள் வரத் தொடங்கிய நிலையில் சில படங்களில் ஹீரோவாகிவிட்டார்.

புதுமுகம் ஹரிஹரன் இயக்கத்தில் ‘என்ன சொல்லப் போகிறாய் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவருடன் அந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழும் நடிக்கிறார்.

இவர்கள் இணையும் படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் “அஸ்வின் குமார் கைது என பிரேக்கிங் நியூஸ் கொடுத்து அஸ்வினையே ஒரு ரசிகர் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்.

அதில்… இளம் பெண்களின் மனதை திருடியதற்காக நடிகர் அஸ்வின் குமார் கைது என ஒரு போஸ்டரை டிசைன் செய்து கலாய்த்துள்ளார்.

அந்த போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் (இன்ஸ்டா ஸ்டோரியில்) வெளியிட்டிருக்கிறார் நடிகர் அஸ்வின்.

Shocking : Cooku with comali Ashwin arrested

More Articles
Follows