கார்த்தி & சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த ‘தீபாவளி’ சலுகை.; சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி

கார்த்தி & சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த ‘தீபாவளி’ சலுகை.; சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளி என்றாலே அந்த கொண்டாட்டத்திற்கு இந்தியர்களிடையே / தமிழர்களிடையே அளவே இருக்காது.

தீபாவளிக்கு பலகாரம் பட்டாசு புத்தாடை.. இத்துடன் புதிய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகியவையும் தமிழர்கள் மனதில் இடம் கொள்ளும்.

இந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளிக்கு கார்த்தி நடித்த சர்தார் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் ஆகிய இரண்டு படங்கள் அக்டோபர் 21ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் திரையரங்குகளில் 7 நாட்கள் (அக்டோபர் 21 முதல் 27 வரை) சிறப்பு காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

#DeepavaliMovieRelease #TNGovt

கமல்ஹாசனை முந்தி ரஜினிகாந்திடம் தோற்ற ‘பொன்னியின் செல்வன்’

கமல்ஹாசனை முந்தி ரஜினிகாந்திடம் தோற்ற ‘பொன்னியின் செல்வன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படம் கடந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி உலகமெங்கும் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது.

தற்போது வரை 3 வாரங்களை கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் ரூபாய் 450+ கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

விரைவில் இந்த படம் ரூ 500 கோடியை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் குறைந்த நாட்களில் ரூ 120 கோடியை இந்த படம் வசூலித்துள்ளது.

மேலும் கமல் தயாரித்து நடித்து அண்மையில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் ஒட்டு மொத்த வசூலை ‘பொன்னியின் செல்வன்’ முறியடித்துள்ளது.

ஆனால் உலகளவில் ரஜினி படம் சாதித்த சாதனையை முறியடிக்கவில்லை.

லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் உலக அளவில் ரூ. 765 கோடியை வசூலித்து முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி விருந்தாக அஸ்மிதா-வின் ‘A ஸ்டோரி’.; ஒரு நாளைக்கு 27 பைசா மட்டுமே

தீபாவளி விருந்தாக அஸ்மிதா-வின் ‘A ஸ்டோரி’.; ஒரு நாளைக்கு 27 பைசா மட்டுமே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிய திறமைகளுக்கு எப்போதும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுப்பதில் மூவிவுட் ஓடிடி முதன்மையில் இருப்பது சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. தெளிவு பாதையின் நீசத்தூரம், விண்வெளி பயணக்குறிப்புகள், த்வனி என பல புதிய கலைஞர்களின் படங்களை வெளியிட்டது.

தற்போது தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 அன்று பரணிகுமார் இயக்கத்தில் ‘காலேஜ் டேஸ்’ & பாபு தூயவன் இயக்கத்தில் நடிகை அஸ்மிதா நடிப்பில் ‘A ஸ்டோரி’ ஆகிய இரண்டு வெப் சீரிஸ்-களையும், ராமகிருஷ்ணன் இயக்கத்தில் புத்தம் புதிய ப்ளாக் காமெடி படமான ‘லொஜக் மொஜக் பஜக்’ எனும் திரைப்படத்தையும் வெளியிடுகிறது.

1. A story

பப்பி என்கிற ஒரு விலைமாதுவின் வாழ்க்கையை பற்றிய கதைதான் இந்த வெப் சீரீஸ். விலைமாதுவாகவே இருந்தாலும் அவளும் ஒரு பெண் தானே?. அவளுக்கென்று ஆசாபாசங்கள் இருக்காதா என்ன?. அவள் சந்திக்கும் வாடிக்கையாளர்கள், அவர்களின் உலகம் என விரிகிறது இந்த பத்து எபிசோட் வெப் சீரீஸ். இது ஒரு அடல்ட் வெப் சீரிஸ் அல்ல. அடல்டுகளின் உலகத்தைப் பற்றிய வெப் சீரீஸ்.

இந்த வெப் சீரீஸில் பிரபல நடிகை அஸ்மிதா கதாநாயகியாய் நடித்திருக்கிறார். மேலும் பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இயக்கம் பாபு தூயவன்.

2. College Days

எல்லா கல்லூரிகளிலும் ரெண்டு க்ரூப்புகள் இருக்கும். அதிலும் முக்கியமாய் இன்ஜினியரிங் கல்லூரிகளில் மெக்கானிக்கலுக்கும், எலக்ட்ரானிக்ஸுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.

அப்படியான பொருத்தம் தான் இந்த வெப் சீரீஸிலும், கலகலப்பான, துள்ளலான, இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை காமெடியாய் சொல்லும் வெப் சீரீஸ் தான் இந்த காலேஜ் டேஸ். இதில் பரணிக்குமார் எழுதி இயக்கி நடித்துள்ளார். இளைஞர்களை நிச்சயம் கவரும் இந்த வெப் சீரீஸ்.

3. Lojak Mojak Pajak

வடிவேலுவின் பிரபலமான வசனம். இந்த வசனம் எப்படி நம்மை மீறி சிரிப்பை வரவழைக்குமோ அது போலவே இந்த திரைப்படமும் நம்மை சிரிக்க வைக்காமல் விடாது.

இப்படம் ஒரு ப்ளாக் காமெடி. தங்கள் வாழ்க்கையை கெடுத்த முதலாளியின் பையனை கடத்த முயலும் மூன்று நண்பர்கள். அவர்கள் கடத்தினார்களா? இல்லையா? பின்பு என்ன நடந்தது என்பதுதான் கதை. ஒன்னரை மணி நேரம் நான் -ஸ்டாப் ப்ளாக் காமெடியை பார்க்க விரும்புகிறவர்கள் தவற விடக்கூடாத திரைப்படம். இப்படம் நேரிடையாய் நமது மூவிவுட் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

ஒரு நாளைக்கு 27 பைசா செலவில் அளவில்லா எண்டர்டெயின்மெண்டை பெற மூவிவுட் தளத்தை டவுன்லோட் செய்யுங்கள்.

மீண்டும் மலையாள சினிமா.: மம்மூட்டிக்கு ஜோடியாகும் ஜோதிகா.; சூர்யா வாழ்த்து.!

மீண்டும் மலையாள சினிமா.: மம்மூட்டிக்கு ஜோடியாகும் ஜோதிகா.; சூர்யா வாழ்த்து.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை ஜோதிகா. இவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் மட்டும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க உள்ளார் ஜோதிகா.

இந்த படத்தை மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியே தயாரித்து ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘காதல் – த கோர்’ என்ற பட ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

மம்முட்டி கம்பெனி இந்தப் படத்தை தயாரிக்க, ஜோ பேபி இப்படத்தை இயக்குகிறார்.

12 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மலையாளப் படங்களில் ஜோதிகா நடித்திருக்கிறார்.

இந்த பட ஃபர்ஸ்ட் லுக் குறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில்…

“இந்த பட அனைத்து நிகழ்வுகளையும் இயக்குநர் ஜோ பேபி மற்றும் குழுவினர் முதல் நாள் முதலே சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.

மம்முக்கா, ஜோதிகா ஆகியோருக்கு எனது வாழ்த்துகள், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜோ” என பதிவிட்டுள்ளார் சூர்யா.

காதல் - த கோர்

Mammootty and Jyothika starring Kathaal the Core Actor Suriya wishes

ஸ்டாலின் மகனை அடுத்து விக்ரம் மகனை இயக்கும் மாரி செல்வராஜ்

ஸ்டாலின் மகனை அடுத்து விக்ரம் மகனை இயக்கும் மாரி செல்வராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதிர் நடித்த ‘பரியேறும் பெருமாள்’, தனுஷ் நடித்த ‘கர்ணன்’ ஆகிய 2 வெற்றிப் படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ்.

தற்போது உதயநிதி் ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத்பாசில், வடிவேலு நடித்து வரும் ‘மாமன்னன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் மாரி.

இந்த படம் கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.

இந்த படம் ‘மாமன்னன்’ படத்திற்கு முன்பே முடிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Mari Selvaraj next with Dhruv Vikram

பிரபலங்களுக்காக ஹைதராபாத்தில் பிரத்யேகமாக திரையிடப்பட்ட ‘அம்மு’

பிரபலங்களுக்காக ஹைதராபாத்தில் பிரத்யேகமாக திரையிடப்பட்ட ‘அம்மு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ப்ரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படைப்பான ‘அம்மு’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து, இப்படத்தை பார்ப்பதற்காக சந்தாதாரர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி பிரைம் வீடியோவில் திரையிட திட்டமிடப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பாளர்கள் ஹைதராபாத்தில் பிரத்யேக திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த பிரிமியர் காட்சிக்கு ‘அம்மு’ படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலியில் அமைந்திருக்கும் ஏ எம் பி சினிமாஸ் எனும் திரையரங்க வளாகத்திற்குள் ப்ரைம் வீடியோ, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் திரைப்படமான ‘அம்மு’ திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் நடிகை நிஹாரிகா கொனிடேலா, தேவ கட்டா, சரத் மாரார், ராஜ் கந்துகுரி, சுவாதி ஆகியோருடன் பட குழுவினைச் சேர்ந்த நடிகர் நவீன் சந்திரா, இயக்குநரும், தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போல் எழும் ஒரு பெண்ணின் கதையை மையமாகக் கொண்ட ‘அம்மு’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவரது போலீஸ் கணவன் ரவி என்ற கதாபாத்திரத்தில் நவீன் சந்திரா நடித்திருக்கிறார்.

இந்த தம்பதியின் வாழ்வில் முதன்முறையாக ரவி, அம்முவை தாக்கிய போது, அவர் எதிர்பாராமல் நடைபெற்ற சம்பவம் என நினைத்தார். அதே தருணத்தில் திருமணம் பற்றிய தன்னுடைய கனவு தவிடு பொடியானதையும் உணர்ந்தார்.

அதன் பிறகு ரவி அடிப்பதும், தாக்குவதும் தொடர்கதை ஆனதால், இது துஷ்பிரயோகத்தின் முடிவில்லாத சுழற்சி என உணர்ந்து கொண்டார். அவரிடமிருந்து தப்ப வேண்டும் என்பதற்காக, இவளுக்கு நேர் எதிர் குணம் கொண்ட சிம்ஹா என்ற கூட்டாளியுடன் இணைந்து விடுதலை பெறுகிறார்.

சாருகேஷ் சேகர் எழுதி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கிறார்.

இதில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, நவீன் சந்திரா, சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். அம்மு திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் 19ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது.

அம்மு

Multi language movie Ammu special show

More Articles
Follows