தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில், ஸ்நேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலைக்காரன்.
இப்படத்தின் சூட்டிங் முடிந்து தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மலையாள நடிகரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான பகத் பாசில், தன் சொந்த குரலில் தமிழில் டப்பிங் பேசி வருகிறாராம்.
இப்படத்தின் ஸ்டில்கள் படக்குழுவினரால் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சிவகார்த்திகேயன் ஒரு குப்பத்து மக்களுடன் அமர்ந்துள்ளது போல உள்ளது.
மேலும் மற்றொரு படத்தில் நயன்தாராவை வண்டியில் வைத்து அழைத்து செல்வது போல் உள்ளது.
அந்த பைக்கில் காசி குப்பம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதன் கூடவே, பிரகாஷ்ராஜின் போட்டோ ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது.