ஆண்ட்ரியா & பூர்ணா இணையும் ‘பிசாசு 2’ படத்திற்காக மெய்சிலிர்க்க பாடிய சித் ஶ்ரீராம்

ஆண்ட்ரியா & பூர்ணா இணையும் ‘பிசாசு 2’ படத்திற்காக மெய்சிலிர்க்க பாடிய சித் ஶ்ரீராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிசாசு 2ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’

நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்காக பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலை பாடியுள்ளார்.

இப்பாடலின் வரிகளும் மெட்டும் மிகவும் பிடித்துப் போகவே இப்பாடலை பாட அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து பாடி கொடுத்துள்ளார் பாடகர் சித் ஶ்ரீராம்.

ஏற்கனவே ‘பிசாசு 2’ படத்திற்காக சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா ஒரு பாடலும், பாடகி ஶ்ரீநிதி ஒரு பாடலும் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பு – T.முருகானந்தம் (ராக்போர்ட் என்டர்டைன்மென்ட்)
எழுத்து இயக்கம் – மிஷ்கின்
இசை – கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு – சிவா சாந்தகுமார்
க்ரியேடிவ் புரொடுயுசர் – K.B.ஶ்ரீராம்
லைன் புரொடுயுசர் – L.V. ஶ்ரீகாந்த் லக்‌ஷ்மணன்
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – கண்ணதாசன்

Sid Sri Ram croons for Mysskin’s Pisaasu 2

மூன்று மொழிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’

மூன்று மொழிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Driver Jamunaஜனவரி 10 ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் அடுத்து நடிக்கும் படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ‘வத்திக்குச்சி’ பட இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ளார்.

இப்படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக, பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளருமான எஸ்.பி.செளத்ரி தயாரிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு, ‘டிரைவர் ஜமுனா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார்.

படத்துக்கு இசை ஜிப்ரான்.

கிரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

நடுத்தர குடும்பத்து பெண் கால் டாக்ஸி டிரைவரை, மையமாக கொண்ட கிரைம் திரில்லர் கதை என்பதால் கதையைக் கேட்டதுமே படத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டாராம் இந்த ‘டிரைவர் ஜமுனா’ ஐஸ்வர்யா.

Aishwarya Rajesh team up with Vathikuchi director for #DriverJamuna

தவறி விழுந்த மொபைல்..; பிடிக்க முயன்று கிணற்றுக்குள் விழுந்த நமீதா.!

தவறி விழுந்த மொபைல்..; பிடிக்க முயன்று கிணற்றுக்குள் விழுந்த நமீதா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Namithaபிரபல நடிகை நமீதா கிணற்றுக்குள் தவறி விழுந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நமீதா முதன் முறையாக தயாரிக்கும் “பெளவ் வெளவ்” படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை தயாரிப்பதோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் நமீதா.

படப்பிடிப்பு காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகில் நடந்து கொண்டிருந்த போது, நமீதாவின் மொபைல் தவறி கிணற்றுக்குள் விழுந்தது.

கிணற்றுக்குள் மொபைல் விழுவதைக் கண்டு பதட்டத்தில் அதைப் பிடிக்க முயற்சி செய்த நமீதாவும் கிணற்றுக்குள் விழுந்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் பதறிய போது, “கட் கட் சூப்பர்” என கை தட்டினர். இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி & மேத்யூ ஸ்கேரியா.

இந்த செய்தியை உண்மை என்று நம்பிய மக்கள் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டனர்.

நமீதாஸ் புரொடக்சன்ஸ் மற்றும் எஸ் நாத் பிக்சர்ஸ் தயாரிப்பில் வேகமாக வளர்ந்து வரும் “பெளவ் வெளவ்” படத்தின் வசனம் மற்றும் பாடல்களை முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார்.

கிருஷ்ணா பி.ஏஸ். ஒளிப்பதிவு செய்கிறார். ரெஜிமோன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை அனில் கும்பளா செய்திருக்கிறார்.

எஸ் நாத் ஃபிலிம்ஸ் சுபாஷ் மற்றும் நமீதாஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் பெளவ் வெளவ் படத்தை ஆர் எல் ரவி – மேத்யூ ஸ்கேரியா ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கிறது.

இயக்கம் : ஆர்.எல்.ரவி & மேத்யூ ஸ்கேரியா

ஒளிப்பதிவு: கிருஷ்ணா பி.எஸ்
இசை: ரெஜிமோன்

வசனம் & பாடல்கள்: முருகன் மந்திரம்

நிர்வாகத் தயாரிப்பு: சுரேஷ் புன்னசேரில்.

கலை இயக்கம் : அனில் கும்பளா.

சண்டை வடிவமைப்பு : ஃபையர் கார்த்தி.

படத்தொகுப்பு: அனந்து எஸ் விஜய்.

தயாரிப்பு: நமீதாஸ் புரொடக்சன்ஸ் & எஸ் நாத் ஃபிலிம்ஸ்.

மக்கள் தொடர்பு: இரா. குமரேசன்.

Actress Namitha fell into a well ? People panic !

மலையாளிகள் மத்தியிலும் 50% மாஸ் காட்டப் போகும் ‘மாஸ்டர்’

மலையாளிகள் மத்தியிலும் 50% மாஸ் காட்டப் போகும் ‘மாஸ்டர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master in Keralaகொரோனா வைரஸ் ஊரடங்கால் இந்தியா முழுவதும் சினிமா தியேட்டர்கள் 2020 மார்ச் முதல் மூடப்பட்டது.

