சிவகார்த்திகேயனின் புதுப்பட பூஜை; படக்குழுவை மிஞ்சிய ரசிகர்கள்

unnamed (1)வேலைக்காரன் படத்தை முடித்துவிட்டு இன்றுமுதல் தன் 12வது படத்தில் நடிக்கத் துவங்குகிறார் சிவகார்த்திகேயன் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

பொன்ராம் இயக்கவுள்ள இப்படத்தில் சமந்தா, சூரி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் சிம்ரன் மற்றும் நெப்போலியன் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.

இமான் இசையமைக்கும் இப்படத்தை தனது 4வது படைப்பாக்க உருவாக்குகிறது 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம்.

படத்தின் ஒளிப்பதிவை திரு.பாலசுப்ரமணியமும், படத்தொகுப்பை திரு.விவேக் ஹர்ஷனும், கலை இயக்கத்தை திரு.முத்துராஜ் அவர்களும் கையாள உள்ளனர் .

தென்காசியில் ஒரு மாதத்திற்கு இதன் சூட்டிங் நடைபெற உள்ளது.

இதற்கான பூஜை இன்று போடப்பட்டது.

இதே வேளையில் இப்படம் வெற்றி பெற, சிவகங்கை மாவட்ட சிவகார்த்திகேயன் தலைமை மன்றம் சார்பாக கோயிலில் பூஜையும் போடப்பட்டது.

சிவகார்த்திகேயன் படக்குழுவினரையே இந்த ரசிகர்கள் மிஞ்சி விட்டார்களே…

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post