சர்தார் பாருங்க.. சந்தோஷமா இருங்க.; ‘பிரின்ஸ்’ சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

சர்தார் பாருங்க.. சந்தோஷமா இருங்க.; ‘பிரின்ஸ்’ சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனுதீப் இடத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள படம் ‘பிரின்ஸ்’.

இப்படத்தின் தமிழக வெளியீடு உரிமையை பிரபல விநியோகஸ்தர் அன்புச் செழியன் பெற்றிருக்கிறார்.

தமிழக முழுவதும் 650+ தியேட்டர்களில் இந்த படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் பிரஸ்மீட் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிது.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது…

“கடந்த 20 வருடங்களாக தீபாவளிக்கு நிறைய நடிகர்களின் படங்களை முதல் நாளிலே பார்த்து விடுவேன்.

இன்று என்னுடைய திரைப்படம் ‘பிரின்ஸ்’ தீபாவளிக்கு திரைக்கு வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமான என் ரசிகர்களுக்கும் என் சகோதர சகோதரிகளுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி.

இந்த படம் மிகவும் வித்தியாசமான படம் அல்ல. ஒரு இந்திய பையன் ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலிக்கிறார்.

அது குறித்த சம்பவமே இந்த படம். இந்த சம்பவத்திற்குள் நிறைய நகைச்சுவைகளை காட்சிகளை வைத்திருக்கிறார். அதை ட்ரைலரில் கூட பார்த்திருப்போம்.

‘பிரின்ஸ்’ படத்துடன் சர்தார் திரைப்படமும் தீபாவளிக்கு வருகிறது. இரு படங்களும் மாபெரும் வெற்றி பெற வேண்டும். சர்தார் பட குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

தீபாவளிக்கு வெடி வெடிக்கும் போது மிகவும் பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். பெற்றோர்களை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவோம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் நன்றி”

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan talks about Sardar and Prince

திரையுலகில் 32 ஆண்டுகளை பூர்த்தி செய்த நடிகர் விக்ரம் !…

திரையுலகில் 32 ஆண்டுகளை பூர்த்தி செய்த நடிகர் விக்ரம் !…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விக்ரம் கடந்த 1990ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வெளியான ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

கடந்த மாதம் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ வரை பல வெற்றி படங்களை கொடுத்து உள்ளார்.

விக்ரம் நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடகர் என பண்முகத்தன்மை கொண்டவர்.

இந்த நிலையில் திரையுலகில் 32 ஆண்டுகளை பூர்த்தி செய்தார் நடிகர் விக்ரம்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பயணத்திற்கு ரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விக்ரம்

Actor Vikram completed 32 years in the film industry

‘புஷ்பா 2’ பணிகள் முழு வீச்சில் உள்ளன: தயாரிப்பாளர்கள்

‘புஷ்பா 2’ பணிகள் முழு வீச்சில் உள்ளன: தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘புஷ்பா 2’ இன்னும் அதன் படப்பிடிப்பு தொடங்கவில்லை, ஆனால் அதன் முன் தயாரிப்பு பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன.

திங்களன்று, படத்தின் குழு ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளது, அதில் இயக்குனர் சுகுமார் பிரபல புகைப்படக் கலைஞர் அவினாஷ் கோவாரிகர் மற்றும் போஸ்டர் வடிவமைப்பாளர் ட்யூனி ஜான் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

‘புஷ்பா 2’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழுவிடம் கேட்டபோது இப்போது படப்பிடிப்பைத் தொடங்கப் போகிறோம். அடுத்த வருடம் (படம் வெளியாகும்) என்றனர்

தமிழகத்தில் 3 டிவி சேனல்கள் தொடங்கும் பாஜக.; ஓ இதான் திட்டமா.?

தமிழகத்தில் 3 டிவி சேனல்கள் தொடங்கும் பாஜக.; ஓ இதான் திட்டமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்பெல்லாம் ஒரே ஒரு டிவி சாட்டிலைட் சேனல் இருக்கும். அதில் நாம் அனைத்து தரப்பு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் தற்போது 200க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் தமிழகத்தில் உள்ளன. இவை இல்லாமல் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு சேனல் என்ற அளவில் பல சேனல்கள் உள்ளன.

உதாரணத்திற்கு… திமுகவுக்கு என்று சன் டிவி கலைஞர் டிவி முரசு டிவி என பல சேனல்கள் உள்ளன. அதிமுகவுக்கு ஜெயா டிவி ஜே டிவி சேனல் உள்ளன. தேமுதிக கட்சிக்கு கேப்டன் டிவி உள்ளது. விடுதலை சிறுத்தை கட்சிக்கு வெளிச்சம் டிவி, பாஜக கட்சிக்கு லோட்டஸ் டிவி, பாமக கட்சிக்கு மக்கள் தொலைக்காட்சி தமிழன் டிவி ஆகியவை உள்ளன.

இந்த நிலையில் வருகிற 2024 பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மட்டும் 3 சாட்டிலைட் டிவி சேனல்கள் தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இதில் ஒரு சேனல்.. சினிமா மற்றும் பொழுதுபோக்குக்கான சேனல்.

இரண்டாவது சேனல் முழுக்க முழுக்க பக்திக்கான சேனல் ஆன்மீக சேனல்.

மூன்றாவது சேனல் 24 மணி நேரமும் செய்திகளை ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளனர்.

எனவே விரைவில் இது குறித்த அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

‘டாக்டர் ஜி’ படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரகுல் ப்ரீத் சிங்

‘டாக்டர் ஜி’ படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரகுல் ப்ரீத் சிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அக்டோபர் 14 ஆம் தேதி வெளியிடப்பட்ட அவரது சமீபத்திய வெளியீடான ‘டாக்டர் ஜி’ பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றது.

மேலும் ராகுல் அனைத்து தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்களைப் பெற்றாலும், அவர் தனது வழியில் வரும் விமர்சனங்களால் மூழ்கிவிட்டார்.

ஒரு டாக்டராக ரகுலின் நேர்மையான சித்தரிப்பு பெரிதும் பாராட்டப்பட்டாலும், ஆயுஷ்மானுடன் அவர் முதல் முறையாக ஜோடி சேர்ந்ததும் பார்வையாளர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது!

சமூக ஊடகத்தில் ராகுல் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்,

மீண்டும் முதலேர்ந்தா.? ரஜினி அரசியலுக்கு வரலேன்னாலும் இதை செய்யனும்.; ரசிகர்கள் கோரிக்கை

மீண்டும் முதலேர்ந்தா.? ரஜினி அரசியலுக்கு வரலேன்னாலும் இதை செய்யனும்.; ரசிகர்கள் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990களில்.. ரஜினிகாந்த் நடித்த மன்னன் அண்ணாமலை பாட்ஷா படையப்பா முத்து பாபா உள்ளிட்ட பல படங்களில் அரசியல் வசனம் அதிகமாகவே அனல் தெறிக்கும்.

எனவேதான் ரஜினியை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்தனர். இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற பேச்சு எப்போதுமே ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இருந்து கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் அந்த பேச்சுக்கள் விஸ்வரூபம் எடுக்கவே 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31்தேதியில் “தான் அரசியலுக்கு வருவது உறுதி” என அறிவித்தார் ரஜினிகாந்த்.

அதற்காகவே தன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்களை ரஜினிகாந்த் மக்கள் மன்றமாக மாற்றினார்.

அதன் பின் இராண்டுகள் ஆகியும் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை.

அதன் பின்னர் கொரோனா லாக்டோன் என பல பிரச்சினைகள் உருவானது.

இதனால் திடீரென பின்வாங்கி.. “இனி நான் அரசியலுக்கு வர மாட்டேன்” என அதிரடியாக அறிவித்தார் ரஜினிகாந்த்.

மேலும் ரஜினிகாந்த் மக்கள் மன்றம் செயல்படாது. பழைய படியே ரஜினிகாந்த் ரசிகர் மன்றமாகவே அது செயல்படும் என அறிவித்தார்.

ரஜினியின் இந்த முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள் அவர் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என வற்புறுத்தி வந்தனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மேலும் பல வழிகளில் ரஜினியின் முடிவை மறு பரிசினை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். ஆனால் எதற்கும் சம்மதிக்கவில்லை ரஜினிகாந்த்.

ஒரு கட்டத்தில் உண்மையான ரஜினியின் ரசிகர்கள் அவரின் முடிவை அதனை ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் தற்போது ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

“நாங்கள் தீவிர ரஜினி ரசிகர்களாக 45 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். நற்பணிகளை செய்து வருகிறோம். தங்களுக்கு சுமார் 50 வயதாகிவிட்டது.

அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தமாட்டோம். ஆனால் ஏற்கனவே எங்களுக்கு அமைத்துக் கொடுத்த ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரை பயன்படுத்த மட்டும் அனுமதி தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

(கோரிக்கை வைத்தவர் திருச்சி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ராஜேந்திரன்)

ரசிகர்களின் கோரிக்கையை ரஜினி ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

More Articles
Follows