பின்னர் ஊரடங்கில் தளர்வுகளை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் 2020 நவம்பர் 10 முதல் தியேட்டர்ஸ் திறக்கப்பட்டன.

இதனால் கேரளாவிலும் தியேட்டர்களை திறக்க வேண்டும் என்றும் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து 2021 ஜனவரி கடந்த 5ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க கேரள அரசு அனுமதியளித்தது.

ஆனாலும் இதுவரை கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

ஏற்கனவே 10 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே மின் கட்டணத்தில் சலுகை, கேளிக்கை வரி ரத்து உள்படப் பல சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் மலையாள சினிமா துறையைச் சேர்ந்த சங்கத்தினருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கேரளாவில் நாளை ஜனவரி 12 முதல் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளது.

இரவு 10 மணி காட்சிகள் ரத்து. மேலும் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்கலாம் என கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இந்த நிலையில் கேரளாவிலும் 200க்கும் மேற்ப்பட்ட தியேட்டர்களில் விஜய் & விஜய்சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ படம் ரிலீசாகவுள்ளது.

கேரளாவில் முதல்நாள் முதல் காட்சிக்கு ரூ 200 வரை சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தை போலவே கேரளாவிலும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

Master Kerala Release Confirm From 13th Jan

வரி இல்லை.. 50% மின் கட்டணம் ரத்து.. ; கேரளா சினிமா தியேட்டர்களுக்கு அதிரடி ஆஃபர்..!

வரி இல்லை.. 50% மின் கட்டணம் ரத்து.. ; கேரளா சினிமா தியேட்டர்களுக்கு அதிரடி ஆஃபர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kerala theatreகொரோனா வைரஸ் ஊரடங்கால் இந்தியா முழுவதும் சினிமா தியேட்டர்கள் 2020 மார்ச் முதல் மூடப்பட்டது.

பின்னர் ஊரடங்கில் தளர்வுகளை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் 2020 நவம்பர் 10 முதல் தியேட்டர்ஸ் திறக்கப்பட்டன.

இதனால் கேரளாவிலும் தியேட்டர்களை திறக்க வேண்டும் என்றும் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து 2021 ஜனவரி கடந்த 5ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க கேரள அரசு அனுமதியளித்தது.

ஆனாலும் இதுவரை கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

ஏற்கனவே 10 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே மின் கட்டணத்தில் சலுகை, கேளிக்கை வரி ரத்து உள்படப் பல சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் மலையாள சினிமா துறையைச் சேர்ந்த சங்கத்தினருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கேரளாவில் இந்த வாரம் முதல் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளது.

அதன்படி… கேரளா அரசு சினிமாவிற்கான சலுகைகளை அறிவித்துள்ளது.

1. வருகிற மார்ச் 31வரை Local Body Entertainment Tax வசூலிக்கப்பட மாட்டாது.

2. சினிமா தியேட்டர்களுக்கு கடந்த 10 மாதத்திற்கான மின் கட்டணம் 50% தள்ளுபடி என அறிவித்துள்ளது.

3. சொத்துவரி செலுத்த கால அவகாசம் நீடிப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kerala govt offers to cinema halls

BREAKING அரசியலுக்கு வர முடியல.. வேதனைப்படுத்தாதீர்கள்..; வளர்க தமிழ்நாடு – ரஜினி

BREAKING அரசியலுக்கு வர முடியல.. வேதனைப்படுத்தாதீர்கள்..; வளர்க தமிழ்நாடு – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகடந்த 25 வருடங்களாக ரஜினியை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்து வருகின்றனர்.

கடந்தாண்டு டிசம்பர் 29ஆம் தேதி… இப்போ இல்ல… எப்பவுமே அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவித்துவிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

அந்த அறிவிப்பு்வெளியான அன்றே, ரஜினி வீட்டு முன்பு ரசிகர்கள் ஒன்றுதிரண்டு கோஷங்களை எழுப்பி ரஜினியை அரசியலுக்கு அழைத்தனர்.

மேலும் தமிழகமெங்கும் பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

நேற்று ஜனவரி 10-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டத்துக்கு ரஜினி ரசிகர்கள் அழைப்பு விடுத்தனர்.

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் அறிக்கை வெளியிட்டனர்..

ஆனாலும் அவர்களின் எதிர்ப்பை மீறி 12,000க்கும் மேற்ப்பட்ட ரஜினி ரசிகர்கள் வள்ளுவர் கோட்டத்தில் கூடினர்.

வா தலைவா வா… என அரசியலுக்கு ரஜினியை அழைத்து கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில் சற்றுமுன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார் ரஜினி.

அதில்…

“நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மன்ற நிர்வாகிகளும், மன்றப்பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினர்.

கட்டுப்பாடுடன், கண்ணியத்துடன் நடந்த போராட்டத்திற்கு பாராட்டுகள். ஆனால் தலைமையின் உத்தரவை மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது.

தலைமையின் உத்தரவை மதித்து போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு நன்றி. நான் என் முடிவை கூறி விட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

வாழ்க தமிழக மக்கள்…
வளர்க தமிழ்நாடு…
ஜெய்ஹிந்த்”

” என குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

‘Rajinikanth latest statement on joining politics

More Articles
Follows